| |||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||
|
தேர்தல் நெருங்க நெருங்க நேற்றைய கெட்டவர்கள் இன்றைய நல்லவர்கள் ஆவார்கள் .மக்கள் சேவை கடவுள் சேவை என சொல்லும் இவர்கள் தங்கள் சுயலாபத்திற்கு இன்னும் என்ன என்ன பேச்சு சொல்வார்களே
இவர்கள் வந்து நம்மை எல்லாம்?
அதிமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக-முதல் கட்ட பேச்சு
ஜெயலிதா சொன்னது :
குடித்து விட்டு அறையில் அறையில் கிடப்பவர் . ஊழலை ஒழிப்பதும், வீட்டுக்கு வீடு ரேஷன்பொருள் வழங்குவதும் குடிகாரன் பேச்சாக உள்ளது
விஜயகாந்த் சொன்னது :
ஆளுநர் சென்னாரெட்டியையே கொச்சைப்படுத்திய ஜெயலலிதா, என்னைப் பற்றி அவதூறாகப் பேசுவதில் எந்தவியப்பும் இல்லை. யார் என் மீது சேற்றை வாரி வீசினாலும், அவற்றை சந்தனமாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை நான் பெற்றிருக்கிறேன்.
இந்த விவகாரத்திற்கு தேமுதிக தொண்டர்கள் செய்தது
இதேபோல ஸ்ரீரங்கத்தில் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தலைமையில் ஜெயலலிதாவுக்கு கண்டனம்தெரிவித்து போராட்டம் நடந்தது. சேலத்தில் ஜெயலலிதாவின் உருவ பொம்மையை தேமுதிக தொண்டர்கள் எரித்தனர். கும்பகோணத்திலும்ஜெயலலிதாவைக் கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டது.
திமுக கூட்டணியில் ராமதாஸ்
இலங்கை விவகாரம் பற்றி கருணாநிதிக்கு எதிராக ராமதாஸ் சொன்னது
இலங்கையில் இந்தியப் படை நுழைந்து ஈழத்தை உருவாக்கித் தருமானால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியே ஆளட்டும்; 10 ஆண்டு காலத்திற்கு ஆட்சிக்கு வர திமுக முயற்சி செய்யாது என்றெல்லாம் அன்றைய காலத்தில் முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறார். ஆனால், காலத்தின் மாற்றம் காரணமாக இதையெல்லாம் இன்றைக்கு அவர் மறந்துவிட்டதன் விளைவாகத்தான் இலங்கையில் சுமுகநிலை திரும்பிவிட்டது என்று துணிந்து சொல்கிறார். மற்றவர்களும் அதை நம்பவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.
காடு வெட்டி குரு கைது ஆனதை எதிர்த்து
தமிழக அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாகவும், காடுவெட்டி குரு அரசியல் நோக்கத்தில் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது. மத்திய அரசு தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காடுவெட்டி குரு கைது செய்யப்பட்டதை ரத்து செய்து அவரை விடுதலை செய்யுமாறு உத்தரவிடவேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இப்போ இவர்கள் ஒரே கூட்டணி
அண்ணே.. சூப்பர் தொகுப்பு... வாழ்த்துக்கள்..
ReplyDeleteஇதையும் படிங்க:
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வரலாறு
இரட்டை நாக்கு மனிதர்கள்.. நல்ல படம்.
ReplyDelete