Thursday, February 3

விஜயின் உண்மையான அரசியல் முகம்



       இத்தனை நாள் அடுப்பில் தூங்கி கொண்டு இருந்த பூனை இப்போ வெளியே தலை காட்டி இருக்கு .ஆனந்த விகடன் பேட்டி வடிவில் ஆரம்பத்திலே நான் ஒன்று சொல்லி கொள்ள  விரும்பி கொள்கிறேன் யாரும் அரசிலளுக்கு வரலாம் இது ஜனநாயக நாடு இதில் எல்லோருக்கும் உரிமை உள்ளது  தனக்காக இல்லாமல் கட்சி சார்பில் மக்களுக்காக கேள்வி கேட்டவர் எம் ஜி ஆர் , மகாத்மா அவர்களுடன் இன்றைய நிலையிலும் சரி அன்றைய நிலையிலும்  சரி  அவருக்கு இணையாக யாரும் இல்லை உண்மையான மனதுடன் மக்களுக்காக உழைத்தவர் மகாத்மா

  கடைசி வரை தனக்காக ஒன்றும் சேர்க்காமல் தன் மனைவிக்கு கூட ஒன்றும் சேர்க்காமல் மக்களுக்காக உழைத்தவர் எம் ஜி ஆர்.  

எம் ஜி ஆர் பாணி என்று  இன்றைய நடிகர்கள் கிழவியை பிடித்து முத்தம் கொடுத்தும் ஏழை மக்களுக்கு ஒரு கிலோ அரிசியையும் போடோவுக்கு போஸும் கொடுத்து அதை பத்திர்க்கையில் கொடுத்தால் மட்டும் பொதுசேவை  என மக்களை ஏமாற்றி அரசிலுக்கு வரலாம்  நினைக்கின்றனர் எம் ஜிஆர் உண்மையான மனதுடன் செய்ததை இவர்கள் எப்படி வாய் கூசாமல் எம் ஜி ஆருடன் ஒப்பிடுகின்றனர் என்பது தெரிய வில்லை

     இப்போது விஜய் இந்த வாரம் 
விகடன் இதழில் கொடுத்துள்ள பேட்டியில் ஒரு இடத்தில் கூட நான் மக்களுக்கு உதவ வேணும் அதனால் அரசியலுக்கு வர வேண்டும் என நினைத்தேன் என சொல்லவில்லை (இவர் தன்னை மகாத்மா மற்றும் எம்ஜிஆருடன் ஒப்பிடுகிறார்)

   அதாவது இவர் இப்போது எதிர்பவர்கள் வேறு யாரும் இல்லை இதற்க்கு முன்பு இவர் நடித்த மொக்கை படங்களை பல முறை தொலைக்காட்சிகளில் போட்டு  அதன் மூலம் இவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் வர காரணமாக இருந்தவர்கள் (இன்னும் கூட சன் டைரக்க்டில் விஜய் வேட்டைக்காரன் படத்தின் விளம்பரம் போட்டு இவருக்கு இலவச விளம்பரம் தருவதாக கேள்வி )

   அவர்களுடன் சேர்ந்து வியாபாரம் செய்யும்போது அவர்களை எதிர்த்து இருந்தால் நிச்சயம் விஜய் அவர்களை பாராட்டி இருக்கலாம் இலங்கை பிரச்சினையில் ஆளுங்கட்சி சரி இல்லை என்று இவர்களை எதிர்த்து இருந்தால் பாராட்டலாம் இல்லை தமிழ் நாட்டில் விலைவாசி உயர்வு என்று சொல்லி இருந்தால் இவரை பாராட்டி இருக்கலாம் 300  மூட்டை அரிசியும் ஒரு சில நோட்டு புத்தகங்களையும் செய்யும் ஒவ்வொரு சின்ன சின்ன உதவியும் பெரிதாக அனைவரும் அறியும்படி செய்து அதுதான் அரசியலுக்கு வரும் வழி என்று உங்கள் போன்றோருக்கு யார் சொன்னார்கள் என்பது தெரிய வில்லை

  தமிழ் நாட்டில் சரியான கல்வி வேலை வாய்ப்பு தரும் யாரும் வர மாட்டார்களா என நினைக்கும் மக்களுக்கு சரியான
தலைவனாக ஆரம்பத்திலே உங்களுக்கு எந்த முகாந்திரமும் இல்லை

     இது நாள் வரை லாபம் வரும் வரை வியாபாரம் செய்து விட்டு அவர்களால் லாபம் இல்லை என்ற நிலையில் அதாவது உங்களுக்கு பிரச்சினை என்று வரும் போது எதிர்க்கும்  நீங்கள் தமிழ் நாட்டு மக்களை எப்படி காக்க போகிறிர்கள் 
  தமிழ் நாட்டு மக்களுக்கு எத்தனையோ பிரச்சினை இருக்க அதை பற்றி துணிந்து ஒரு குரல் கொடுக்க தைரியம்  இல்லாமல் இன்று ஒரு வியாபார பிரச்சினைக்காக அரசியல் ஆக்கி அதன் மூலம் லாபம் பார்ப்பது ?
   உங்களின் இந்த காவலன் படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே பல பிரச்சினைகள் இருந்தது எல்லோரும் அறிந்தது அதை எல்லாம் ஒரு நொடியில் மாற்றி சரியாக திசை திருப்பி விட்டிர்கள்
   காலம் போன காலத்தில் இளைஞன் என்ற படம் மட்டும் வராமல் இருந்து இருந்தால் உங்கள் நிலை அதோ கதிதான் உங்களுக்கு கிடைத்த இளைஞன் என்ற துருப்பு சீட்டை மிகவும் அழகாக உங்களுக்கு சாதகமாக்கி எல்லோரயும் அதன் பக்கம் திசை திருப்பி உங்கள் முந்தைய படங்கள் மூலம் நஷ்டம் அடைந்த  திரை அரங்க உரிமையாளர்கள் கொண்டு வந்த பிரச்சினையை அழகா திசை திருப்பி விட்டிர்கள்
(அந்த விசயத்தில் நீங்கள் ஒரு சிறந்த  அரசியல்வாதி என நிருப்பிதுவிட்டிர்கள் )
  மக்கள் பிரசினைகாக நான் அரசியலுக்கு வர நினைத்தேன் என்று சொல்லி இருந்தால் நிச்சயம் நாங்கள்
எல்லாம்



வரவேற்போம் இப்போது எங்களுக்கு தேவை உண்மையில் மக்களுக்கு உழைக்க நினைக்கும் ஒரு தலைவன்தான் என்னிடம் கோடிகணக்கில் பணம் இருக்கு இனிமேல் மக்களை ஏமாற்றி சம்பாதிக்க நினைக்க வரவில்லை உண்மையில் தமிழ் மக்களுக்குக்ம் தமிழ் நாட்டிற்கும் உதவி செய்ய வேணும் அதனால் தான் அரசியலுக்கு வருகிறேன் என்று நீங்கள் சொல்லி இருந்தால் 
இன்றைய இளைய தலைமுறைக்கு தேவை தமிழ் நாட்டை இந்தியாவில் வேலைவாய்ப்பில் கல்வியில் முதல் இடத்திற்கு கொண்டு செல்ல (உண்மையில் )நினைக்கும் தலைவன் மட்டுமே

      "யார் பேச்சையும் கேட்டு உடனடியா எதிலும் இறங்க மாட்டேன். ஆனா, அரசியலில் இறங்குறதுக்கான அஸ்திவாரத்தைப் பலமாப் போட்டுக்கிட்டே வர்றேன்."
     இதைதான் நான் ஆரம்பத்தில் இருந்து சொல்கிறேன் நண்பர் வினு மற்றும் நாடோடி அவர்கள் உடனடியாக மறுப்பு சொல்லி விஜய் நாட்டு மக்களுக்கு உதவி செய்ய அரசியலில் இறங்குவார் என் எப்படி சொல்வார்கள் என தெரியவில்லை
                  இந்த நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களை பற்றி சொன்னது பற்றி அனைவருக்கும் தெரியும் ரஜினி அவர்கள் அந்த நேரத்தில் இருந்த அரசியல் மாறும் தமிழக சூழ்நிலையை பற்றி பொதுமேடையில் பகிரங்கமாக பேச போக அதனால் அவருக்கு ஏற்பட்ட இடர்பாடுகள் அவர் அரசியலுக்கு வருவார் என்ற சூழ்நிலை உருவாகியது அப்போதும் கூட ரஜினி தன் சுயலாபத்திற்கு அரசியல் வரும் சூழ்நிலையில் அந்த நேரத்தில் அரசியல் வாதிகளை எதிக்கவில்லை
  தான் ஒரு நடிகன் என்பதனை வைத்து அந்த சூழ்நிலையில் அரசியல் வாதிகளை தைரியமாக எதிர்த்த ரஜினி அவர்கள் எங்கே

   தன்னுடைய சுயலாபத்திற்காக அரசியல் பேசும் விஜய் எங்கே இவர் வந்து அரசியலை திருத்துவது இருக்கட்டும் முதலில் இவரை இவர் திருத்தி கொள்ளட்டும் 



'சென்னை குரோம்பேட்டையில் இருக்கிற வெற்றி தியேட்டரில் என்னுடைய 'காவலன்’ ரிலீஸ் ஆனது. அங்கு ஆளுங்கட்சிக்காரங்க வந்து நின்னு, 'விஜய் படத்தை ரிலீஸ் பண்ணாதே... பேனரைக் கட்டாதே... வெளியில போ’ன்னு மிரட்டி அதிகாரம் பண்ணி இருக்காங்க. ரசிகர்களிடம், 'பொறுமையா இருங்க’ன்னு சமாதானப்படுத்திவெச்சேன். அந்த ஏரியாவில் தண்ணீர் கஷ்டம் இருக்கு. கரன்ட் தட்டுப்பாடு இருக்கு. ரோடு சரி இல்லை, சாக்கடை வசதி இல்லைன்னு என்னென்னவோ பிரச்னைகள் இருக்கு. அதையெல்லாம் தீர்க்கத்தானே மக்கள் ஓட்டு போட்டுத் தேர்ந்து எடுத்தாங்க? விஜய்யிடம் சண்டை போடுறதுக்கு இல்லையே? 'காவலன்’ படம் ரிலீஸாகாமல் கலாட்டா பண்றதுக்கு இல்லையே?

     நீங்கள் சொல்வது போல தண்ணிர் கஷ்டம் இருக்கு  கரண்ட் தட்டுபாடு இருக்கு சாக்கடை பிரச்சினை இருக்கு என்று சொல்லும் நீங்கள் அந்த பிரச்சினைகள் ஏதோ உங்கள் காவலன் படம் வந்த பின்பு வந்தது போல சொல்கிறிர்கள்  இந்த பிரச்சினைகள் பல நாட்களாக தமிழ் நாட்டில் இருக்கு விஜய் அப்போது எல்லாம் அவர்களுடன் சேர்ந்து வியாபாரம் செய்யும்போது தெரியவில்லையா ?இப்போது உங்கள் பிரச்சினை வந்த உடன் ரசிகர்களை வீணாக அரசியல் விளையாட்டில் ஈடுபடுத்தி உங்கள் தரப்பு பக்கம் சரி என சொல்ல வேணாம்
     உங்களுக்கு ஒரு பிரச்சினை வந்த உடன் அரசியல் பேசும் நீங்கள் எல்லாம்
       அதே பேட்டியில் அவர் சொன்ன வரிகள் படிப்பதற்கே இவர் எப்படி பட்டவர் என்பதை நிருப்பிறது
"சம்பந்தப்பட்டவங்க இந்தப் பேட்டியைப் படிச்சுட்டு... என் வீட்டில் கல் எறியலாம். என்னை வழி மறிச்சுத் தாக்கலாம். எந்த ரூபத்திலும் எனக்கு ஆபத்து தரலாம். ஆனா, அதுக்குஎல்லாம் நான் கவலைப்படவே இல்லை!''"
   உங்களை யாரும் எதிர்க்கவில்லை மிஸ்டர் விஜய் நீங்களே இப்படி அறிக்கை விட்டு இப்படி ரசிகர்களை சூடேற்றி லாபம் பார்க்க நினைப்பது எந்த வகையில் நீதி சார் "

 உங்களுக்கு எப்படி உங்கள் குடும்பம் குழந்தை அப்பா அம்மா எப்படி முக்கியமோ அதே போல உங்கள் படங்களை பார்த்து உங்களை நம்பி இருக்கும் ரசிகர்களை உங்கள் லாபத்திற்கு பயன்படுத்தலாம்
  "நீங்கள் சொல்வது போல உங்களை மக்கள் எந்த நிலையலும் அரசியலுக்கு கூப்பிடவில்லை இப்படி நீங்களே உங்களை அரசியல் தலைவர் போல அறிக்கை விட்டு இப்படி செய்வது ஞாயம் சார் 



இது எல்லாம் என் ரசிகர்களுக்குத் தெரியும். ரசிகர்களுடன் என்னை வாழவைக்கும் பொதுமக்களும் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டுதான் இருக்காங்க. குரோம்பேட்டை முதல் குக்கிராமம் வரை இந்தப் படம் ரிலீஸ் ஆகிறதுக்காக அனுபவிச்ச வேதனையும் சேர்த்து, என்னை நிறைய நிறைய யோசிக்க வைக்குது.
அதனால, அடுத்தடுத்து நான் போக வேண்டிய பாதையை 'காவலன்’ ரிலீஸ் தீர்மானிச்சு இருக்கு. இனி மேல்தான் மனம் திறந்து பேசப்போற உண்மையான சினிமா ரிலீஸ் ஆகப் போகுது!'' என்றார் விஜய்!

       தமிழ் நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்க அப்போது எல்லாம் வராத மக்கள் மீது பாசம் தன்னுடைய படம் பிரச்சினையில் மாட்டும்போது அதை அரசியல் ஆக்கும் இது போன்ற அரசியல் வாதி நடிகர்களை தான் வேண்டாம் என்று சொல்கிறேன் 



சில உண்மையான ஹீரோக்கள் (திரையில் இல்லை )பற்றி நான் எழுதிய பதிவுகளை படிக்கவும் பிறகு என் மீது குறை இருந்தால் சொல்லவும்


நாராயணன் கிருஷ்ணன் :(இவர் போன்ற உண்மையான ஹீரோக்கள் பற்றி எழுத யாருக்கு நேரம் இல்லை )   
" கைநிறைய சம்பளம் வெளிநாட்டு வேலை என்றால் சராசரி இளைஞன் எல்லோருக்கும் கனவு ஆனால் அப்படி கிடைத்த வாய்ப்புகள் எல்லாம் விட்டு விட்டு
தன் மனதை பாதித்த  ஒரு விசயத்திற்காக தன்னுடைய வெளிநாட்டு வேலை  கைநிறைய சம்பளம் எல்லாம் விட்டு விட்டு இன்று மன நிலை பாதித்த மற்றும் தன்னுடைய உணவை தன்னால் சம்பாதிக்க முடியாத நிலையில் உள்ள வயதானவர்களுக்கு உணவு வழங்குவதை ஒரு சேவையாக செய்வதை இவர் செய்கிறார் 


உண்மை ஹீரோவுக்கு வாக்களிப்போம்



சாவி ராஜாவத் :

மக்கள் சேவைக்காக  தன்னுடைய மிகபெரும் கார்பரேட் நிறுவன வேலை விட்டு மக்கள் சேவை இவரை பற்றி எத்தனை பதிவு எழுதி இருக்கோம்

அந்த காலத்தில் வாழ்ந்த கக்கன் காமராஜர் போன்றோர் வேண்டும் என்று சொல்ல வேண்டும் ஆனால் அப்படி சொல்வதை  விட இப்போ நம் கண்ணுக்கு எதிரில் மக்களுக்கு வாழும் மக்களுக்கு உண்மையாக வாழும் சவி ராஜாவத் போன்ற வேட்பாளர்கள் வேண்டும்


இப்படி ஒரு வேட்பாளர் வேண்டும் பகுதி 2




        நம் தமிழ் நாட்டிற்கு உண்மையில் உதவி செய்யும் ஒரு நல்ல மனிதர் தேவை அரசியல் நடிகர்கள் இல்லை



   இந்த கருத்தை படித்து விட்டு என்னை திட்டும் முன் இந்த  பதிவில் நான் சொன்ன விஷயத்தை மட்டும் புரிந்து கொண்டால் போதும் தேர்தல் வரும் நேரத்தில் அதுதான் நமக்கு தேவை

 பதிவு பிடித்து இருந்தால் தமிழ்மணத்தில் மறக்காமல்  வாக்களிக்கவும்

   






10 comments:

  1. ஒரு வரலாற்று சிறப்புமிக்க பதிவை எழுதியிருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. பொட்டில் அடித்தார்ப்போல் சொல்லியிருக்கிறீர்கள். நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி!

    ReplyDelete
  3. மக்கள் சேவைக்காக தன்னுடைய மிகபெரும் கார்பரேட் நிறுவன வேலை விட்டு மக்கள் சேவை இவரை பற்றி எத்தனை பதிவு எழுதி இருக்கோம்

    ..... :-(

    ReplyDelete
  4. //மக்களுக்காக உழைத்தவர் எம் ஜி ஆர்// செத்தவன்களைப் பத்தி குற்றம் சொல்லக் கூடாதுதான். அதற்காக எம் ஜி ஆர் ஆட்சி ராம ராஜ்ஜியம் என்றெல்லாம் ஒப்புக் கொள்ள முடியாது. இலவசம் கொடுக்கும் கேட்டா வழக்கத்தை எர்ப்படுத்தியதே இவர்தான். இவரது ஆட்சியில் மலையாளிகளுக்கு தமிழகத்தில் என்னென்ன வேண்டுமோ அத்தனையும் செய்து கொடுத்து அவர்களை கொழுக்க வைத்தார். ஒழல் தலைவிரித்தாடியது. அதே வழியில் தான் இன்றைய மஞ்சள் துண்டாரும் இலவசம் வாரி வீச ஆரம்பித்துள்ளார். அவர் பண்ணி இன்னொரு மிகப் பெரும் தவறு ஜெயலலிதா என்னும் ஊழல் பெருச்சாளியை உள்ளே கொண்டு வந்தது. இன்றைய கேவலமான ஆட்சியை விட அந்தக் கேவலம் பரவாயில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம், நல்லா ஆட்சி என்று சொல்லிக் கொள்ள அந்த கோமாளி நடிகர் எதுவும் செய்துவிடவில்லை.

    ReplyDelete
  5. ரஜினி அரசியலுக்கு வந்தால் எப்படி இருக்கும் கொஞ்சம் சொல்லுகள்

    ReplyDelete
  6. //இன்றைய இளைய தலைமுறைக்கு தேவை தமிழ் நாட்டை இந்தியாவில் வேலைவாய்ப்பில் கல்வியில் முதல் இடத்திற்கு கொண்டு செல்ல (உண்மையில் )நினைக்கும் தலைவன் மட்டுமே// இது ஒரு குறுகிய மனப் பான்மையைக் காட்டுகிறது. அதென்ன சார் இந்தியாவிலேயே முதலிடத்தில் வரணும்னு சொல்றீங்க? அப்ப மத்த மாநிலங்கள் நாசமாப் போகனுமா? நீங்க உங்க மாநிலத்துல எல்லாவற்றையும் நன்றாக செய்து வாருங்களேன், அடுத்த மாநிலத்தை ஒப்பிட்டுப் பார்ப்பது ஏன்? கல்வியில் முன்னேறுங்கள், மருத்துவ செயவையில் முன்னேறுங்கள், விவசாயத்தில் முன்னேறுங்கள், தன்னிறைவு அடைவதில் முன்னேறுங்கள் அதே மாதிரி மற்ற மாநிலங்களும் முன்னேரட்டுமே, அதில்லென்ன தப்பு?

    ReplyDelete
  7. இன்றைக்கு தமிழக அரசு மருத்துவ மனைகள் தான் இந்தியாவிலேயே மிகச் சிறந்த மருத்துவ சேவையை தருவதாக ஒரு முறை அன்புமணி ராமதாஸ் சொன்னார், எல்லோரும் கைத் தட்டினார்கள். கொஞ்சம் பொறுங்கள் என்று இன்னொரு விஷயத்தையும் சொன்னார், "அப்படியென்றால் மற்ற மாநிலங்களில் அரசு மருத்துவ மனைகள் எவ்வளவு கேவலமாக இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்!!". நாம் வேண்டுவது அந்த மாதிரி முதளிடமல்ல, நம் மாநில மருத்துவமனைகள் அப்போலோ மருத்துவமணி மாதிரி ஆகணும், அது முன்னேற்றம், [அது நடக்காதுன்னு சொல்றீங்களா...ஹா...ஹா...], அதே மாதிரி எல்ல மாநிலங்களும் மருத்துவ சேவையில் முன்னேறட்டும், அதை விடுத்து இன்றைக்கு இருக்கும் படியான முதலிடத்தை பெற்று என்ன பிரயோஜனம். இந்த உதாரணம் எல்லா துறைகளுக்கும் பொருந்தும்.

    ReplyDelete
  8. நீங்க சொன்ன கடைசி ரெண்டு நிஜ ஹீரோக்களுக்கு நான் தலை வணங்குகிறேன், ஆனால் இவர்கள் எங்கே ஆட்சிக்கு வரப் போகிறார்கள்? கருணாநிதி மாதிரி நரிகள் தானே varuthu !

    ReplyDelete
  9. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே.. விஜய் சினிமாவோடு இருப்பது நல்லது. தவிர, தேர்தலில் நின்றாலும் ஓட்டுபோடுமளவுக்கு மக்கள் முட்டாள்களாகிவிடவில்லை...

    நாராயணன் கிருஷ்ணன் பற்றி எனக்கு முன்னமே தெரியும். கீழ்கண்ட பதிவில் நான் எழுதியிருக்கிறேன்.

    http://aadav.blogspot.com/2010/10/blog-post_26.html

    ReplyDelete
  10. நாம என்னதான் சொன்னாலும் விஜய் கேட்கமாட்டார்.
    ********
    இதையும் படிங்க: நடிகர் விஜய்யின் நலன் விரும்பி

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை