இளையராஜா இந்த பெயர் இல்லாமல் தமிழ் சினிமா என்றால் நிச்சயம் அது தமிழ் சினிமாவாக இருக்காது என்னதான்
இளையராஜாவை பிடிக்காது என்று இன்றைய காலத்தில் ஒருவர் சொன்னார் என்றால் அது நூறு சதம் பொய்யாக இருக்கும் தமிழ் சினிமாவில் ராஜாவின் பாடல் தினமும் ஒரு முறையாவது கேட்காதவன் நிச்சயம் இருக்க மாட்டான் (எனக்கு ரஹ்மான் அப்படின்னா ரொம்ப பிடிக்கும் ரஹ்மான் பாட்டை எந்த அளவிற்கு கேட்கிறேனோ அதை விட அதிக அளவில் ராஜா அவர்களின் பாடல்களை கேட்டு இருப்பேன் )
இதற்க்கு முன்பு ராஜ அவர்களை பற்றி தவறாக பதிவை போட்டவன் இப்போ ஆஹா ஓஹோ என்று சொல்கிறானே என நீங்கள் கேட்கலாம் இதற்கும் காரணம் இருக்கு ராஜா அவர்களை பற்றி நான் எழுதும் போது கூட நண்பர் மாணவன் சொன்ன கருத்துக்கள் இப்போது நினைத்து பார்கிறேன் :
நண்பரே, நான் ராஜாவின் வெறியனாக இருபபதால் எனக்கு தெரிந்தவற்றை பகிர்ந்துகொள்கிறேன்
சிம்பொனி இசைத்தொகுப்பின் உரிமை ஏவிஎம் நிறுவனத்திடம் இருப்பதாக தகவல்...
மேஸ்ட்ரோ பட்டம் வேறு இசைக்காக வாங்கியது நண்பரே இதற்கும் சிம்பொனிக்கும் சம்மந்தமில்லை
ராஜா என்றுமே ராஜாதான் அவரின் சாதனைகளை பட்டியலிடமுடியாது ஏனென்றால் அவர் செய்த அனைத்து பாடல்களுமே சாதனைதான்....
இதை ராஜாவின் வெறியனாக இருப்பதால் சொல்லவில்லை அவரை விட அவரின் இசைதான் அதிகம் பேசியிருக்கும் என்பதை அவரின் இசையை கேட்டாலே புரியும்...
1976 அன்னக்கிளி திரைப்படம் மூலம் தனது இசை வாழ்வை தொடங்கி இன்று வரை இசைக்காகவே தன்னை அர்ப்பனித்து கொண்டிருக்கும் ஒரு ஜீவன்
அவரின் தமிழிசை உள்ளவரை ராஜா வாழ்ந்துகொண்டிருப்பார் இசை வேறு ராஜா வேறு இல்லை இரண்டுமே ஒன்றுதான்..
“நேற்று இல்லை நாளை இல்லை எப்பவுமே ராஜா ராஜாதான்”
வாய்ப்பிற்கு நன்றி
என்றும் நட்புடன்
மாணவன் (மேஸ்ட்ரோஸ் பேன்ஸ் கிளப்)
நண்பர்களுடன் பேசி கொண்டு இருக்கும் போது தொலைக்காட்சியி அந்த ஒரு மணி நேரமும் இளையராஜா அவர்களின் பழைய பாடல்கள் போய் கொண்டு இருந்ததது மூன்றாம் பிறை ,அன்னக்கிளி,ஜானி ,இன்னும் பல படங்கள் அந்த ஒரு மணி நேரமும் ஓடிய எந்த பாடலையும் சரி இல்லை என சொல்ல முடியாது இதுதான் ராஜா.
ராஜா சொன்ன சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லை (ஏண்டா அவர் மலை மாதிரி நீ அப்படின்னு நீங்கள் சொல்றது எனக்கு கேட்கிறது )
சரி இப்போ ராஜா அவர்களின் இசைக்கு வருவோம் தமிழ் திரை உலகின் பல படங்களுக்கு ஜீவனாக இருந்ததே ராஜா அவர்களின் பின்னணி இசை மட்டுமே திரை அரங்கில் சோகமான காட்சியை இன்னும் சோகமாக மற்றும் திறமை ராஜா அவர்களின் இசைக்கு மட்டுமே
ராஜாவை பற்றி சொல்லும்போது இந்த பாட்டுதான் எனக்கு ரொம்ப பிடிக்கும் என எளிதில் சொல்ல முடியாது அதுதான் ராஜா அவர்களின் திறமை இல்லை அப்படி சொல்லித்தான் ஆவணும் என்றால் அதை பற்றி எழுதவே பல நூறு பதிவுகள் போட வரும்
அதிலும் அவரின் முதல் படமான அன்னக்கிளி பாடல்களை கேட்க்க கேட்க்க ஒரு தனி சுகம் இப்போது வந்த ரஹ்மானின் 127 ஹவர்ஸ் பாடல் தொகுப்பை கேட்கிறேனோ அதே அளவில் ராஜா அவர்களின் பாடல்களையும் கேட்கிறேன்
இளையராஜாவின் இசையை பற்றி பேசும்போது இசை எந்த அளவிற்கு என்னை கவர்ந்ததோ அதை விட அதிக அளவில் என்னை கவர்ந்தத்தது ராஜா அவர்களின் குரல் சோகம் ,காதல் ,என அவர் பாடிய பாடல்கள் ஒரு பூபாளம்
தென்பாண்டி சீமையிலே இருக்கட்டும் இப்போது வந்த மச்சான் மச்சான்(சிலம்பாட்டம் ) ஆகா இருக்கட்டும் ராஜா அவர்களின் குரலில் இருக்கும் கவரும் தன்மை வேறு எந்த பாடகருக்கும் கிடைக்குமா என்பது சந்தேகமே
1976 அன்னக்கிளி 2011 அய்யன் வரை உங்கள் இசை ராஜாங்கம் தொடர உங்களின் இசை மீது இருக்கும் ஆர்வம் மட்டுமே காரணம்
உங்கள் பாடல்கள் பல கேட்ட ரசிகன் என்ற வகையில்
உங்களுடைய அழகார் சாமின் குதிரைக்கு காத்திருக்கும் உங்கள் பாடல்களை ரசிக்கும் ரசிகன்
ALSO READ
சிறுத்தை சூப்பர் ஹிட் ,ஆடுகளம் ஹிட் ,காவலன் ?
*******உங்கள் வோட்டையும் மறக்காமல் போடவும் ******
எல்லாம் தேர்தல் மாதிரி ஆகி விட்டது
அன்பின் நண்பருக்கு வணக்கம் நலமா??
ReplyDelete//ஒரு ரஹ்மான் ரசிகனின் இளையராஜா பற்றிய பார்வை//
சரியான் புரிதலுடன் தெளிவான பார்வை....
உங்களைப்போன்ற ரஹ்மான் ரசிகர்களும் ராஜாவின் இசையை விரும்பி கேட்பதற்கு காரணம் அவரின் இசையில் உள்ள ஜீவன், ஒருவிதமான தெய்வீக இசையும்தான்....
ராகதேவனைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்துகொண்டதற்கு மிக்க நன்றி நண்பரே
//ராஜா சொன்ன சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லை (ஏண்டா அவர் மலை மாதிரி நீ அப்படின்னு நீங்கள் சொல்றது எனக்கு கேட்கிறது )//
ReplyDeleteராஜாவைப்பற்றி சில குறைகளும் விமர்சனங்களும் எதிர்மறை கருத்துக்களும் உண்டுதான் அதை மறுக்கவில்லை, ஆனால் அதெல்லாம் அவரின் இசைக்கு முன்னால் சாதரணமாகிவிடுவதுதான் ராஜாவின் பலம்...
Yes, Always Raja is a Raja
ReplyDeleteஇப்பொழுது ராஜா சாரின் விளம்பரம் ஒன்று வருகிறது பார்த்தீர்களா?
ReplyDeleteமெய் மறந்து ரசிக்க வைக்க இவரால் மட்டுமே முடியும்!!!
என்றாலும் ரஹ்மானை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை, இருவருமே லெஜெண்ட்ஸ். ஒருவருக்கொருவர் ஈடு!
திரைபாடல்.காம் ஆதாரத்தின் படி ராஜா இசையமைத்த திரைப்படங்களின் எண்ணிக்கை 745.ரகுமான் இசையமைத்த திரைப்பாடல்களின்[திரைப்படங்கள் அல்ல] எண்ணிக்கை 468.ரகுமான் இசையமைத்த பாடல்களின் எண்ணிக்கையே ராஜா இசையமைத்த படங்களின் எண்ணிக்கையை இன்னும் தொட வில்லை.ரகுமான் திறமைசாலி தான்.ஆனால் அவரை ராஜாவோடு ஒப்பிட்டு பார்க்காதீர்கள் நண்பர்களே.
ReplyDelete//ரஹ்மானை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை//
ReplyDeleteஒங்கள யாருய்யா விட்டுக்கொடுக்க சொன்னா?.ரெண்டு கண்ணுல எந்த கண்ணு நல்ல கண்ணுன்னு சொல்ல முடியும்?.அவரு அவரு.இவரு இவரு.அவ்ளோதான்.ஒப்பிடாதீர்கள்