அனைவரின் வாழ்க்கை ஒரு புள்ளி என்னும் செயலில் மாறி விடும் .
எடுத்துக்காட்டு ஒரு நொடி அதிர்ஷ்டம் ஒரு நொடி துரதிர்ஷ்டம் .
இப்போது ஒரு உயர்ந்த இடத்தில் உள்ள ஒருவர் அது நிங்களோ அல்லது நானோ இப்படி வராமல் இதை விட ஒரு தாழ்த்த இடத்திற்கு போய் இருந்தால் என்று என்றேனும் நினைத்து பார்த்தது உண்டா?
மற்றவர் சொல்வது போல் "போறான் பார் அவனுக்கு வந்த வாழ்வு என்று சொல்லும் பொது "ஏன் நம்மை பார்த்து சொல்கிறார் என்று ஒரு கணம் நினைத்து பாருங்கள்
மனிதன் என்பவன் நிச்சயம் பொறாமை இருக்கும் மனம் உள்ளவன்
அனால் அதே மனிதன் தன் வந்த வாழ்வை ஒரு நொடிகள் மறக்கும் மனம் உள்ளவன்
இதில் நாம் எந்த இடதில் உள்ளோம் என்று ஒரு நொடி நினைது பார்த்து வாழுங்கள்
நினைக்க முடியாத வாழ்க்கை நல்ல பணம் என்று ஒரு வாழ்க்கை வந்த உடன்
நம்மை விட தாழ்ந்த நிலைல் உள்ள "ஒரு நண்பனை அல்லது சொந்தத்தை பார்க்க விரும்பாத அந்த மனதில் நாம் இருக்கிறோமா" என்று நினைத்து பாருங்கள்
உங்கள் மன நிலை என்ன உண்மைய யோசித்து ஒரு கருத்து இடுங்கள்
ஆம் நான் என் பழைய வாழ்க்கை நினக்கமாட்டேன் என்றோ
அல்லது இந்த வாழ்கை எனக்கு ஒரு பாக்கியம் என்றோ உங்கள் மனதில் உள்ளதை இடுங்கள்
Sunday, October 25
Saturday, October 24
மரம் ஒரு வரம்
ஒரு நிமிடம் கண்ணை மூடி உங்கள் ஊரின் மழை கால இயற்கை நினைத்து பாருங்கள்
ஊரின் ஆறு ஓடை நீர் நிரம்பி அழகான அந்த காலம் இன்று இல்லை என்ன காரணம் ?
சரியான நேர மழை இல்லாதது ஒரு காரணம் இதற்க்கு முக்கிய காரணம் மரம் இல்லாமல் நம் ஊர் போட்டால் காடாக மாறி வருவது ஒரு காரணம்!
நாம் படித்து இன்று அமெரிக்கா லண்டன் துபாய் சிங்கப்பூர் என்று நம் வாழ்க்கை நிலை மாறி விட்டது ஏன் நம் நம் ஊரை பற்றி நினைக்க வேண்டும் என்று பலரும் நினைப்பதால் தான்
நம் ஊருக்கு நம்மால் முடிந்த உதவி செய்ய முடியாமல் இருக்கிறோம்
அதிகம் வேண்டம் நம் ஊரில் நம் படித்த பள்ளிகள்உள்ளன அதை சுற்றி மற்றும் பள்ளிகூட உள்பகுதிகளில் மரம் நட்டு நம்மால் முடிந்தசெய்யலாம்
அரசியல்வாதி போல் ஒரு நாள் மரம் நட்டு மறு நாள் ஆட்டுக்கு இரையாகமல் அந்த மரம் ஒரு நல்ல பருவம் வரும் வரை அதை பாதுகாக்க மாதம் ரூ 300 அல்லது ரூ 400 க்கு ஒரு ஆளை நியமித்து ஒரு வேலை நீர் ஊற்றினால் நிச்சயமாக ஒரு வருடத்தில் மரம் பெரியதாக வளரும்
நிச்சயமக இது ஒரு ஆள் செய்ய இயலாது நம் பள்ளி நண்பர்கள் ஊர் நண்பர்கள் சேர்ந்து செய்ய இயலும்
நல்ல வசதி உள்ள அயல் நாடு நண்பர்கள் உள்ளூர் நண்பர்கள் சேர்ந்து ஆண்டின் ஏதும் ஒரு நாள் பிளான் செய்தால் நிச்சயமாக செய்யலாம்
இருபது அல்லது முப்பது மரம் ஒரு ஆண்டில் நடுவது என்று முடிவு செய்தல் மரத்திற்கு ஆயிரம் ருபாய் மற்றும் மாதம் ரூ 400 என்றால் வருடதிற்கு ரூ 4800
செலவாகும் ஒரு ஆண்டில் நாற்பது மரம் என்றால் பெரிய விஷயம்தான் . இது மட்டும் நிச்சயமாக வெற்றி அடைந்தால் நீங்கள் மீண்டும் கண்ணை மூடி உங்கள் ஊரின் அழகை மீண்டும் நேரில் பார்க்கலாம்
நாம் அன்னதானம் செய்வது போல் ஏன் இதை செய்ய இயலாது
ஒரு நபருக்கு வேலை கொடுத்தது போலும் நம் ஊரை இயற்க்கை நம் காப்பற்ற நம்மால் முடிந்த ஒரு சின்ன முயற்சியாக இது அமையும்
உங்கள் ஊரின் படித்த நண்பர்கள் நீங்கள் இன்டர்நெட் மூலம் தொலை பேசி
சிறு குழுக்கள் மூலம் வசூல் செய்து ஒரு நாள் குறிப்பிட்டு அந்த நாளில் மரம் நடலாம்
மிக முக்கியமான ஒரு விஷயம் மரம் நடுவது மட்டும் இது குறிக்கோள் அல்ல
அந்த செடி மரம் ஆகும் வரை காப்பற்ற நாம் செயும் செலவு மாதம் ரூ 400or500 வருடத்திற்கு ரூ4800 or 6000
மனம் இருந்தால் நிச்சயம் செய்யலாம் தமிழ் நாட்டில் 100 கிராமம் 10 நகரத்தில் இது வெற்றி அடைந்தால்
மீண்டும் கண்ணை மூடி உங்கள் ஊரின் அழகை பாருங்கள்
மறக்காமல் எனக்கு ஒரு ஒட்டு போடுங்க சார்
அப்படியே சிறந்த தொலைக்காட்சி எது என்று ஒரு வோட்டும் போடுங்க எட்டு நாள் தான் உள்ளது
Subscribe to:
Posts (Atom)