Sunday, August 15

கருணாநிதி அவர்களின் சுதந்திர தின திட்டங்களும் எண்ணங்களும்

 சுதந்திர நாள் விழாவில் கருணாநிதி அவர்கள் அறிவித்த திட்டங்களில் சிறந்தவைகள் என நான் நினைப்பது .சரியான முறையில் இடையில் நடக்கும் உழல்கள் இல்லாமல் சரியான  முறையில் நடைமுறை படுத்தினால் வெற்றி தரும் 


அறிவிப்பு 1
உலக இளைஞர்கள் ஆண்டை முன்னிட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி அளிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும். 10, 12ம் வகுப்பு முடித்தவர்கள் மற்றும் எஞ்சினியரிங்  இளங்கலை, முதுகலை பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படும்.  1 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க 50 கோடி ரூபாய் வழங்கப்படும்.

  படிப்பு  என்ற விஷயத்தை மீறி வெற்றி பெற  படிக்கும் மாணவர்களின் பட்டம் என்பதையும் மீறி அவர்களின் தன்னம்பிக்கை மிகவும் முக்கியம் அந்த வகையில் பட்ட படிப்பு படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி என்ற விஷயம் சந்தோஷம் தர கூடியது . இதற்க்கு செலவழிக்கும் தொகை சரியான முறையில் தகுதி வாய்ந்த நபர்களுக்கு சென்றால் நாளைய தலைமுறைக்கு சந்தோஷம் தர கூடிய விஷயம்
அறிவிப்பு என்ற விஷயம் வெற்றி பெற்ற விஷயமாக மாற சரியான வழிகாட்டுதல் தேவை

அறிவிப்பு 2
சாலைகளை சீரமைக்க இந்த ஆண்டு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்

 ஒரு நாட்டின் உண்மையான வசதி என்பது அந்த நாட்டில் இருக்கும் சாலை வசதிகளை வைத்து சொல்லலாம் .
தமிழ் நாட்டில் இருக்கும் மோசமான சாலைகள் சரியான முறையில் மாற இந்த பணம் முழுவதும் ஒப்பந்ததார்களின் ஊழல் இல்லாமல் மக்கள் சேவைக்கு பயன்படும் சாலை வசதிக்கு செலவழித்தால் அதவே  உண்மையான மனிதாபிமான செயல் என கூறலாம்
தாங்கள் போடும் சாலையில் பொது மக்கள் செல்வார்கள் என்பதை விட சாலை போடும் ஒப்பந்ததார்களின் குடும்பமும் போகும் என்று நினைவில் வைத்து நேர்மையாக சாலை போட்டால் அதுவே உண்மையான வெற்றி


அறிவிப்பு 3
சிறு, குறு விவசாயிகளின் பம்பு செட்களில் உள்ள பழைய மின் மோட்டார்களை நீக்கிவிட்டு புதிய மின் மோட்டார்கள் அரசின் சார்பில் இலவசமாக பொருத்தித் தரப்படும். மற்ற விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்துடன் புதிய மோட்டார் பொருத்தித் தரப்படும்

 விவசாயம் என்பதே மறைந்து காங்க்ரிட் வீடுகளாக விலை நிலங்கள் எல்லாம் மாறி வரும் காலத்தில் இன்னும் விவசாயம் வளர சிறப்பான திட்டங்கள் வர வேண்டும் அதவே உலகை அச்சுறுத்தும் விளைவை வாசி உயர்வை எதிர்க்கும் உண்மையான ஆயுதம்

அறிவிப்பு 4

தமிழகத்தில் 21 லட்சம் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக 6 ஆண்டுகளில் மாற்றும் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் இந்த ஆண்டு தொடங்கப்படுகிறது

  மழைகாலத்தில் வெள்ளத்தில் பிரச்சினை ,வெயில் காலங்களில் தீபிடிக்கும் பிரச்சினைகள் என பல பிரச்சினைகளில் வாழும் ஏழை ,நடுத்தர மக்களின் கனவான் காங்க்ரிட் வீடுகள் நீண்ட நாட்கள் உழைக்கும் வகையில் ஊழல் இல்லாத முறையில் நேர்மையாக கட்டி தரும் நிறுவனங்களின் கையில் இந்த திட்டத்தை ஒதுக்கினால் சந்தோஷம்


  மொத்தத்தில் ஒவ்வொரு ஆட்சியிலும்  அறிவிப்புகள் என்பது பிரமாண்ட படத்திற்கு ஈடாக  எதிர்பார்ப்பு இருப்பது வாடிக்கை அதன் செயல்பாடுகள் உழல் என்னும் அஷ்திர்வாரம் மோசமாக இருக்கும் போது மக்களுக்கு பயன் இல்லாமல் போவது வாடிக்கை .
அது மாறி இல்லாமல் இந்த திட்டங்கள் சரியான முறையில் மக்களுக்கு கிடைக்க தனி கவனம் செலுத்த வேண்டும்



பேஸ்புக் தொடரும் நண்பர்களுக்கு நன்றி !
தொடர போகும் நண்பர்களுக்கும் நன்றி !!







1 comment:

  1. //உழல்கள் இல்லாமல் சரியான முறையில் நடைமுறை படுத்தினால்**/
    இது Disclaimer-ரா? ஊழல்களின்றி , சரியான முறையில் நடைமுறைப்படுத்தப் படும் எல்லாத் திட்டங்களுமே சிறந்தவை தாம்.
    //*பணம் முழுவதும் ஒப்பந்ததார்களின் ஊழல் இல்லாமல் மக்கள் சேவைக்கு பயன்படும் சாலை வசதிக்கு செலவழித்தால்**/
    இது அடி மடியிலேயே கை வைக்கும் செயல்.

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை