Thursday, October 14

விஜய் ,அஜித் ,சிம்பு என்ன செய்ய போறாங்க ?

             தமிழ் ரசிகர்கள் என்றால் வித்தியாசமான படத்தை சூப்பர் ஹிட் ஆக்கமாட்டார்கள் என்ற கருத்தை தவிடு பொடி ஆக்கியது எந்திரன் படம் .
 பன்ச் வசனம் இல்லை ,டைட்டில் பாட்டு இல்லை அவன் இவன் என்ற ஏக வசனம் இல்லை அறிவியல் சார்ந்த் கதை தமிழ் சினிமாவின் இல்லை இந்தியாவின் சினிமா பாணியை மாற்றியது எந்திரன் படத்தின் வெற்றி


ஷாருக் கான் கூட ரா1  என்ற பெயரில் விளையாட்டை மையப்படுத்தி அறிவியல் கலந்த படத்தை தயாரிக்க முடிய செய்து தயாரிப்பு பணயில் இறங்கி விட்டார்

           "இல்லை என் ரசிகர்கள் டைட்டில் பாட்டு கேட்பார்கள் பன்ச் வசனம் கேட்பார்கள் என்று சொல்ல வில்லை கதை மட்டும் கேட்டு வந்தேன் ஷங்கர் எல்லாம் பார்த்து கொண்டார் என்று ரஜினி சொல்வது எவ்வளவு பெரிய நடிகன் கதைக்காக சிறப்பாக நடித்தார் என்று நினைக்கும் போது பிரமிப்பாக இருக்கு

             ரஜினிக்கே தெரியும் அவர் ஆரம்பத்தில் நடித்தது போன்ற ஆக்சன் படங்கள் நடித்தால் அவரின் ரசிகர்கள் பார்பார்கள் என்று ஆனால் அவர் அப்படி செய்ய வில்லை வித்தியாசமான படத்தில் நடித்தார்   இன்னும் அவர் ரசிகர்களின் முன்னிலையில் இன்னும் உயர்ந்த இடத்தில உள்ளார்

  ஆகா இனிமேல் நான் ஒருமுறை சொன்ன ,ஆண்டவன் சொல்றான் அருணாசலம் செய்றான் போன்ற வசனங்கள் பேசி ரசிகர்களை இன்னும் அதே நிலையில் வைக்க விரும்ப வில்லை
அவர் அப்படி நடித்தால் ரசிகர்கள் இன்னும் ரசிப்பார்கள் ஆனால் அவர் அதை விரும்ப வில்லை
ஆகா ரஜினினியே விரும்பாத இது போன்ற பன்ச் டயலாக்கை பேசி ரசிகர்களை ஏமாற்றாமல் ,டைட்டில் பாட்டு  இல்லாமல் நடித்தால் மட்டுமே படம் பார்ப்பவன் விரும்புவான் என்பதை புரிந்து அஜித் ,விஜய் ,சிம்பு போன்றவர்கள் இனிமேல் கதைக்கு மட்டும் நடிப்பார்களா இல்லை

     "எனக்கு பின்னாடி ஒரு கூட்டம் இருக்கு "


     "எனக்கு ஒண்ணுன்னா உசுரை கூட கொடுப்பாங்க "

இனி இது போன்ற வசங்கள் பேசினால் போதும் நிறுத்துடா அப்படின்னு சொல்வான் என்பதை மட்டும் நினைவில் வைத்தால் சரி இவர்கள்
இவனுங்களுக்கு ஏதாவது ஒண்ணுன்னா உசுரை கொடுக்க மற்றவர்கள் பெற்று போட்டார்கள் என்ற நினைப்போ என்னவோ

               "தமிழ் ரசிகன் படத்தை மட்டும் ரசிப்பான் அவன் பொழுதுபோக்குக்காக "
                 "இவர்கள் பொழுதை போக்க இல்லை என்பதை மட்டும் நினைத்தால் சரி "

"பதிவு பிடித்து இருந்தால் மட்டும் வாக்களிக்கவும் "
"தவறு என்றால் மறக்காமல் தெரிவிக்கவும் "

       "பேஸ்புக் தொடரும் நண்பர்களுக்கும் தொடர போகும் நண்பர்களுக்கும் நன்றி நன்றி "

3 comments:

  1. இனி இது போன்ற வசங்கள் பேசினால் போதும் நிறுத்துடா அப்படின்னு சொல்வான் என்பதை மட்டும் நினைவில் வைத்தால் சரி இவர்கள்
    இவனுங்களுக்கு ஏதாவது ஒண்ணுன்னா உசுரை கொடுக்க மற்றவர்கள் பெற்று போட்டார்கள் என்ற நினைப்போ என்னவோ


    ..... :-)

    ReplyDelete
  2. வித்தியாசமான படத்தை தமிழ் ரசிகர்கள் ரசிக்கமாட்டார்கள் என யார் சொன்னது.. எந்திரனை இந்திய சினிமாவின் புதிய முயற்சி எனலாம்.. இந்திய சினிமாவையே மாற்றிய படம் என்பது ஏற்றுக்கொள்ளமுடியாதது...

    ReplyDelete
  3. நல்லாயிருக்குங்க! படம் என்பது பொழ்துபோக்கத்தானே!

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை