Thursday, December 23
இப்படி ஒரு வேட்பாளர் வேண்டும் பகுதி1
இந்தியாவில் விரைவில் கோடிஸ்வரர் ஆகா வேண்டுமா ? ஒரே வழி அரசியல் தவிர வேறு ஒன்றும் இல்லை
இப்படி ஒரு மோசனான நிலை வர யார் என்ன காரணம் என்று சொல்வதை விட, நாங்கள் வந்தால் இப்படி செய்வோம் என்று சொல்லும் அரசியல்வாதியை விட இதை எல்லாம் நாங்கள் செய்ய மாட்டோம் என்று சொல்லும் அரசியல்வாதி வேண்டும்
அரசியல்வாதிகள் அரசியல் கட்சிகள் ஆண்டும் தோறும் வெளி இடும் அரசியல் வாக்குறுதிகள் விட வலிமை வாய்ந்தது நாம் அவர்களுக்கு தரும் இது போன்ற வாக்குறுதிகள்
நாங்கள் அரசியலுக்கு வந்தால் இதை எல்லாம் செய்வோம் என்று அரசியல் மேடையில் பேசுவதை விட அவர்கள் இடம் நாம் தரும் அரசியலுக்கு வந்தால் இதை எல்லாம் நாங்கள் செய்ய மாட்டோம் என்ற உறுதிமொழி சிறந்த்தது
இதை பற்றி நான் எழுதும் இந்த பதிவு ஒரு ஆரம்பம் ஆகா மட்டுமே இருக்க வேண்டும் இன்னும் பொதுதேர்தல் வர சில நாட்கள் இருக்கும் நிலையில், இனி மேலும் அரசியல்வாதியின் இது எல்லாம் செய்வோம் என்ற வாக்குறுதியை விட வலிமை வாய்ந்தத்தது இதை எல்லாம் நாங்கள் செய்ய மாட்டோம் என்ற வாக்குறுதியே
" இந்தியா ஏழை நாடு என்பதை விட ஏழை ஆக்கப்படும் நாடு என்று சொல்வதே சிறந்தது "?
ஒரு ருபாய் அரிசி கொண்டு ஒரு ஏழை குடும்பம் தன் வாழ்கை வண்டி ஓட்டும் போது ,மாதம் ரூ.3000 க்கும் குறைவான வருமானத்தில் ஒரு குடும்பம் ஓடும்போது
கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கும் அரசியல்வாதி அந்த கோடிக்கணக்கான பணத்தையும் சாப்பிடுவதில்லை
இந்திய மக்களுக்கு பயன்படும் நம் பணம் எங்கோ கண் காணாத தேசத்தில் கருப்பு பணமாக அவன் நாட்டு மக்கள் சந்தோசமாக இருக்க நம் ஏழை மக்களின் பணம் இருக்க முதல் காரணம் ஊழல் மட்டுமே
"இப்படியே ஒரு நிலை நீடித்தால் இந்தியா நிஜத்தில் ஒளிருவதை விட அரசியல்வாதிகள் விளம்பரத்தில் மட்டுமே ஏழை மக்கள் சிரிப்பார்கள் "
என்னத்தான் ஆயரக்கனக்கில் லட்சகணக்கில் நாம் வெளிநாட்டில் சம்பாதித்தாலும் நமக்கு கிடைக்கும் உண்மையான ஆத்ம சந்தோஷம் நம் நாட்டில் சம்பாதிக்கும்போது மட்டுமே கிடைக்கும்
அடுத்த நாட்டுக்காரனுக்கு வேலை செய்வதை விட நம் நாட்டில் வேலை செய்ய வாய்ப்புகள் குறைய யார் காரணம் ?
நூற்றுக்கு நூறு சதம் ஊழல் நிறைந்த இந்த அரசியல் வாதிகள் தவிர வேறு யாரும் இல்லை
அரசியலுக்கு வந்து ஐந்து வருடத்தில் நானோ என் குடும்பமோ ஒரு ருபாய் கூட மக்களை ஏமாற்றி சம்பாதிக்கவில்லை அரசியலுக்கு வரும்போது எவ்வளவு சொத்து இருந்ததோ அதே அளவு சொத்துதான் எனக்கு இப்போதோம் இருக்கு என்று சொல்லும் அரசியல்வாதிகள் எத்தனை பேர் இந்த தேர்தலில் நாம் வெற்றி பெற்று அரசியலுக்கு வந்தால் இதை எல்லாம் செய்வோம் என்று மேடையில் சொல்வதை விட
அதே அரசியல் மேடையில் இதை எல்லாம் செய்ய மாட்டோம் என்று சொல்லும் வகையில் நாமே சில வாக்குறுதிகள் கொடுக்க வேண்டும்
அந்த வகையான வாக்குறுதிகள் பற்றி வரும் பதிவுகளில். உங்களுக்கு ஏதும் கருத்து தோன்றினால் மறக்காமல் கூறவும்
வரும் தேர்தலில் நம் உண்மையான வளமான எதிர்காலத்திற்கு வாக்களிப்போம்
இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்
நண்பர்களுக்கு கூற என்ற பட்டனை அழுத்தி பேஸ்புக் மூலம் நண்பர்களுக்கு சொல்லவும்
Subscribe to:
Post Comments (Atom)
ம் ...
ReplyDeleteTHANKS 4 INFORMATION
ReplyDeleteவரும் தேர்தலில் நம் உண்மையான வளமான எதிர்காலத்திற்கு வாக்களிப்போம் ..........
ReplyDeleteரொம்ப புடிச்சிருக்கு.
ReplyDeleteநன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.
http://sakthistudycentre.blogspot.com
என்னையும் கொஞ்சம் Follow பன்னுங்கப்பா...