பல வாரங்களாக சோதனை பதிப்பில் இருந்த கூகுல் பிளஸ் இப்போ சோதனை ஓட்டத்தை தாண்டி இப்போ நம் பார்வைக்கு வந்து விட்டது
கூகுல் என்னதான் பல துறைகளில் பலசேவைகள் தந்தாலும் ஒரே ஒரு சேவை மூலம் பேஸ்புக் ஹிட் அடித்து கூகுல் இணையதளத்தையே முந்தியது வியப்பின் சரித்திரம்
கூகுல் இடம் மெயில் ,youtube , பிகாஸா,ஆர்குட் .பஸ் இன்னும் எத்தனையோ வசதிகள் இருந்துதான் முதல் இடத்தில இருந்தது . ஆனால் பேஸ்புக் ஒரே ஒரு சோசியல் நெட்வொர்க் மூலம் மொத்த உலகத்தையும் தன் கட்டுபாட்டில் கொண்டு வந்தது என்றால் மிகை இல்லை
அதிலும் இரண்டு ஆண்டுகள் முன்புவரை ஆர்குட்டை விட்டு வர மனம் இல்லாத நம் இந்திய நண்பர்கள் கூட ஆர்குட்டை அம்போவென்று விட்ட கதை வேறு . இந்த ஆர்குட் கூட கூகுல் நிறுவனத்தின் சொல்லும்படியான ஒரு தயாரிப்பு கூட .
பேஸ்புக்கில் இருக்கும் எளிமை நாம் விரும்பும் விஷயத்தை உடனடியாக எல்லோரிடமும் பரிமாறும் எளிமை போன்றைவகள் தான் பேஸ்புக் 800 மில்லியன்(80 கோடி ) பயன்படுதுபவர்களுடன் முதல் இடத்தில வர காரணம்
சும்மா கல்லூரி போனோம் படித்தோம் ஒரு லட்சமோ இரண்டு லட்சமோ சம்பளம் கிடைத்தால் போதும் என்று நினைக்காமல் நண்பன் கொடுத்த ஐடியா கொண்டு துணிந்து இறங்கிய "Mark Zuckerberg " இப்போ சம்பாதிக்கும் கணக்கு வேறு
இப்போ சொல்ல வர விஷயம் அது இல்லை இதே நிலை நீடித்தால் கொஞ்ச நாளில் உலகம் முழுவதும் பேஸ்புக் இல்லை என்றால் பைத்தியம் பிடிக்கும் என்று சொல்லும் அளவிற்கு நம் மக்கள் மாறினால் கூட மிகை இல்லை
இதை எல்லாம் கணக்கில் கொண்டுதான் கூகுல் பேஸ்புக் வளர்ச்சியை தடுக்கும் நோக்கில் அதில் இருக்கும் அதே சில வசதிகள் மற்றும் பேஸ்புக்கில் இல்லாத பல வசதிகளை கொண்டு துணிந்து இறங்கிய விஷயம் கூகுல் +
என்னதான் பல வசதிகள் தந்தாலும் கூகுல் + செய்த மிக பெரும் தவறு என்று என்றால் நுழை வாயில் சரியாக இருந்தால் தானே பலரும் அதில் சென்று என்ன இருக்கு என்று பார்க்க முடியும்
எடுத்து காட்டு கணினி பற்றி அதிகம் தெரியாதவன் கூட சும்மா இணையத்தில் சென்று பேஸ்புக் என்று அடித்தால் கூட போதும் எளிமையான இணைய முகவரி அதிக ஹிட்ஸ் கொடுக்கும் இது எளிய உளவியல் கூட
படம் 1
நீங்கள் கூகுல் இணையதளம் சென்றால் அதன் ஓரத்தில் இருக்கும் +you இடத்தை க்ளிக் செய்தால் நேராக அது கூகுல் பிளஸ் லாகின் செய்யும் இடத்திற்கு போகும் ஆனால் கூகுல் பிளஸ் அப்படி இல்லை நீங்கள் இந்த முகவரி செல்ல வேணும் என்றால் plus . Google .com என்று டைப் செய்ய வேணும்
இதை இன்னும் இளமையாக plus .com அல்லது gplus .com என்று வைத்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும்
படம் 2
இரண்டாவதா நீங்க sign in என்பதை கிளிக் செய்ய வேணும் எது எப்படியோ கூகுல் பிளஸ் போட்டிக்கு வந்து விட்டது,
இப்போ பிளஸ் வந்த உடன் பேஸ்புக் பல்வேறு மாற்றங்களை அதன் பயனாளர்களுக்கு வாரி வழங்கி வருகிறது
படம் 3
உங்களிடம் ஜிமெயில் கணக்கு இருந்தால் நீங்கள் sign inஎன்ற இடத்தில கணக்கை துவங்கலாம் அப்படி உங்களிடம் ஜிமெயில் கணக்கு இல்லை என்றால் 2என்ற இடத்தில சொல்லி இருப்பது போல புது ஜிமெயில் கணக்கை துவங்கி கூகுல் ப்ளஸில் கலக்கலாம்
3என்று சொல்லி இருப்பது அதில் இருக்கும் சில முக்கிய விஷயங்கள் கூட
எப்படியோ இவர்களின் சண்டையில் லாபம் என்னவோ நமக்குதான்
பேஸ்புக்கில் இது எனக்கு ஐந்தாவது வருடம் முதல் நான்கு வருடம் இந்தியர்கள் இல்லாத வெறும் பேஸ்புக் இப்போ அதிகம் இந்தியர்கள் மட்டுமே
அதற்க்கு முன்பு ஆர்குட்டை விட்டு வர மாட்டோம் என்று சொன்னவர்கள் எங்கே நடந்த ஒரு சின்ன மேஜிக் ஆர்குட்டை அம்போவென விட்ட அதிசயம்தான்
இந்த கூகுல் ப்ளஸில் சேர கூகுல் ஜி மெயில் கணக்கு மட்டும் போதும்
தேங்க்ஸ் சார் ..............
ReplyDeleteஇன்று தான் இணைந்தேன் ........
தகவலுக்கு நன்றி .
ReplyDelete