Saturday, September 24

ஆதாமிண்டே மகன் அபு + தெய்வ திருமகள் = ஆஸ்கர் awards




    இந்த ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கர் போட்டிக்கு செல்லும் படங்களின் வரிசையில் பல படங்கள் போட்டி போட்டாலும் அதில் சிறந்த படம் என்று மலையாள படமான ஆதமிண்டே மகன் அபு  தேர்ந்தேடுக்கப்படத்தில் சந்தோசம் இல்லையோ? 

அதே அளவு தெய்வ திருமகள் படம் தேர்ந்தெடுக்கப்படாமல்  போனதில் மிக்க சந்தோஷம் ?


  என்னடா இவன் இப்படி
சொல்கிறான் என்று நீங்கள் நினைக்கலாம் இதில் ஒரு சொல்லும்படியான விஷயம் தெய்வ திருமகள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தால் நம் தமிழ் படங்கள் பற்றி ஒரு அளவிற்கு இருக்கும் நல்ல பெயர் கெட்டு போய் இருக்கும் 

   பின்னே சும்மாவா தெய்வ திருமகள் படத்தின் மூலப்படமான ஆங்கில படம் ஐ ஆம் சாம் படத்தில் நடித்த நடிகர் சிறந்த நடிகருக்கு விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட    விஷயம் எல்லோருக்கும் தெரியும் அதே படத்தை காப்பி அடித்து ஒரிஜினல் என்று நாம் அனுப்பினால் தமிழ்
படங்களை பாராட்டவா செய்வார்கள் ?

  இந்திய தேசிய விருதுகள் நான்கு பெற்ற இந்த படம் ஆஸ்கர் விருது  வாங்க  வாழ்த்துக்கள்

  நறுமண திரவியங்கள் விற்கும் அபு ஹஜ் பயணம் செல்ல மிகவும் கஷ்டப்படும்  சூழ்நிலைகளும் ,அதன் பிறகு கிடைக்கும்
பணம் நேர்மையான வழியில் கிடைக்க வில்லை என்பதால் ஹஜ் பயணம் செல்லாமல் இருக்கும் கதையை சிறப்பான முறையில் இயக்கி உள்ளார் சலீம் அஹமது
  இந்த படத்தில் அபுவாக நடித்த சலீம் குமார் சிறந்த நடிகருக்கான தேசிய விருது வாங்கினார்
மற்றும் சிறந்த ஒளிப்பதிவு, மற்றும் சிறந்த பின்னணி இசை  ஆகிய பிரிவுகளிலும்  தேசிய விருது வாங்கிய  படம் இது


 வரும் ஆண்டுகளில் ஆஸ்கர்  விருதுக்கு தமிழ் மொழியில் இருந்து சொந்த கதையுடன் சிறந்த  படங்கள் போக வேணும் 


   மிக நீண்ட நாட்களுக்கு பிறகு  விகடன் திரை விமர்சனத்தில் குறையே சொல்லாத 50 /100  மதிப்பெண் பெற்ற படம் படம் "எங்கேயும் எப்போதும் "


No comments:

Post a Comment

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை