Monday, August 16

அருமை குழந்தைகளுக்கு அம்புலிமாமா இணைய தளம்

ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொழுதுபோக்கு இருந்து இருக்கும் .அதிலும் 1980 1990 களின் சிறுவர்களின் முக்கிய பொழுது போக்கு சிறுவர் இதழ்கள் தான் கோகுலம் ,பூந்தளிர் .அம்புலிமாமா ,ராணி காமிக்ஸ் .லயன் ,திகில் .முத்து என சொல்லி கொண்டு போகலாம் .ஆனால் கால ஓட்டத்தின் மாற்றங்களின் தொலைக்காட்சி ,இணையத்தின் பயன்பாடு அதிகம் வந்த பின் புத்தகம் படிப்பது என்பது மிகவும் குறைவு


இப்போது வரும் சொல்லும் படியான இதழ்கள் என்றால் சுட்டி விகடன் ,மற்றும் கோகுலம் தொலைக்காட்சி மூலம் கார்டூன் பார்க்க ஆசைப்படும் குழந்தைகள் புத்தக படிப்பு என்பது குறைந்து விட்டது


அதிலும் கார்டூன் நெட்வொர்க் ,போகோ .டிஸ்னி .சுட்டி போன்ற தொலைகாட்சிகள் அதிகம் வந்த இந்த காலத்தில் குழந்தைகள் இதழ் என்ற விஷயம் இல்லாமல் போக இன்னும் சாத்யம் அதிகம் உள்ளது

அந்த வகையில் தமிழில் பழமையான குழந்தைகள் இதழ் என்றால் அது அம்புலிமாமா என சொல்லலாம் .திரைபட தயாரிப்பகட்டும் குழந்தைகள் இதழ் ஆகட்டும் இந்திய முழுவதும் சாதனை செய்த இதழ் நாகி ரெட்டி அவர்களின் சந்தமாமா (அம்புலி மாமா )

அப்படிப்பட்ட இதழை 1947 முதல் 2000 வரை சிறப்பான முறையில் படிக்க சிறந்த வசதிகள் செய்து உள்ளது சந்தமாமா இணைய தளம்

பழைய அம்புலி மாமா இதழ்களை படிக்கும் போது ஒரு தனி உற்சாகம் உண்டாகிறது
பழைய இதழ்கள் மட்டும் இல்லாமல் பழைய விளம்பரங்கள் பார்க்க தனி வசதி உள்ளது .

பழைய கட்பெரி சாக்லேட் ,பாப்பின்ஸ் ,கோல்கேட் ,எம் ஜி ஆர் எங்க வீட்டு பிள்ளை ,அளிபாவும் 40 திருடர்கள் என பழைய திரைப்படங்களின் விளம்பரம்
பீர்பால் கதைகள் கம்ப்யூட்டர் டிப்ஸ் குறும்புகார கோபாலு என பல படைப்புகள் பார்க்கலாம் ,படிக்கலாம்

உங்கள் குழந்தைகளுக்கு அறிமுக படுத்த சிறந்த் தளம்

7 comments:

  1. குழந்தைகளுக்கு அருமையான தளத்தை சொல்லியிருக்கீங்க. நன்றி

    ReplyDelete
  2. ஆஹா என்ன என் சிறு்வயதுக்குக் கூட்டிச் சென்ற அரும்பாவூர் வாழ்க..

    ReplyDelete
  3. wow! Thank you very much for sharing this info. இப்போவே பார்க்கிறேன். :-)

    ReplyDelete
  4. உங்களை தொடர்பதிவெளுத அழைத்துள்ளேன், முடிந்தால் மறுக்காமல் எழுதுங்கள்.

    http://eppoodi.blogspot.com/2010/08/blog-post_17.html

    ReplyDelete
  5. சூப்பர்!! பகிற்விற்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  6. இப்படி ஒரு இணையத்தளம் தான் படிக்க ஆசைப்பட்டேன்.. ரொம்ப நன்றி சார்!!

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை