Saturday, July 30
யோஹன்- அத்தியாயம் ஒன்று A.R.ரஹ்மான் இசை அமைக்கிறாரா?
அப்படி இப்படி என்று ஒரு அளவிற்கு தான் முன்பு செய்த தவறுகளில் இருந்து நல்ல பாடம் கற்று உள்ளார் விஜய் அவர்கள்
இனி சுறா புறா ,வேட்டைக்காரன் மட்டைகாரன் போன்ற காவியம் வாய்ந்த படங்களில் நடிக்க மாட்டார் என்று தெரிய வருகிறது அவரின் வர போகும் புது படங்களில் பார்க்கும் பொது அதார் விடும் காட்சிகள் இருக்காது என்பதற்கு பெரும் எடுத்து காட்டு அவரின் விரைவில் வர போகும் நண்பன் படம் அதை தொடர்ந்து அஜித் நடிக்க மறுத்த (துப்பறியும் சந்துரு) யோஹன் என்ற பெயரில் விஜய் அவர்கள் நடிப்பு வாழ்க்கையில் மாறுபட்ட படமாக இருக்கும் என்று தெரிகிறது
"பஞ்ச டயலாக் இல்லை என்று அவரின் சில ரசிகர்கள் வருத்தப்படலாம் அவர்களுக்குதான் வேலாயுதம் படம் வருகிறது "
FIRST DAY
சரி இப்போ நம்ம விசயத்திற்கு வருவோம் முதல் நாள் வந்த விளம்பரத்தில் இசை யார் என்ற விவரம் இல்லாமல் வந்த போஸ்டர் இந்த படத்திற்கு யார் இசை என்று சந்தேகம் இருந்தது
ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிக்கும் நண்பன் படத்திற்கே இசை அமைக்க மாட்டேன் என்று சொன்ன ரஹ்மான் நிச்சயம் இந்த படத்திற்கு இசை அமைக்க மாட்டார் என்றுதான் நேற்று வரை நினைத்து இருந்தால் இன்றைய விளம்பர போஸ்டரில் அது மாற்றம் இசை ரஹ்மான் என்று வந்துள்ளது
SECOND DAY WITH A.R.RAHMAN NAME
ஆகா மொத்தத்தில் இந்த படத்திற்கு இசை ரஹ்மான் என்பது நிச்சயம் ஆகி விட்டது
விரைவில் வர இருக்கும் ரஹ்மான் இசை பிட்ஸ்
செப்டம்பர் மாதம் ரஹ்மான் இசையில் அவரின் உலக இசை ஆல்பம் "SUPERHEAVY " வர இருக்கு
அடுத்த மாதம் ரஹ்மான் இசையில் ஹிந்தி மொழி படம் "ராக் ஸ்டார் வருகிறது
இதற்க்கு நடுவில் ரஹ்மானின் அடுத்த ஆங்கில படம் "WELCOME TO PEOPLE " வர இருக்கு
இதற்கும் இடையில் ரஜினி அவர்களின் "ரானா"
சேகர் கபூர் இயக்கத்தில் "PAANI "
யாஷ் சோப்ரா உடன் ஒரு ஹிந்தி மொழி படம் "
ஹாலிவுட் நிறுவனம் ட்ரீம் வொர்க்ஸ் தயாரிக்கும் " MONKEYS OF BOLLYWOOD "
கௌதம் மேனன் இயக்கத்தில் ஹிந்தி மொழி விண்ணை தாண்டி வருவாயா
இவர் கையில் இத்தனை படங்கள் இருக்கும் போது யோஹன் படத்திற்கு இசை அமைப்பார் என்ற இன்றைய விளம்பரம் தான் மலைப்பா இருக்கு
Wednesday, July 27
எப்படி தயாரிக்கிறார்கள் " HIGHLIGHTERS " FM (19)
எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் இன்றைய பதிவில் நாம் பார்க்க போவது அலுவலகங்களில் மற்றும் நாம் கல்லூரிகளில் அதிகம் ப்ராஜாக்ட் விசயங்களில் நாம் அதிகம் உதவும் ஹை லைட்டர் எனப்படும் கலர் பென்சில் பற்றி நாம் பார்க்கலாம்
நாம் சொல்ல போகும் மிகவும் முக்கியமான விஷயங்கள் பற்றி தனியாக சொல்ல அந்த விஷயத்தை மட்டும் தனியாக கோடிட்டு காட்ட பயன்படும் ஹை லைட்டர்
எவ்வாறு தொழிற்சாலைகளில் தயாரிக்கிறார்கள் என்று பார்க்கலாம் ,
நாம் சொல்லும் விசயங்களை கலர் கலராக அடிகோடிட்டு காட்ட மிகவும் உதவுவது இந்த ஹை லைட்டர் தான்
Monday, July 25
எப்படி தயாரிக்கிறார்கள் " PAPER CUPS" FM(18)
எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் இன்று நாம் பார்க்க போவது பேப்பர் கப் இந்த நாகரிக உலகில் கண்ணாடி கிளாசில் தேனீர் ,குளிர்பானம் குடிப்பதை இன்றைய மக்கள் விரும்புவதில்லை எல்லாவற்றிக்கும் பேப்பர் கப் பயன்படுத்தும் இந்த காலத்தில்
பேப்பர் கப் மறு சுழற்சி மூலம் மீண்டும் பயன்படுத்தலாம் என்பது நல்ல விசயமோ அதை போல இந்த பேப்பர் கப் தயாரிக்க மரங்கள் வேட்டபடுவது ஒரு தீமையான விஷயம் கூட
முடிந்த அளவிற்கு வீடுகளில் பேப்பர் கப் பயன்படுத்தாமல் கண்ணாடி பீங்கான் பொருள்களில் தயாரித்த கிளாஸ்களில் நாம் தேனீர் மற்றும் குளிர்பானம் குடிப்பதால் இயற்க்கை காப்பதற்கு நாம் உதவி புரியலாம்
சரி சரி இப்போ இந்த பேப்பர் கப் எப்படி தயாரிக்கிறார்கள் என்று பாப்போம்
சோசியல் நெட்வொர்க்கில் பேஸ்புக் வெற்றிபெறுமா கூகிள் பிளஸ் வெற்றி பெறுமா என்று நாம் பட்டிமன்றம் வைக்கும் இந்த நேரத்தில் இவர்கள் நம்மை வைத்து இன்னும் சில மில்லியன் டாலர்களை லாபம் பார்த்து இருப்பார்கள்
நூறு கோடி பேரு இருக்கும் நம் நாட்டில் இதுவரை சொல்லும்படியான சர்ச் இஞ்சின் ,சோசியல் நெட்வொர்க் உருவாக்கி உலக அளவில் ஹிட் கொடுக்க திறமைசாலிகள் இல்லையா? (சபீர் பாட்டியா தவிர )
Saturday, July 23
எப்படி தயாரிகிறார்கள் "PENCIL" FM(17)
எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் இன்று நாம் பார்க்க போவது நாம் நன்கு அறிந்த மற்றும் நம் வாழ்க்கையில் இன்று இந்த நிலைக்கு வர ஒரு முக்கிய காரணாமான பொருளை பற்றி
அது வேறு ஒன்றும் இல்லை நாம் தினமும் பயன்படுத்தும் இப்போ அதிகம் பயன்படுத்த பென்சில் பற்றி
பென்சில் என்று ஒரு வார்த்தையில் சொன்னால் நமக்கு தெரியாது அதிலும் இருவகை உள்ளது ஒன்று சிலேட்டு பென்சில் மற்றது பேப்பர் பென்சில்
இந்த பென்சில் முதல் முதலில் பார்க்கும்போது எனக்கு ஒரு சந்தேகம் எப்படி இந்த பென்சில் உள்ளே இந்த கார்பன் (கிராபைட்)குச்சியை எப்படி உள்ள்ளே நுழைப்பார்கள் என்று சந்தேகம் வரும்
இந்த வீடியோ பார்க்கும் பொது இரண்டு மர அட்டைகளை எப்படி அழாக செதுக்கி பின்பு அதன் உள்ளே இந்த கிராபைட் குச்சியை வைத்து பின்பு இரண்டு மர அட்டைகளை வைத்து இயந்திரம் மூலம் எவ்வளவு அழாக செய்கிறார்கள் பாருங்கள்
நம்ம ஊரு நடராஜா பென்சில் எப்படியோ அதே போல வெளிநாடுகளில்
இந்த staedtler பென்சில் ரொம்ப புகழ் பெற்றது
Wednesday, July 20
எப்படி தயாரிக்கிறார்கள் "ICE CREAM CONE" FM(16)
எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் இன்று நாம் பார்க்க போவது எல்லோரும் விரும்பும் ஐஸ் கிரீம் சம்பந்தப்பட்ட விஷயம்
முதலில் நான் கோன் ஐஸ் கிரீம் சாப்பிடும்போது ஐஸ் கிரீம் மட்டும் சாப்பிட்டு விட்டு கோனை தூக்கிபோட்ட கதை வேறு ,அதுவும் சாப்பிடும் விஷயம் என்று அப்போ எனக்கு தெரியவில்லை .
இந்த ஐஸ் கிரீம் கோன் தயாரிக்கும் முறை மிகவும் சுகாதாரமான முறையில் எப்படி தயாரிக்கிறார்கள் என்று பாருங்கள்
Monday, July 18
A.R.ரஹ்மானின் SUPERHEAVY சூப்பர் வீடியோ முன்னோட்டம்
மைக் ஜாக்கார் மற்றும் ரஹ்மான் இனைந்து செப்டம்பர் மாதம் வர இருக்கும் SUPERHEAVY ஆல்பம் பற்றி ரஹ்மான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவல் தந்து கொண்டு உள்ளார் அந்த வகையில்
விரைவில் வர இருக்கும் அவரின் இந்த ஆல்பத்தில் அவர்கள் இசை கோர்ப்பில் செய்த செயல்களை அழகிய வீடியோ ஆல்பம் ஆகா வெளியிட்டுள்ளனர்
அதில் இருந்து சில சுவாரசியங்கள் சில
SUPERHEAVY VIDEO
Tuesday, July 5
A.R.ரஹ்மானின் புது உலக இசை "SUPERHEAVY " இசை துளிகள்
18 மாதங்களாக யாருக்கும் தெரியாமல் அமைதியாக ஒரு உலக இசைக்கு அடித்தளம் இட்டு வந்துள்ளார் ரஹ்மான்
SUPERHEAVY எனப்படும் இந்த உலக இசை தொகுப்பில் ரஹ்மான் முக்கிய பணியாற்றி உள்ளார்
மைக் ஜாக்கர் உடன் ரஹ்மான் பணியாற்றி இருக்கும் இந்த இசை தொகுப்பில் ரஹ்மான் பாடல் பாடி இருப்பதுடன் முக்கிய கிபோர்ட் இசை அமைப்பாளராக பணியாற்றி உள்ளார்
உலக அளவில் பல இசை சாதனைகள் செய்த ரஹ்மானுக்கு இந்த ஆல்பம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்
செப்டம்பர் மாதம் வர இருக்கும் இந்த் ஆல்பம் அதன் முன்னோட்ட பாடல் வரும் 7 ஆம் தேதி வரும் என்று ரஹ்மான் தன பேஸ்புக் மூலம் கூறி இருக்கிறார்
போனஸ் ரஹ்மான் செய்தி :
இதற்க்கு பேர்தான் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது
ரஹ்மான் தான் இசை அமைத்த விண்ணை தாண்டி வருவாயா தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களுக்கும் சேர்த்து இரண்டு விருதுகளாக வாங்கி உள்ளார்
ரஹ்மான் இசையில் ஹிந்தி மொழியில் வரும் ராக் ஸ்டார் நவம்பர் மாதம் வரும் அக்டோபர் மாடம் இசை வரும் என்று எதிர்பார்க்கலாம்
ரஹ்மான் தன்னுடைய பேஸ்புக் வட்டம் 49 லட்சம் எட்ட போகிறது
மைக்கேல் போல்டேன் அவர்களின் காதல் பாடல்கள் நிறைந்த gems பாடல் தொகுப்பில் ரஹ்மான் இசை அமைத்த ஆங்கில் பாடல் இடம்பெற்றுள்ளது
Subscribe to:
Posts (Atom)