முதலில் இந்த செய்தி படித்தவுடன் சந்தோஷம் .ஒவ்வொரு விசயத்திற்கும் கால்கடுக்க நிறைக்க வேண்டியதில்லை வீட்டில் இருந்தே நம் வேலைவாய்ப்பு நிலவரம் சரி பார்த்து விடலாம்
ஆனால் எனக்கு சந்தேகம் வந்த விஷயம் ஆன்லைன் மூலம் இதன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று கால்கடுக்க காத்திருக்காமல் வீட்டிலிருந்த படியே சான்றிதழ்களை பதிவு செய்யலாம்.
கால் கடுக்க நிற்க வேண்டியதில்லை யார் இப்போது கால் கடுக்க நிற்கிறார்கள் நடுத்தர வீட்டு மாணவ மணிகள் தான் அவர்கள் கால் கடுக்க நின்று பதிவு செய்யும் நேரத்திற்குள் வசதி உள்ள வீட்டு மாணவர்கள் வீட்டில் அழகாய் டீ குடித்து கொண்டு ஒரு சராசரி மாணவனை விட முன்னே சீக்கிரமகா பதிவு செய்து விடுவார்கள்
இதனால் பாதிக்கபடுவது யார் சராசரி ஏழை மாணவன் தான் எல்லோரு வீட்டிலும் கணினி வசதி என்பது சாத்தியம் இல்லை அதிலும் விரைவான இணைய வசதி என்பது இன்னும் குறைவு அப்படி இருக்கும் போது இணையம் மூலம் பதிவு நிலவரம் பார்க்கலாம் என்பது வரவேற்க வேண்டிய விஷயம் ,
இணையம் மூலம் பதிவு என்பது யோசித்து முடிவு வேண்டிய ஒரு முக்கிய விஷயம் கூட
இப்போது இருக்கும் கால கட்டத்தில் போலி மதிப்பெண் சான்றிதழ் எது உண்மை சான்றிதழ் எது என்பதை நேரில் பார்க்காமல் பதிவு செய்வது சரியில்லை .
காரணம் 1
ஒரு நாள் பதிவு மூப்பு தவறினாலும் அரசு பணிக்காக பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதால் சான்றிதழ் வாங்கிய உடனேயே பதிவு செய்ய கட்டுக்கடங்காத கூட்டம் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் கூடி விடு கிறது.
காரணம் 2
இடைநிலை ஆசிரியர் தேர்வு முடிவுகள், பிஎட் தேர்வு முடிவுகள் வெளியிடும் போது சான்றிதழ் பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதற்காக முந்தைய நாள் இரவு, அதிகாலையிலேயே வந்து கால் கடுக்க காத்துக் கிடக்கின்றனர்.
தீர்வு
இதற்க்கு ஏற்ற மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் அவர்கள் படித்த பள்ளியில் சிறப்பு அலுவலர்கள் போட்டு அந்த அந்த பகுதியில் பதிவு செய்து அலுவலர்கள் சான்றிதல்களை சரி பார்த்த பின்பு அந்த அந்த இடத்தில இருந்து இணையம் மூலம் பதிவு செய்ய வசதி செய்ய வேண்டும்
போலி மதிப்பெண் சான்றிதழ் மூலம் இப்போது நடந்த பெரும் உழல் வந்த இந்த நேரத்தில் ஒவ்வொரு மதிப்பெண்ணையும் சரி பார்த்த பின்பே பதிவு செய்ய வேண்டும்
இணையம் மூலம் அணைத்து வேலை வாய்ப்பு அலுவலகம்
அனைத்தையும் முடித்து செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்த நாளன்று துவக்கி வைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
:புதுமைகள் வரும் நேரத்தில் சரியான முறையில் அனைவருக்கும் அந்த வசதி செல்ல ஏற்ற சூழ்நிலைகள் உருவாக்க வேண்டும்:
:புதுமைகள் வரும் நேரத்தில் சரியான முறையில் அனைவருக்கும் அந்த வசதி செல்ல ஏற்ற சூழ்நிலைகள் உருவாக்க வேண்டும்:
No comments:
Post a Comment
நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை