Thursday, January 20

நம்பரை மாற்றாமல் நெட்வொர்க்கை மாற்றலாம் விவரங்கள்



    எனக்கு இந்த நம்பர் வேணும் ஆனால் எனக்கு இந்த கம்பெனி வழங்கும் சேவை வேணாம் என புலம்புவர்களுக்கு சந்தோசமான ஒரு  செய்தி 

   நாம் விரும்பும் நிறுவனத்திற்கு நாம் விரும்பியபோது மாறி கொள்ளலாம் இந்த வசதி இன்று முதல் இந்திய முழுவதும் அறிமுகம் செய்து வைத்தார் பிரதமர்

  அப்பாடி இனிமேல் தொல்லை தரும்  கம்பெனியில் இருந்து நமக்கு பிடித்த தொலை தொடர்பு நிறுவனத்திற்கு மாறி கொள்ளலாம் 



    இதை பற்றி சில விவரங்கள் உங்களுக்காக
 1 . நாம் விரும்பிய நிறுவனத்திற்கு மாறும் முன் இப்போது நாம் பயன்படுத்தும் நிறுவனத்தில் ஏதும் கணக்கு வழக்குகள் நிலுவையில் இருக்க கூடாது (அதாவது இந்த் நிறுவனத்தில் பேசும் வரை பேசி விட்டு அடுத்த நிறுவனம் மாறலாம் என்று நினைக்க
இல்லை )
 
2 .உங்களுக்கு பிடிக்காத சரியான வசதிகள் இல்லாத தொலை தொடர்பு நிறுவனத்தில் இருந்து இனி தொல்லை இல்லாமல் எளிதில் மாறி கொள்ளலாம்


3 . நீங்கள் இந்த வசதிக்கு மாற வெறும் ருபாய் 19 மட்டுமே  இந்த் மாற்றம் நிகழ ஒரு வாரம் ஆகும் ,புதிய நிறுவனத்திற்கு மாறிய பின்பு மூன்று மாதத்திற்கு வேறு நிறுவனத்திற்கு மாற முடியாது 

 
4 .இந்த வசதிக்கு மாற முதலில் நீங்கள் உங்கள் மொபைலில் இருந்து "PORT "  ஆங்கிலத்தில் எழுதி இடம்(SPACE) விட்டு மொபைல் எண்ணுடன்   1900 என்ற எண்ணிற்கு எஸ் எம் எஸ் செய்ய வேண்டும் இதற்க்கு தொலை தொடர்பு துறை துறை ஒரு யுனி கோட்(
UPC - Unique Porting code) நம்பரை அனுப்பும்  அந்த எண்ணுடன் வாடிக்கையாளர் விரும்பும் தொலைதொடர்பு நிறுவனத்திற்கு விண்ணப்பித்தால் சேவை நிறுவனம் மாற்றி தரப்படும் ,இதற்க்கு ருபாய் 19 கட்டணம் வசுலிக்கபடும்
5 .சேவை நிறுவனம் மாறும்போது இதற்க்கு முன்பு இருந்த தொகை மாறது 

 
6 .உங்கள் சர்வீஸ் எல்லைக்குள் மட்டுமே செல்போனே சேவை நிறுவனம் மாற்றி கொள்ள முடியும்
 இப்போ நீங்கள் உங்கள் விருப்பம் உள்ள நிறுவனத்திற்கு மாறுவது எளிது , இனிமேல் போட்டி
ஆரோக்கியமாக இருக்கும் என நினைக்கலாம்

* மேலே உள்ள விஷயங்கள் நான் படித்த வகையில் உங்களுக்காக எழுதியது எதற்கும் ஒரு முறை தொலை தொடர்பு நிறுவன விவரங்கள் அடங்கிய விவரங்களை ஒரு படித்து கொள்ளவும்
*  மேற்கொண்டு அதிகமான விவரங்களுக்கு அருகில் உள்ள மொபைல் சேவை நிறுவனத்தை தொடர்பு கொள்ளவும்


        படித்த உடன் உங்கள் வாக்கை மறக்காமல் இடவும் இந்த தகவல் பல பேரை சென்றைய உங்கள் வாக்குகள் உதவும்
             பேஸ்புக் மூலம் நண்பர்களுக்கு சொல்லவும்

3 comments:

  1. வெறும் செய்தியாக வெளியிடாமல் உங்கள் வார்த்தைகளை வைத்து கொஞ்சம் விளையாடியது அருமை...

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை