Thursday, September 1
A.R.ரஹ்மானின் ராக் ஸ்டார் முன்னோட்ட இசை துளிகள்
ரஹ்மானுக்கு தால் படத்திற்கு பிறகு முழுவதும் இசையுடன் சம்பந்தப்பட்ட படம் ஹிந்தி மொழியில் கிடைக்க வில்லை என்ற ஆசை நிறைவேற்றி உள்ள படம் இது
தால் படத்திற்கு எப்படி ரஹ்மானின் இசை ஒரு தூணாக இருந்ததோ அதே போல இந்த படத்திற்கு இருக்கும் என்பதில் மாற்றம் இல்லை
எவ்வளவுதான் இசை சிறப்பாக இருந்தாலும் அதை இன்னும் சிறப்பாக அனைவரிடம் கொண்டு செல்ல உதவுவது படத்தின் வெற்றி கூட.
யுவராஜ் (சுபாஸ் கய் இயக்கத்தில் வந்த படம்) இந்த படத்தில் ரஹ்மானின் இசை எவ்வளவு சிறப்பாக இருந்த போதும் இந்த படத்தின் தோல்வி இந்த இசை ஒரு அளவிற்கு மேல் அனைவரிடமும் செல்லவில்லை
சல்மான் கான் நடிப்பில் இந்த படத்தில் ரஹ்மானின் இசை சிம்பொனி இசை ஒத்து இருந்த போதும் வெற்றி அளவு அவரின் ரசிகர்களிடமும் இசை விமர்சகர் இடம் மட்டுமே பாராட்டு பெற்றது
இப்போ ராக் ஸ்டார் விஷயத்திற்கு வருவோம்
இந்த படத்தின் இயக்குனர் அவர்களுக்கு இது நான்காவது படம் ரஹ்மானுடன் இணையும் முதல் படம் இந்த கதை ஒரு இசை கலைஞன் சம்பந்தப்பட்ட படம் என்பதால் இம்தியாஸ் இந்த படம் இசை அமைத்தால் அது ரஹ்மான் அவர்களின் இசை மட்டுமே இருக்க வேண்டும் என்ற முடிவில் ரஹ்மானை இந்த படத்திற்கு இசை அமைப்பாளாராக ஒப்பந்தம் செய்தார்
ரூ 60 கோடி செலவில் ஒரு இசை சம்பந்தப்பட்ட படத்திற்கு மிக பெரும் பொருள் செலவில் தயாரித்துள்ளது எரோஸ் மற்றும் ஸ்ரீ விநாயக் சினி விசன்
இந்த படத்தின் மூன்று நிமிட முன்னோட்டத்தில் வரும் ரஹ்மானின் இசை இந்த படம் ரஹ்மானின் இசை வாழ்க்கையில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகா இருக்கும் என்று எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது
ரன்பீர் கபூர் ,நர்கீஸ் மற்றும் சமிபத்ல் மரணம் அடைந்த ஷம்மி கபூர் அவர்களுக்கு இது கடைசி படம்
இந்த படத்தின் முன்னோட்ட காட்சிகள்
இந்த முன்னோட்டத்தில் வரும் ஷதா ஹக் பாடல் அதனை ஒட்டி வரும் பேஸ் கிடார் இசை ஆவேசம் கொண்டுள்ள ஒரு இசை கலைஞனின் இசை எப்படி வரும் என்று ரஹ்மானின் மூலம் வந்துள்ளது
ஹிந்தி திரை உலகில் அதிகம் எதிர்பார்க்கும் இசை இன்றைய அளவில் ராக் ஸ்டார் முன்னிலையில் உள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
see this
ReplyDeletehttp://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/1109/02/1110902023_1.htm