Thursday, October 28
தீபாவளி கலைஞர் குடும்ப திரைபடங்கள் (வேற வழி )
தீபாவளி என்றால் பத்து படங்களுக்கு மேல் வருவது அந்த காலம் வர சில படங்களே ஒழுங்கா வருவதில் சிக்கல் அப்படியே வந்தாலும் திரை அரங்கில் ஓடுவது சில நாட்கள் அவற்றில் பாதி நாட்கள் காலியான திரை அரங்கு என தமிழ் திரை உலகின் போக்கே மாறிவிட்ட இந்த காலத்தில் தமிழ் திரை உலகம் முழுமையாக கலைஞர் குடும்பம் வசம் சென்று விட்டது என்பது சால சிறந்தது
ஒரு பக்கம் சன் பிக்சர்ஸ் ,உதயநிதி ஸ்டாலின் ,துரை தயாநிதி என இவர்களின் மூன்று பேருடைய கையில் தமிழ் திரைப்படம் முழுமையாக சென்று விட்டது .
இந்த நிலையில் தீபாவளிக்கு அதிகமான படங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மூன்று படங்கள் மட்டுமே வரும் என எதிர்பார்க்க படுகிறது
அதில் இரண்டு கலைஞர் குடும்ப படங்கள் 1 . மைனா 2 . வா குவாட்டர் கட்டிங் (என்ன புதுமை ?)
மற்ற படம் தெலுங்கு ரீமக் உத்தமபுத்திரன்
1 மைனா (உதயநிதி ஸ்டாலின் )
உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தை பார்த்து தன்னுடைய தூக்காம் போய் விட்டது .இந்த படம் என் மனதை என்னவோ செய்து விட்டது என்று கூறிய படம் தனக்கு இந்த படம் மிகவும் பிடித்து விட்ட காரணத்தால் இந்த படத்தை அவரே வாங்கி இந்த தீபாவளிக்கு வெளியுடுகிறார்
கமல் இப்படத்தை பற்றி சிறப்பாக சொல்லி இருப்பது இப்படம் பற்றி ஒரு எதிர் பார்ப்பை உண்டாக்கி விட்டது மலை காடு பின்னணியில் ஒரு காதல் கதையாக இருக்கும் இப்படம் தமிழ் திரைபடங்களில் ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்
இப்போது இருக்கும் நிலையில் புதுமை விரும்பும் தமிழ் ரசிகர்கள் இப்படத்தை பெரும் வெற்றி படமாக மாற்றுவார்கள் இல்லை என்றால் உதயநிதி டீம் அந்த வேலை செய்யும்
2 . வா குவார்டர் கட்டிங் (துரை நிதி அழகிரி ) என்ன புதுமையான தலைப்பு ஓரம் போ படத்திற்கு பின் அந்த இயக்குனர்களின் வித்தியாசமான படைப்பு .மாலை தொடங்கி காலைக்குள் ஒரு இரவில் நடைப்பெறும் கதை .சென்னை பின்னணியில் கதை
தமிழ்படம் வெற்றிக்கு பின் அதே நாயாகன் அதே தயாரிப்பாளர் என்று இப்படம் பற்றி ஒரு எதிர்பார்ப்பு உண்டாக்கி விட்டது .இப்படத்திற்கு தொலைக்கட்சிகளில் வரும் விளம்பரம் நிச்சயம் இப்படம் கொஞ்சம் சிரிக்கவும் வைக்கும் என நம்ப வைக்கிறது
மதுரை ஆள்பவரின் சென்னை களம் கொண்ட கதை தீபாவளிக்கு என்ன மாயம் செய்யும் என்று பார்க்கலாம்
3 .உத்தமபுத்திரன்
இப்படம் பற்றி சொல்ல ஒன்றும் இல்லை தனுஷ் நடித்த படங்கள் எல்லாம் இப்போ ரீமேக் படமாக இருப்பது அவர் தன்னுடைய குறைந்த பட்ச வெற்றி தக்கவைத்து கொள்ள ரீமேக் படம் உதவி புரியும் என நினைது விட்டாரோ என்னவோ
"ரீமேக் படங்களில் நடிப்பதும் அதம் மூலம் வெற்றி பெறுவதும் எனக்கு என்னவோ உண்மையான வெற்றி இல்லை என சொல்வேன் "
கலைஞர் டிவியில் அடிக்கடி சிவாஜி திரைப்படம் காட்டி விரைவில் என விளம்பரம் வருகிறது எனவே தீபாவைல்க்கு கலைன்ஞர் டிவி அதிரடி படம் சிவாஜி என் நினைக்கிறேன்
சன் டிவி அதற்க்கு என்ன ஆப்பு வைத்து உள்ளது என பொருத்து இருந்து பார்க்கலாம்
விரைவில்
விரைவில்
"ஹாய் அரும்பாவூர் விருதுகள் 2010 "
HAI ARUMBAVUR CINEMA AWARDS 2010
உங்கள் மேலான ஆதரவு தேவை
பேஸ்புக் மூலம் இந்த பதிவை பற்றி உங்கள் நண்பர்களுக்கு சொல்லுங்கள் கருத்துக்களை கூறுங்கள்
இதுவரை பொறுமையாக படித்ததிற்கு நன்றி
Subscribe to:
Post Comments (Atom)
alright!
ReplyDeletehmmm
ReplyDeleteசன் டிவியில் சிங்கம்
ReplyDeleteஅரசரிடம் தான் சொத்துக்கள் இருக்கும். இதபோய் பெரிசா சொல்லிக்கிட்டு...........
ReplyDeleteதனது சுய நலத்திற்க்காக பதிவர்களின் பதிவுகளை வரிசைபடுத்தி தன்னை மேதாவியாக காட்டிகொள்ளும், வந்தே மாதரம் சசி வலைபக்கத்தை இருட்டடிப்பு செய்யும் சுதந்திர இலவச வலை பக்கத்தை புறக்கணிப்போம் அவர் நடு நிலையாக வெளியிடும் வரை ....ஆதரவு தாரீர் …அந்நியன்
ReplyDeleteOnly these THREE new movies for DIWALI?
ReplyDelete