இப்போ இருக்கும் கிரிகெட் விளையாட்டு காயிச்சலில் புது தமிழ் படங்கள் வராது என தெரிகிறது எப்படியும் உலக கோப்பை முடிந்த பின்பு தான் வரும் கிரிக்கெட் நடக்கும் நாட்களில் திரை அரங்கில் ரசிகர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்
போன ஐபில் விளையாட்டு நடக்கும்போதே விண்ணை தாண்டி வருவாயா படத்தை வெளியிட்டு பெரும் வெற்றி அடைய செய்த கௌதம் மேனன் அதே போல இந்த உலக கோப்பை நடக்கும் இந்த நேரத்தில் தன்னுடைய நடுநிசி நாயிகள் படத்தை துணிந்து திரை இடுகிறார்
கௌதம் மேனன் நிச்சயம் உங்களை பாராட்ட வேணும்
நீண்ட நாட்களுக்கு பிறகு வரும் த்ரில்லர் படம் என்ற எதிர்பார்ப்பு இந்த படம் பற்றி ஆரம்பம் முதல் வந்த தகவல்கள் எல்லாம் சேர்த்து இந்த படத்திற்கு ஒரு பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது
கௌதம் மேனன் அவர்களின் சொந்த படம் மனோஜ் பரமஹம்ச ஒளிபதிவு சமீர ரெட்டி நடிப்பு இசை இல்லாமல் ஒரு திரில்லர் படம் எப்படி இருக்கு என்று பார்க்கலாம்
கோ (ஹாரிஸ் இசைக்காகவே பார்க்கலாம் )
அயன் படத்திற்கு பின்பு கேவி ஆனந்த் அவர்களின் இயக்கத்தில் வரும் படம் தமிழில் வரும் பத்திரிக்கையாளர் கதை சிம்பு நடிக்க மறுத்த படம் பாடல்கள் பட்டை கிளப்பும் நேரத்தில் படமும் பட்டையை கிளப்பும் என எதிர்பார்க்கலாம்
இந்த மாதம் வர வேண்டிய படம் உலக கோப்பை ஜுரம் இந்த படத்தை கொஞ்ச நாளைக்கு தள்ளி போட்டுள்ளது
ஏழாம் அறிவு :
ஹிந்தி மொழியல் ஒரு ப்ளாக் பஸ்டர் படம் கஜினி தந்த பின்பு தமிழில் மீண்டும் ஒரு பெரும் ஹிட் கொடுக்கும் முனைப்பில் முருகதாஸ் இயக்கம் படம் படத்திற்கு படம் வித்தியாசம் காட்டும் சூர்யா இந்த படத்தில் எப்படி நடித்து இருப்பார் என்பதே இப்போதைய கேள்வி சென்ற ஆண்டில் சிங்கம் என்ற தமிழில் சூப்பர் ஹிட் கொடுத்த பின்பு வரும் படம் இது பார்க்கலாம் இதுவும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகுமா என்று ?
மங்காத்தா :
அதிகம் ஆர்பாட்டம் இல்லாமல் வரும் அஜித் படம் அசல் படம் போலி ஆனதால் இந்த முறை மங்காத்தா படத்தை சூப்பர் ஹிட் ஆக்கும் முயற்சியில் இருக்கும் படம் ஒரு முதல் அமைச்சர் இருக்கும் மேடையிலே தைரியமாக பேசி அதன் மூலம் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக படமே நடிக்க மாட்டேன் என்று சொன்னவரை மீண்டும் நடிக்க வைத்த படம் படத்தின் கதை களம் கிரிக்கெட் சார்ந்த விஷயம் என்பதால் ஒரு சுவராஸ்யம் இருக்கும்
பொங்கல் பட பிட்டுகள் :
பொங்கல் படங்கள் பற்றி பலர் பலவாறு சொன்னாலும் ஆரம்பத்தில் இருந்து சொன்ன மாதிரி மக்களை சந்தோசமாக சிறக்க வைத்த சிறுத்தை பாக்ஸ் ஆபீஸ் வசூல் மூலம் தயாரிப்பாளர் திரை அரங்க உரிமையாளர் என எல்லோரையும் உண்மையில் சந்தோச பட வாய்த்த படம் படத்தின் நாயகன் மாஸ் ஹீரோ இல்லை ,படத்தின் தயாரிப்பு செலவும் அதிகம் இருந்து இருக்காது மாஸ் ஹீரோ படத்தை விட குறைவான விலைக்கு விற்கப்பட்ட இந்த படம் எல்லோருக்கும் அதிக அளவில் லாபம் கொடுத்து இருக்கும் என்பதில் என்ன சந்தேகம்
ரியல் ஹிட் ராக்கெட் ஹிட் சிறுத்தை
பல தொலைக்காட்சி நிறுவனங்கள் சிறுத்தை படத்தை வாங்க போட்டி போட்டு அதில் விஜய் டிவி அதிக விலைக்கு வாங்கியதில் இருந்தே இந்த படத்தின் பலம் தெரியும்
No comments:
Post a Comment
நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை