இந்த பதிவில் எதிர்பார்ப்பு உண்டாக்கி ரசிகர்களை ஏமாற்றிய படம் மட்டுமே
அதிலும் யாரும் எதிர்பார்க்காமல் வெற்றி பெரும் படங்கள் ஒரு வகை
ரொம்ப முக்கியம் வாய்ந்தவை இந்த வகை ரசிகர்களை ஏமாற்றிய படங்கள் பெரும் நிறுவனம் .புகழ் வாய்ந்த நடிகர் என பல பல வெற்றி பெற கூடிய வாய்ப்பு இருந்தும் நல்ல கதை, திரை கதை இல்லாமல் ரசிகர்கள் மனதில் இடம் பெறமால் போன படங்களில் சில இவைகள் கீழ் வரும் இந்த படங்கள் அந்த வகையில் முதலில் வரும் படம்
1 .கோவா
இந்த படம் ரஜினி மகளின் முதல் தயாரிப்பு வெங்கட் பிரபு இயக்கம் யுவன் இசை என எதிர்பார்ப்பு அதிகம் உள்ள படமாக வந்தது இதற்க்கு முந்தைய வெங்கட் அவர்களின் சென்னை 600028 சரோஜா போல வெற்றி பெரும் என எதிர்பார்த்து தோல்வி அடைந்த பெரிய படங்களில் கோவா முதல் இடம்
2. அசல்
தல படம் என ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படம் சரண் இயக்கம் ஒரு பக்கம் சரண் பரத்வாஜ் இசை மற்றும் பஞ்ச வசனம் அல்டிமேட் ஸ்டார் போன்ற ஓவர் பில்ட் அப் இல்லாமல் வரும் படம் என பல பிளஸ் இருந்தும் படம் பெரும் மைனஸ் ஆனதிற்கு காரணம் ரசிகன் என்பவனுக்கு புரியாத திரை கதை படம் முழுவதும் பில்லா பாகம் இரண்டோ என நினைக்க வைக்கும் கோட் ,கண்ணாடி என படம் முழுவதும் கேட் வாக் செய்தார் அஜித் என கூட சொல்லலாம்
3.தீராத விளையாட்டு பிள்ளை
விஷால் மிகவும் எதிர்பார்த்த படம் இது நகைச்சுவை பாணியில் விசாலின் படம் இது சந்தானம் .மயில்சாமி என நகைச்சுவை நடிகர்கள் ஒரு பக்கம் ,யுவனின் இசை ஒரு பக்கம் சன் பிக்சர்ஸ் என பல பிளஸ் இருந்தும் இந்த படம் ஏனோ ரசிகர்களை அந்த அளவிற்கு கவரவில்லை
4. சுறா
சன் பிக்சர்ஸ் படம் மற்றும் விஜய் படங்கள் என்றால் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் அந்த எதிர்பார்ப்பு எல்லாவற்றிக்கும் பெரும் ஆப்பு வாய்த்த படம் விஜய் அவர்களில் தொடர் தோல்வியில் இணைந்த மற்றும் ஒரு படம் என கூட சொல்லலாம்
அதிலும் இந்த படத்தில் வடிவேலு நகைச்சுவை கூட சொல்லும் படி அமையவில்லை .சன் பிக்சர்ஸ் படங்களில் சொல்லும்படியான படம் கூட இது இல்லை
5.ராவணன்
மணிரத்னம் படம் என்ற எதிர்பார்ப்பு விக்ரம் நீண்ட நாட்களுக்கு பின் நடித்தபடம் மற்றும் ஐஸ்வர்யா ராய் ரஹ்மான் இசை அம்பானி நிறுவனத்தின் தயாரிப்பு சந்தோஷ் சிவன் கேமரா நீண்ட நாட்கள் படப்பிடிப்பு என ஒரு பெரும் எதிர்பார்ப்பை இந்திய முழுவதும் ஏற்படுத்திய படம்
ராமான் காப்பியத்தில் இந்த முறை கதை சுட்டு படம் பண்ணி இருந்தார் மணி ரத்னம் என்ன செய்ய படம் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை மணிரத்னம் படங்களில் சொல்லும் படியான படம் இல்லை இது
6. வா (வா குவாட்டர் கட்டிங் )
முதலில் வ குவாட்டர் கட்டிங் என விளம்பரம் செய்து பின் வரி வாங்க வா என பெயர் மாறிய படம்
வரி விலக்கு வேண்டும் ஆனால் கிடைத்து இருக்கலாம்
தமிழ் படம் கொடுத்த நிறுவனத்திற்கு வெற்றி படம் இல்லை இது
பெரும் காப்பி(ய) படங்கள்
ஜக்குபாய் (வசாபி )
நந்தலாலா (சிகிஜிரோ )
சென்ற வருடம் எழுதிய பதிவை படிக்க
2009 ரசிகர்களை ஏமாற்றிய படங்கள்
கோவாவும் தோல்வியா
ReplyDeleteஏன் சாமி ஓடாத படங்களுக்கு இவ்வளவு விபரீத விமர்சனங்கள் தேவையா?
ReplyDelete//ராமான் காப்பியத்தில் இந்த முறை கதை சுட்டு படம் பண்ணி இருந்தார் மணி ரத்னம் என்ன செய்ய படம் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை மணிரத்னம் படங்களில் சொல்லும் படியான படம் இல்லை இது//
ReplyDeleteமணிரத்தினம் படம் இப்பிடி "தொங்கியது" எல்லாருக்குமே வருத்தம்தான்..