Saturday, August 14

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் "சில சிந்தனைகள் "



              சுதந்திரத்தின் அருமை அடிமையாய் இருக்கும் போதுதான் தெரியும் .


நாட்டில் ஆயிரக்கணக்கில் உழல் கொள்ளை லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது .இது மறுக்க முடியாத உண்மைதான் ஆனால் அதே நேரத்தில் 



  :ஒரு சுதந்திர நாட்டின் வாழும் சுகம் இன்றளவில் பிரசினைக்களுக்குள் ஓடும் நாட்டில் வாழும் மக்களுக்கு தெரியும் :

என்ன செய்ய நாட்டில் பல பிரச்சினை இருக்கு விலைவாசி அதிகம் ,உழல் ,சரியான வேலை இல்லை என்று புலம்புவதை விட .
இனி வரும் காலங்களில் நாம் நம் செய்ய வேண்டிய செயல்களில் சரியாக இருந்தாலே போதும்

#தேர்தல் நேரங்களில் வெட்டி பேச்சு பேசுவதை விட நன்கு சிந்தித்து நமக்கு கிடைக்கும் சில ஆதாயங்களை விட  நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைக்கும் கட்சிக்கு வாக்களிக்க முயற்சி செய்ய வேண்டும்

#தேர்தல் நம் நாட்டின் வாழ்க்கை மட்டும் இல்லாமல் நம் வாழ்க்கையும் மாற்ற கூடியது என்பதை நினைத்து சரியான முறையில் நம் வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும்

# புது படம் பார்க்க மூன்று மணி  நேரம் வீணாக்குவதை விட தேர்தலுக்கு செய்யும் ஒவ்வொரு நிமிடமும் நம்
வாழ்க்கை மற்றும் செயல் என்பதை நினைவல் வைக்க வேண்டும்

# இந்தியாவின் முன்னேற்றத்தை தடுக்கும் மதவாத கட்சிகளுக்கு வாக்களிப்பதை தடுப்போம்


#மதம் என்பது எல்லோருக்கும் உள்ளது மதம் உள்ள மனிதானாக வாழ முயற்சி செய்யலாம் மதம் பிடித்து ஆட்டும் மனிதனாக வாழாமல் இருக்க  வேண்டும்

# லஞ்சம் அழிய வேண்டும் என்று பேசுவதை விட நம்மால் முடிந்த அளவிற்கு லஞ்சம் கொடுக்காமல்  நேர்மையாக நாம் செல்ல முயற்சி செய்வோம்

#  மாதம் ஒரு ரூபாயாவது நேர்மையான் முறையில் கஷ்டப்படும்  நபருக்கு உதவ வேண்டும் என்று தீர்மானம் செய்வோம் 


# சுதந்திர நாள் அன்றாவது திரைப்படம் & திரை கலைஞர்கள் தவிர்து சுதந்திர நாள் பற்றி நல்ல விசயங்களுக்கு செலவு செய்வோம் 


#  அரசாங்கம் எல்லா விதத்திலும்
உதவ வேண்டும் என்று நினைக்கும் நாம் .அந்த உதவியை பெற்று உயர்ந்த நிலை அடைந்த உடன் அரசாங்கத்தை நம்பாமல் நம்மால் முடிந்த அளவிற்கு மற்றவர்களுக்கு உதவி செய்வோம் என்று உறுதிமொழி எடுப்போம் 



       
   "நாட்டின் முன்னேற்றம் பற்றி யோசிக்கும் இந்தியானாக வாழ
முயற்சி  செய்வோம் "

         :அனைவருக்கும் என் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் :



4 comments:

  1. சுயநலமிகளின்கையில் இந்த நாடு சிக்கிக் கொண்டிருப்பதால் .. வாழ வழி தெரியாமல் சுமார் 2 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். 80 சதம் பெண்கள் சரியான ஊட்டச்சத்து கிடைக்காமல் இரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த கொடுமைகளுக்கெல்லாம் உச்சமாக, ஒரு வருடத்தில் 2 லட்சம் குழந்தைகள் அதுவும் 5 வயதுக்கு உட்பட்டோரை பட்டினிக்கு பலிகொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

    பொதுச்சொத்துக்கள் தனியாருக்கு விற்கப்படும் அதே நேரத்தில், இந்திய உணவுக்கழகத்தில் தேங்கிக்கிடக்கும் 6 லட்சம் டன் உணவு தானியங்கள் ஏழைகளுக்கு எடுத்து வழங்க திராணியற்றிருக்கிறது அரசு. இத்தனை கொடுமைகளை எதிர்க்க திராணியற்று இருப்பது இந்திய இளைஞர்களுக்கு பெருமையா?.



    இரவில் வாங்கினோம்
    இரவு விடியாது

    சுயநலப் பேய்களை
    சுட்டுப் பொசுக்கிடும்
    சூரியக் கண்கள்
    திறக்காத வரையில் ...

    ReplyDelete
  2. "நாட்டின் முன்னேற்றம் பற்றி யோசிக்கும் இந்தியானாக வாழ முயற்சி செய்வோம் "

    ReplyDelete
  3. ஓட்டு போட்டாச்சி பிரதர்...:)

    ReplyDelete
  4. சுதந்திரதின நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை