Sunday, February 28

AR ரஹ்மான் மற்றும் பிலிம்பேர் 25



இது ரஹ்மான் விருது காலம் எனலாம் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் கிராமி விருது ,பத்ம பூசண் விருது ,ஸ்டார் ஸ்க்ரீன் விருது, ரேடியோ மிர்ச்சி மியூசிக் அவார்ட்ஸ் என்று அவரின் சாதனை மகுடத்தில் மற்றும் ஒரு சிறப்பு பிலிம்பேர் 55 ஆண்டு விருது பட்டியலில் அவர் தன் 25 விருதை வாங்கி அதிக விருது பெற்றவர் என்ற சிறப்பை பெறுகிறார் 

இந்தியாவில் வழங்க படும் சிறந்து விருது பிலிம்பேர் விருது எனலாம் கடந்து 55 ஆண்டுகளாக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது


        அதிலும்  தொடர்ச்சியாக நான்கு முறை இந்த விருதை அவர் பெறவது மேலும் ஒரு சிறப்பு  
2007 ரங் தே பசந்தி  ,
2008 குரு ,
2009 ஜானே து யா ஜானே நா,
2010 டெல்லி6 என்று அவரின் சாதனை தொடர்கிறது


          எப்படி இருந்தாலும் இந்த ஆண்டின் சிறந்த இசைக்கு ஒரு படம் ரெடி விண்ணை தாண்டி வருவாயா

 
         ரஹ்மான் முதல் இடம் இரண்டாம் இடம் பற்றி உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு அவர் சொன்ன பதில் தான் எனக்கு ஞாபகம் வருகிறது
அந்த பதில் தான் அவர் அவர் இத்தனை ஆண்டு ஆகியும் சீரான அவரின் வெற்றிக்கு காரணாமாக இருக்கலாம்
   அந்த பதில் இதோ
முதல் இடம் இரண்டாம் இடம் என்பதை எல்லாம் நான் நம்புவதில்லை என் வேலை எதுவோ அதை மட்டும் பார்த்து கொள்வேன்
  நாளையே நான் முதல் இடம் இல்லாமல் போனால் அந்த எண்ணமே என் வெற்றியை பாதிக்கும்
 எவ்வளவு சிறப்பான வார்த்தைகள்

 விருது நாயகன் ரஹ்மானுக்கு வாழ்துக்கள் 



இன்றைய பதிவின் சிறந்த ப்ளாக்


 தகவல் தொழில்நுட்ப வலைப்பதிவுகளில் மிக சிறப்பான வலைப்பதிவு
வன்னி தகவல் தொழில்நுட்பம் அழகிய வடிவமைப்பு மற்றும் சிறப்பான தகவல்கள் என கணினி சார்ந்த தகவல்களுக்கு சிறந்த வலை தளம் ஒரு



வன்னி தகவல் தொழில்நுட்பம் படிக்க இதை அழுத்தவும்


                                                thank u for all

 

Wednesday, February 24

சிவாஜி கணேசன் டெண்டுல்கர் பி ஹெச் அப்துல் ஹமீது

சிவாஜி கணேசன் என்று சொன்னால் அவரின் நடிப்பு தான் முதலில் வரும் நடிப்பிற்கு ஒரு தனி இலக்கணம் படைத்த சிவாஜி கணேசன் நடிக்காத பாத்திரங்கள் இல்லை எனலாம் அவரின் பல படங்கள் பல்வேறு கதாபாத்திரங்கள் நடித்து இருந்தாலும் அவரின் நடிப்பில் எனக்கு மிகவும் பிடித்தது அவரின் நகைச்சுவை பாத்திரங்கள் என்பேன் பலே பாண்டிய சபாஷ் மீனா அன்பே ஆருயிரே ஊட்டி வரை உறவு என்று சொல்லலாம்

அதில் உள்ளத்தை அள்ளித படத்தில் சுடப்பட்ட ஒரிஜினல் நகைச்சுவை காட்சி ஒன்று கீழே




சிவாஜி கணேசன் இலங்கை அறிவிப்பாளர் பி ஹெச் அப்துல் ஹமீதுக்கு அளித்த ஒரு வானொலி பேட்டி கேட்டு பாருங்கள் சிம்ம குரல் சிவாஜி பேட்டியை




sivaji hameed 2



கிரிக்கெட் பிடிக்கும் பிடிக்காது தனிப்பட்ட விருப்பம் ஆனால் ஒரு இந்தியனாக சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனைக்கு ஒரு பாராட்டு


மற்ற துறையில் சாதனை புரிந்தவர்களையும் பாராட்ட ஆசைதான் ஆனால் நம் மீடியா சினிமா கிரிக்கெட் தவிர வேறு விசயத்திற்கு முக்கியதுவம் தந்தால் தானே

வாழ்த்துக்கள் சச்சின் டெண்டுல்கர்

Monday, February 22

வைரமுத்து ஏர்டெல் சைனிஸ் பாட்டு & ரஹ்மான்

        

வைரமுத்து கவிதை திரை இசையில் பார்பதற்க்கும் சரி ,
கவிதை புத்தகத்தில் படிப்பதிற்க்கும்  சரி சிறப்பாக இருக்கும்


ஆனால்  அதே கவிதை வைரமுத்து குரலில் ரஹ்மான் இசையில் கேட்பதிற்கு எப்படி இருக்கும் அப்படிப்பட்ட ஒரு சிறப்பான வீடியோ தொகுப்பு கீழே
 சுகாசினி முன்னோட்ட குரல் சிறப்பாக இருக்கு

AR RAHMAN VAIRAMUTHU SUHASHINI






   ரஹ்மான் இசை  முதல் சைனிஸ் மொழி பட பாடல் மொழி
புரியாவிட்டாலும் ரஹ்மான் இசையில் கேட்டால் தனி சுகம் கேட்டு பாருங்கள்

CHINA MOVIE RAHMAN MUSIC SONG









  ஏர்  டெல் விளம்பரத்தில் ரஹ்மான் இசை பல இடத்தில பயன் படுத்தி இருந்தாலும் அதில் சில விளம்பரங்கள் சிறப்பான முறையில் அமைந்து விடும் அப்படிப்பட்ட ஒரு சிறப்பன ஏர் டெல் விளம்பரம்

AIRTEL, AR RAHMAN 










இன்றைய பதிவின் சிறந்த ப்ளாக்





வேர்களை தேடி
 தமிழ் இலக்கியம் பற்றி அழகிய முறையில் படிக்க சிறந்த தளம் தமிழ் ஆர்வம் உள்ள அனைவரும் தமிழ் பற்றி தமிழ் விரிவுரையாளர் இடம் இருந்து சிறப்பான முயற்சி பாருங்கள் தமிழ் பழகுங்கள்
வேர்களை தேடி ப்ளாக் படிக்க இதை அழுத்தவும்




இது வரை தமிளிஷ் தமிழ் 10  ஆகியவற்றில் எனக்கு தொடர் ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி.
உங்கள் ஆதரவு தொடர்ந்து தேவை குறை ஏதும் இருந்தால் தெரிவிக்கவும்  நிறை இருந்தாலும் தெரிவிக்கவும் (அதிகமா இருக்காது )
 








          
                 
                             

Sunday, February 21

AR ரஹ்மான் டில்லி6 விருதுகள் & அஜித்

வர வர அரும்பாவூர் ப்ளாக் அதிகமா ரஹ்மான் பற்றி எழுதுறதே வேலையா போச்சு அதை குறைச்சு வேறு விசயங்கள் பற்றி எழுதணும் என்றுர்தான் நினைக்கிறேன் ஆனா முடியல
ரஹ்மான் பற்றி ஒரு விஷயம் பார்த்த அதை மற்றவர்கள் உடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என மனசு ஆசை படுது இதை என்னவென்று சொல்ல


விண்ணை தாண்டி வருவாயா பாடல் கேட்கிறேன் கேட்கிறேன் கேட்டுட்டே இருக்கேன் இன்னும் சலிக்கவில்லை சிவாஜி படத்திற்கு பிறகு டில்லி 6 ஹிந்தி பாடல்களுக்கு பிறகு ஐ போட் ரூம் வந்தா  சி டி ல என்று பாடல் வந்த நாள் முதல் இன்று வரை ரூம் நண்பர்கள் எல்லாம் திட்ட திட்ட ஒரே  விண்ணை தாண்டிய வருவாயா பாட்டுதான்

      என் ரசனை வைத்து பார்க்கும் போது ரஹ்மானுக்கு ஒரு புது கூட்டணி சிறப்ப அமைந்து விட்டது என்பேன் .
ரஹ்மான் ஷங்கர் ,மணிரத்னம் கூட்டணிக்கு பின் இந்த கூட்டணி சிறப்பான கூட்டணி என்பேன்
ஆரமோலே ,ஓமான பெண்ணே அன்பில் அவன் ஹோசன கண்ணுக்குள் விண்ணை தாண்டி மன்னிப்பா என்று பாடல்கள் கேட்டு கேட்டு இன்னும் சலிக்க வில்லை
        இன்னும் ஒரு வாரத்தில் படம் வந்து விடும் படம் வந்தால் தெரியும் ரஹ்மான் பாடல் எப்படி கௌதம்  பாணிக்கு அமைய போகுது என்பது தெரியும்


       இந்த ஆண்டின் ஸ்டார் ஸ்க்ரீன் பெஸ்ட் மியூசிக் டைரக்டர்  நம்ம ரஹ்மான் தாங்க டில்லி 6 படத்திற்கு சிறந்த இசைக்கு இந்த விருது
அதுவும் தொடர்ச்சியா மூன்று முறை இந்த விருதை பெற்று உள்ளது மற்றும் ஒரு சிறப்பு
 

     அப்படிய பிலிம் பேர் விருது வரும் வாரம் அறிவிப்பாங்க அந்த விருதையும் ரஹ்மான் வாங்குவர் என நினைக்கிறேன்



போன வருடம் மாதிரி இந்த வருடமும் ரேடியோ மிர்ச்சி மியூசிக் அவார்ட் ரஹ்மானுக்கு அதிகமா கிடைது இருக்கு
அது எது எதுன்னா

BEST SONG OF THE YEAR         MASAKALAI   DELHI6
BEST ALBUM OF THE YEAR       DELHI 6
FEMALE VOCALIST                     REKHA BHARADWAJ   DELHI6
MALE VOCALIST                          MOHIT CHAUHAN        DELHI6
MUSIC DIRECTOR                        AR RAHMAN      DELHI6
LYRICIST OF THE YEAR              PRASHON JOSHI  DELHI 6
BEST SONG ARRANGER             AR RAHMAN   SONG:  MASAKALI DELHI 6


இது எப்படின்னா கடலில் பல அலைகள் வந்த போதும் ஒரு பெரிய அலை எப்படி மற்ற சிறு அலைகளை அடக்கி விடுகிறதோ அது போன்றதுதான் ரஹ்மான் ஒரு படம் இசை அமைதாலும் மொத்த விருதையும் பெற்று விடுவது அவரின் சிறப்பு

        மற்ற முக்கிய விஷயம் ரஹ்மானின் சென்ற வருட ப்ளூ பட பாடல்கள் அதிகம் கவனிக்கபடாமல் போனதிற்கு என்ன காரணமோ



இந்த திரை உலகின் ரியல் ஹீரோ அஜித் அவர்களுக்கு ஒரு சல்யுட்

நீங்க இனி சினிமாவில் நடிக்காவிட்டாலும் சரி நாங்கள் வருத்த படமாட்டோம்
நடித்தால் சந்தோச படுவோம் உங்கள் முடிவு சரியா இருக்கும் என்று நினைக்கிறோம்


 தர்மம் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் 

Wednesday, February 17

ரஹ்மான் ஸ்டுடியோ பாடல் பதிவு விடியோ

ரஹ்மானின் பாடல் கேட்க்கும் பொது அவரின் இசை மற்றும் தொழில்நுட்ப நேர்த்தி அனைவரயும் ரசிக்க வைக்கும் அவரின் பாடல் பதிவு ஆகும் முறை பற்றி சில வீடியோ உங்களுக்கு










Tuesday, February 9

இயற்கை காப்போம் இயற்கையாய் 6

               பிளாஸ்டிக் எமன்










    நாம் இயற்கை விசயத்தில் சாதரணமாக நினைக்கும் விஷயம் நாம் நினைத்து பார்க்க முடியாத கொடூர  எமனாக இருப்பதற்கு பெரும் எடுத்துக்காட்டு பிளாஸ்டிக் இன்று நம் வாழ்க்கையில் நுழைந்து நம் குடும்ப நண்பரில் ஒருவராக மாறி இன்று நம்மை ஆட்சி செய்யும் விஷயம் பிளாஸ்டிக் 
   பிளாஸ்டிக் தானே என்று நாம் சாதாரணமாக நினைக்கும் விஷயம் நம் இயற்கை நம் வாழ்க்கையில் எப்படி விளையாடுகிறது என்று பார்தாலே போதும் அதை பற்றி விழிப்புணர்வு நமக்கு மட்டும் இல்லாமல் நம்மை சார்ந்த சமுகதிற்க்கும் உண்டாக்குவது முக்கியம்

முதலில் பிளாஸ்டிக் பொருள்கள் உண்டாக்கும் விசயதை பற்றி

1 . பிளாஸ்டிக் பொருள்கள் மண்ணில் மக்கும் தன்மை இல்லாதது .மறுசுழற்சி செய்யாமல் குப்பையில் நாம் வீசும் பிளாஸ்டிக் பொருள்கள் மண்ணில் மக்காமலும் ,மரங்களின் வேர் மண்ணில் செல்ல விடாமலும் தடுக்கும்
அது மட்டும் இல்லாமல் மழை கால நீரை சரி வர மண்ணிற்கு செல்ல விடாமல் நிலதடி நீர் மட்டம் குறைய காரணாமாக இருக்கும்

2 .புற்று நோய் , தரமற்ற பிளாஸ்டிக் பொருள்களில்  சூடான உணவு பொருட்களில்  வைப்பதால் நுரையீரல் பாதிப்புகள் மரபணு குறைப்பாடு என பிளாஸ்டிக் பொருள்களை எரிப்பதால் அது வெளியிடும் புகை பல சுவாச சம்பந்தப்பட்ட நோய்களை உண்டாக்கும்

3 .பிளாஸ்டிக் பொருள்களை உணவு பொருள் என எண்ணி விழுங்கும் விலங்குகள் பரிதாபமாக உயிர் இழக்கின்றன

               என்னதான் நினைத்தாலும் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு இன்றி நம்மால் இருக்க முடியாது ஆனால் அதன் பயன்பாடுகளை குறைக்க நம்மால் முடிந்த செயலை செய்யலாம்

1 . வீடுகளில் நாம் பயன்படுதும் பிளாஸ்டிக் பொருட்களை ஒரே குப்பையாக  தனியாக போட்டு வைக்கலாம்
2 . மினரல் வாட்டர் குளிர் பாதன பாட்டில்களை ஒரு முறை க்கு மேல் பயன் படுத்த வேண்டாம்

3 . வீட்டில் சமையல் பொருள்களை பிளாஸ்டிக் பாட்டில்களில் வைக்காமல் எவர்சில்வர் பீங்கான் பொருள்களை பயன்படுத்தலாம்

4   சூடான உணவு பொருட்களை தரம் குறைந்த பிளாஸ்டிக் பொருட்களில் வைக்க வேண்டாம்

5 பொருட்களை வாங்க கடைக்கு செல்லும் போது முடிந்த அளவிற்கு அதிக அளவிலான பிளாஸ்டிக் கேரி பேக் பயன்படுத்த  வேண்டாம் முடிந்த அளவிற்கு நாமே இப்போது நல்ல மாடல்களில் வரும் மறு சுழற்சி சணல் பைகளை பயன்படுத்தலாம்
 
6 பிளாஸ்டிக் பொருள்களில் தர கட்டுப்பாடு முத்திரை  பற்றி அறிந்து கொள்வது நலம் அதை பற்றி விரிவான தகவல்கள் அறிய
இதை படிக்கவும்

7 பிளாஸ்டிக் பொருள்கள் கௌரவ சின்னம் என்று நினைத்து நமக்கு நாமே அழிவை ஏற்படுத்தாமல் துணி பைகள் சணல் பைகளை அடிக்கடி பயன் படுத்தவும்


            வெளிநாடுகளில் உள்ள பல பொருள் அங்காடிகளில் பிளாஸ்டிக் பொருள்களின் பயன் பட்டை தடுக்க மறுசுழற்சி பைகள் மற்றும் சணல் பைகள் அதிகம் பயன் படுத்துகின்றனர்


பிளாஸ்டிக் பொருள்களை பற்றியும் அதன் தீமை பற்றி பல பதிவுகள் வந்து உள்ளன இயற்கை பற்றி இந்த தொடரில்  பிளாஸ்டிக் பற்றி எழுதா விட்டால் குறையாக இருக்கும் என்பதால் இந்த பதிவு


இன்றைய பதிவின் சிறந்த ப்ளாக்

                                         இயற்கை பற்றி அறிய ஒரு சிறப்பான வலை தளம் ஒரு முறை பாருங்கள் மீண்டும் மீண்டும் படிக்க சிந்திக்க சிறந்த் தளம்

பூவுலகின் நண்பர்கள்

 இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்

Sunday, February 7

இயற்கை காப்போம் இயற்கையாய் 5

நாம் அனைவரும் நினைப்பது போல் நீர் என்பது தோண்ட தோண்ட வந்து கொண்டே இருக்காது .
அதற்கும் ஒரு எல்லை உண்டு

நாம் இன்று சாதாரனாமாக தண்ணீர் என்று நினைக்கும் விஷயம் வரும் காலத்தில் மிகவும் மதிப்பு மிக்க பொருளாக மாற போவதால் தான் முன்னேறிய நாடுகளே தண்ணிர் சேமிப்பு விசயத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பல திட்டங்களை மக்களுக்கு சொல்கிறது

அதில் ஒன்று இணைய வழி விழிப்புணர்வு இணையதின் பயன்பாடு முன்னேறிய நாடுகளில் அதிக அளவில் உள்ளது அதனால் பல நாட்டு அரசு மக்களுக்கு
நீர் சேமிப்பு பற்றி தகவல்களை மக்களுக்கு தருகிறது

ஒவ்வொரு நாடும் நாம் சின்ன விஷயம் என்று நினைக்கும் விசயத்தில் கூட பெரும் அளவில் நீரை சேமிக்க முடியும் என்று விழிப்புணர்வு தருகிறது
பல் விளக்குவது .குளிப்பது ,சமையல் .வாகனம் கழுவும் விஷயம் என்று பல விசயங்கள் உள்ளது பாருங்கள் இயற்கை விசயத்தில் அதை பின்பற்றுவோம்

அதில் சில முக்கிய இணைய தள விவரங்கள் கீழே




savewater australia பார்க்க அழுத்தவும்



americanwater பார்க்க அழுத்தவும்




savewaternc பார்க்க அழுத்தவும்




liveearth org பார்க்க அழுத்தவும் 








முன்னேறிய நாடுகளே நீர் விசயத்தில் விழிப்புணர்வுடன் இருக்கும் போது நாம் இன்னும் விழிப்புணர்வுடன் இருப்பது முக்கியம் தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்தது இருந்தால் வாக்களிக்கவும்

Wednesday, February 3

உத்ரவாதம்

எனக்கும் ரொம்ப நாள் கதை எழுதணும் ஆசை ஆனால் நாம் எழுதுறதை யார் படிப்பாங்க என்ற எண்ணத்தில் எழுத வில்லை இது என் முதல் முயற்சி இது வெற்றி அடைந்தால் தொடரும் இல்லை என்றால் இல்லை
கதை படிங்க தவறு என்றால் பின்னுட்ட்டம் இடவும்
உங்கள் ஆதரவு இருந்தால் தொடருவேன்

                                                 




அந்த ஜன சந்தடி மிக்க மார்கெட் ராம் சென்ற அன்று இன்னும் நெரிசலுடன் ஒரே பரபரப்பாக இருந்தது .

ராமுக்கு அன்று அந்த மார்க்கெட் செல்லும் வேலை இல்லை இருந்த போதும் வீட்டில் இருந்த ஒரு டிவிடி பிளேயர் பழுதாகி பயன் படுத்த முடியாத நிலை
இதற்க்கு முன் அந்த பிளேயர் பல முறை தொல்லை தந்த போது அவன் அந்த பிளேயர் வாங்கும் போது கொடுத்த உத்ரவாதத்தை பயன்படுதி பல முறை சரி செய்து விட்டான்
ஆனால் இனி அது பயன்படுத்த முடியாத நிலை,
அதனால் இன்று ஒரு நல்ல கம்பனி டிவிடி பிளேயர் வாங்க வேண்டும் என்று அந்த பஜார் பகுதிக்கு வந்தான்
அன்று நல்ல ஜன சந்தடி இருந்தது திரும்பி போகலாம் என நினைத்தான் ஆனால் இதற்காக இன்று இவ்வளவு தூரம் வந்து விட்டோம் வாங்கி செல்வது நல்லது என நினைத்தான்

அது மட்டும் இல்லாமல் இந்த கடையில் தான் நல்ல பொருள் உத்ரவாதத்துடன் கிடைக்கும் என மனதிற்குள் நினைதவானாக மெதுவாக டிவிடி பிளேயர் பிரிவில் இருந்த அந்த விற்பனையாளரை அணுகினால் ராம்


" ஹலோ எனக்கு ஒரு நல்ல பிளேயர் வேண்டும் ஆனால் உத்ரவாதம் சிறப்பாக கொடுக்கும் கம்பனி எதுவோ அதை கொடுங்கள் "என கேட்டான்
இங்கே நாங்க எல்லா வித நல்ல கம்பனி பொருளும் விக்கிறோம் உங்களுக்கு எந்த கம்பனி வேண்டும் எப்படி பட்ட மாடல் வேண்டும் சொன்ன அதை காட்டுறேன்
என்று கூறினான் அந்த விற்பனை பிரதிநிதி

ராமுக்கு பிளேயர் வாங்கும் விஷயத்தை விட உத்ரவாதம் என்ற விசயத்தில் மட்டும் குறியாக இருந்தான்

இந்த இடத்தில ராமுடைய குணத்தை சொல்ல வேண்டும் ஒரு சின்ன குண்டூசி வாங்குவது என்றாலும் உத்ரவாதம் இருக்க என்று பார்க்கும் பழக்கம உள்ளவன்
அவன் விவரம் தெரிந்து நாள் முதல் இந்த குணம் அவனிடம் பெரும் அளவில் வளர்ந்து விட்டது.

உத்ரவாதம் பற்றி அவன் வாங்கிய பொருள்களை உத்ரவாதம் கொண்டு சரி செய்ததை கதை கதையாக நண்பர்கள் இடம் சொல்வதில் அவனுக்கு ஒரு அலாதி சந்தோஷம்
" இந்த டிவி நான் வாங்க ஒரு மாதத்தில் சரியா வேலை செய்ய வில்லை விட்டேனா க்யாராண்டி இருக்கு இல்லே அதை பயன்படுத்தி சண்டை போட்டு புது டிவி இல்ல வாங்கினேன்" என்று தம்பட்டம் அடிப்பது அவனின் மற்றும் ஒரு குணம்

கடைசியாக ஒரு டிவிடி பிளேயர் வாங்கி முடிக்கும் போது நண்பனிடம் இருந்த அவன் செல் போனுக்கு அழைப்பு வந்தது

அவனிடம் பேசிக்கொண்டு டிவிடி பிளேயர் வாங்கி கொண்டு வெளிய வந்து கார் நிறுத்திய வந்து காரினுள் டிவிடி பிளேயர் வைத்து காரை எடுதது வீட்டை நோக்கி காரை செலுத்த ஆரம்பித்தான்

பாதி தூரம் வரும் போது திடீர் என அவனுக்கு அந்த விற்பனையாளர் டிவிடி பிளேயர் உத்ரவாதம் வாங்க வில்லை என ஞாபகம வந்ததது நண்பன் இடம் பேசும் ஆர்வத்தில் உத்ரவாத விஷயம் பற்றி பேச வில்லை

மீண்டும் அந்த கடை செல்லு வாய்ப்பு குறைவு வந்தது வந்தோம் ஒரே வேலையாக முடிப்போம் என நினைத்து அந்த கடை நோக்கி தன காரை திருப்பினான் ராம்

மீண்டும் அந்த கடை உள்ளே சென்ற ராம் "மன்னிக்கனும் நான் இப்போ வாங்கிய டிவிடி பிளேயர்க்கு உத்ரவாதம் வாங்க மறந்து விட்டேன் சரியான உத்ரவாத அட்டை கொடுத்தால் நன்றாக இருக்கும் "

" ஸாரி சார் நானும் மறந்து விட்டேன் "
என்று டிவிடி பிளேருக்கு உண்டான சரியான் உத்ரவாத பேப்பரை ராமின் கையில் கொடுத்தான்
ஒரு பெரும் செயல் செய்து விட்ட களிப்பில் அந்த உத்ரவாத பேப்பரை காரின் முன் பக்கத்தில் வைத்து விட்டு மீண்டும காரை வேட்டை நோக்கி திருப்பினான்

மனதில் ஏதோ எண்ணங்கள் நினைது கொண்டு அந்த வளைவில் வரும் போதுதான் எதிரே தாறுமாறாக வந்த லாரியை பார்த்தான் ஒரு நொடி ராம் சுதாரிக்கும் முன் லாரி தன் கட்டுப்பாட்டை இழந்து பெரும் சத்தத்துடன் அவன் காரில் மோதியது
ரத்த வெள்ளத்தில் கிடந்து ராம் மீதி அந்த உத்ரவாத பேப்பர் வீசிய காற்றின் காரணாமாக அவன் மீது விழுந்தது

இந்த கதை பிடித்தது இருந்தால் உங்கள் வாக்கை அளிக்கவும்
ஏதும் குறை என்றால் பின்னுட்டம் இடவும்

Tuesday, February 2

மொஸில்லா பயர்பாக்ஸ் புதுசு தினுசு ஆடை



மொஸில்லா பயர்பாக்ஸ் 3.6 வந்துள்ளது அதில் இந்த மொஸில்லா பயர்பாக்ஸ் பெர்சொன்ஸ் வண்ண மயமாக உள்ளது இதில் தான் மொஸில்லா பயர்பாக்ஸ் அழகான பல ஆடை தீம் வடிவில் உள்ளது

ஆடை என்றவுடன் இது நாம் அணியும் ஆடை என்று நினைத்து விடாதிர்கள் இது மொஸில்லா பயர்பாக்ஸ் ஒரே மாதிரி பார்த்து போரடிக்குது என நினைப்பவர்களுக்கு மொஸில்லா பயர்பாக்ஸ் 3.6 அறிமுகப்படுதும் புது ஆட் ஆன சேவை ஆனால் இப்போது இன்னும் ஒரு படி முன்னே சென்று நாம் நினைக்கும் தோற்றதில் மொஸில்லா பயர்பாக்ஸ் மாற்றி கொள்ளலாம் அதுவும் விரைவாக பாதுகாப்பாக என்பது தான் இதன் சிறப்பு மேலும்

இதில் நீங்கள் மாற்ற நினைக்கும் தீம் மீது மௌஸ் சுட்டி வைத்தால் தானாக அந்த தீம டெமோ காட்டும் விரும்பினால் உடனே மாற்றிவிடலாம்

விளையாட்டு திரையுலகம் இயற்கை என பல பிரிவுகளில் அழகான ஆயிரத்திற்கு மேற்ப்பட்ட தீம உள்ள்ளது இதன் சிறப்பு ஒரு முறை பயன் படுத்தி பாருங்கள


இதில் ரஜினி காந்த் ரஹ்மானுக்கு என அழகான தீம் உள்ளது

மொஸில்லா பெர்சொனாஸ் என்ற பெயரில் அறிமுகபடுத்தி உள்ளது ஆயிரத்திற்கு மேல் அழகான மொஸில்லா தீம் உள்ளது நிமிடத்தில் நான் நினைத்த தோற்றதில் மொஸில்லா பயர்பாக்ஸ் பார்க்கலாம்

ஒரே மாதிரி பார்த்து போரடித்து விட்டது என நினைப்பவர்கள் இந்த் சுட்டியி அழுத்தி பார்க்கலாம்

இந்த் சுட்டியி அழுத்தி பார்க்கலாம்


(எனக்கு ரொம்ப நாள் ஒரு சந்தேகம் போர் அடிக்குது என்பதின் உண்மையான் அர்தம் என்ன அதன் தமிழ் அர்தம் என்ன தெரிந்தால் பின்னுட்டம் இடவும் )


இன்றைய பதிவின் சிறந்த ப்ளாக்



மதுரை சரவணன் கல்விக்கென சொல்லும் இவர் ப்ளாக் கவிதை நல்ல அழகிய நடையில் சிறப்பான உபயோகமான தலைப்புகள் பதிவுகள் பாருங்கள்

சரவணன் ப்ளாக் பார்க்க இதை அழுத்தவும்


பதிவு பிடித்து இருந்தால் வாக்களிக்கவும்
இந்த பதிவு நாலு பேரை சென்றடைய  உங்கள் வாக்கு உதவும்