Tuesday, August 24

கோடிக்கணக்கில் ஊழலும் தெருக்கோடி இந்தியனும்

 

செய்தி 1
பொதுவிநியோகத் திட்டத்தில் நடைபெற்ற சுமார் ரூ. 1000 கோடி ஊழல் தொடர்பாக அருணாச்சல் பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் கெகாங் அபாங்  கைது

செய்தி 2
இப்போது கேதான் தேசாய் ஊழல் இப்போது அம்பலமாகியிருக்கிறது. ரூ.1800 கோடி பணமும், 1500 கிலோ தங்கமும் அவரிடமிருந்து மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட் டுள்ளது

செய்தி 3
 ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி ஆட்சியில் ரூ.10,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இவைகள் எல்லாம் செய்திகளின் ஒரு பகுதிதான்
தோண்ட தோண்ட இன்னும் எத்தனை ஊழல் பூதம் வர போகுதோ ?

இதற்க்கு முன்பே நான் சொன்னது போல கழுத்தை தாண்டினால் உணவுக்கு கூட வேறு பெயர்தான் 


இருக்க வீடு ,சாப்பிட உணவு என சராசரி ஆசைக்கு கூட ஆசைப்படும் கோடிக்கணக்கான மக்கள் வாழும் இந்த இந்தியாவில் தான் இப்படிப்பட்ட ஊழல் நச்சுப்பாம்புககள் இருக்க யார் காரணம்
ஒரு வகையில் நாமும் தான் ஏன் எதற்கு என்று கேட்க பயம் ,எவன் எப்படி போனா என்ன நாம் நல்ல இருந்த சரி நம் குடும்பம்  நல்ல இருந்தா சரி  என்ற எண்ணமே காரணம்

இதற்க்கு தீர்வு என்று சொல்ல நான் ஒன்றும் பெரிய அறிவாளி இல்லை ஆனால் எனக்கு தோன்றிய சில எண்ணம்கள் உங்களுடன்
போதும் என்ற எண்ணம் எந்த மனிதனுக்கும் இருக்காது அது மனித  இயல்பு
1.நம்மால் முடிந்த அளவிற்கு ஒரு ரூபாயாவது  உண்மையாக கஷ்டப்படும்   ஒருவனுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் வளர்க்க  வேண்டும்
2. படிப்பு விசயத்திலோ வேலைவாய்ப்பு விசயத்திலோ நம்மால் முடிந்த அளவிற்கு அடுத்தவர்க்கு அறிவுரை வழங்க வேண்டும்
(நான் பெரிய வேளையில் வந்து விட்டேன் இனி வேற யாரும் அந்த அந்த வேலைக்கு வர கூடாது என்ற எண்ணம் வராமல் அது சம்பந்தப்பட்ட அறிவுரை வழங்கலாம் )
  3.தேர்தல் நேரத்தில் நன்கு யோசித்து வாக்களிக்க  முனைவோம் .அனைவரையும் மறக்காமல்  வாக்களிக்க வைக்க
   பதிவுகள் போடுவோம்
ஊழல் செய்தவர்களை நாம் ஒன்றும் செய்ய இயலாது .நாம் நம்மால் முடிந்த அளவிற்கு நேர்மையாக லஞ்சம் கொடுக்காமல் வேலை செய்ய முனைவோம்
   
ஜாதிக்கு ஒரு வோட்டு ,நடிக்கனுக்கு ஒரு வோட்டு என்ற எண்ணங்களை மீறி நாம் நிம்மதியாக வாழ ஒரு வோட்டு என்ற எண்ணம் வளர்ப்போம்

நாம் என்னதான் சொன்னாலும் இவர்கள்
திருந்த போவது இல்லை பெற்ற ஒரு குழந்தைக்கு  கோடிக்கணக்கில் ஊழல் செய்து . லட்சக்கணக்கான ஏழைகளுக்கு வாய்க்கரிசி போடும் இவர்களை திட்ட கேவலமான வார்த்தை இல்லாத காரணத்தால்

    ----------------------------------------------------------------------------------------------------------------------------,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


லஞ்சத்தின் வலி என்ற தலைப்பில் நான் எழுதியி சில வரிகள் மறுபதிப்பு 


  மனம் எரிந்து  கொடுத்தவன் காசில் அடுப்பெரிக்கும்
          பிணம் தின்னி பிழைப்பு 


 
   அடுத்தவன் கோவணத்தை உருவி
-தன் மனைவிக்கு
 
பட்டுசேலை என்னும் நிர்வாணத்தை
போர்த்தும் ஈனபொழைப்புகாரன்
  


5 comments:

  1. நல்ல பதிவு....

    ReplyDelete
  2. முதல் மாமூல் நம்ம சைட்,ல இருந்துதானா?

    ReplyDelete
  3. ரொம்ப கஷ்டம் தான்! மக்களின் மன மாற்றம் என்பது உடனே நடக்க கூடிய விசயமில்லை.. இன்னும் காலம் எடுக்கும். நமக்கு சரியான வழிகாட்டுதல் இல்லாததால் தான் மக்களும் அப்படியே சென்று கொண்டு இருக்கிறார்கள்.. எனவே நீங்கள் நினைக்கும் மாற்றம் வர ...வருவது சிரமமான ஒன்று தான்.

    இதெல்லாம் மாற நல்ல தலைவர் அவசியம்.. ஆனால் அது இந்தியாவில் நடக்க வாய்ப்பு மிக மிகக்குறைவு. அதனால்..... மனதை தேத்திக்குங்க.

    ReplyDelete
  4. எழுப‌த்திஐந்தாயிர‌ம் கோடி இந்திய‌ ப‌ண‌ம் உல‌க‌வ‌ங்கியில் உற‌ங்குகிற‌து, ஆட்சிக்கு வ‌ந்த‌தும்
    எழுப‌து நாளில் எழுப்பி திரும்ப‌ கொண்டுவ‌ருவேன் என்றார் பிர‌த‌ம‌ர். அவ‌ரின் ஒரே மூச்சு
    ஒபாமா, ந‌வ‌ம்ப‌ரில் இங்கு வ‌ரும்முன் அணுஆயுத‌ அடிமை ஒப்ப‌ந்த‌ம் ரெடி ப‌ண்ணுவ‌துதான்.
    மக்க‌ளை ஏமாற்ற‌ 2020 ல் வ‌ல்ல‌ர‌சாவோம் என்ற‌ வீண் கோஷ‌ம். ஜிடிபி 8.5%, ப‌ங்கு ச‌ந்தை ஏற்ற‌ம், அந்நிய‌ முத‌லீட்டு சொர்க்க‌ம்(வ‌ன‌ங்க‌ள் நாச‌ம்)என்பார்க‌ள். ஆப்பிரிக்காவைவிட‌ அதிக‌ வ‌றுமையில் இந்திய‌ர்க‌ள் என‌ யுஎன் சொல்லும்.

    ReplyDelete
  5. மீண்டுமொரு சமூக பதிவு , வாழ்த்துக்கள்.

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை