Sunday, July 11

அரும்பாவூர் இஹ்லாஸ் இஸ்லாமிய கல்வி விழிப்புணர்வு மாநாடு




       எந்த ஒரு இனமும் அதன் உண்மையான வெற்றி என்பது உலக கல்வியுடன் கூடிய மார்க்க கல்வி என்பது சால சிறந்த்தது .மறுமை வாழ்க்கை என்பதிற்கு நாம் செய்யும் அளவிற்கு இந்த உலக வாழ்க்கைக்கும் செய்ய வேண்டி வரும் .கடவுளை மட்டும் நம்பி உழைக்காமல் உட்கார்ந்தால் எறும்பு கூட எட்டி மிதித்து  செல்லும் .

  
            எவர் ஒருவர் மார்கத்தை மட்டும் நம்பி உட்கார முடியாது அதே அளவிற்கு அவர் இந்த உலக வாழ்க்கையும் ஓட்ட உலக கல்வியும் தேவை என்ற சீரிய நோக்கில், கல்வி படிப்பில் பின்தங்கி இருக்கும் இஸ்லாமிய சமுதாயத்திற்கு கல்வி விழிப்புணர்வை ஊட்டும் வகையில் அரும்பாவூர் இஹ்லாஸ் இஸ்லாமிய நற்பணி மன்றம் ஆண்டுதோறும் கல்வி ஆண்டின் ஆரம்பத்தில் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடத்தி சிறந்த முறையில் கல்வி கற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு விருதுகள் வழங்குவதோடு மட்டும் இல்லாமல் கல்வி சேவையில் சிறப்புற பணியாற்றும் கல்வி மேதைகளை அழைத்து வந்து சிறப்பு பேச்சுக்களை அனைவரும் பயன் பெரும் வகையில்  செயலாற்றி வருகிறது 

அரும்பாவூர் இஹ்லாஸ் இஸ்லாமிய நற்பணி மன்றம்

அந்த வகையில் அரும்பாவூர் இஹ்லாஸ் இஸ்லாமிய நற்பணி மன்றம் மற்றும் சுன்னத்தவல்  ஜமாஅத்  இணைந்து நடத்திய எட்டாம் ஆண்டு கல்வி விழிப்புணர்வு மற்றும் சமுக நல்லிணக்க விழா சிறப்புற நடைப்பெற்றது


அரும்பாவூர் ஜாமியா பள்ளிவாசல் வளாகத்தில் காலை ஒன்பது மணி அளவில் இவ்விழா நடைப்பெற்றது 
அரும்பாவூர் ஜனாப் அ.முஹம்மது சித்திக் அவர்கள் வரவேற்ப்பு உரை ஆற்றினார்கள் 
முன்னிலை ஜனாப் ஹலில் ரஹ்மான் ,ஜனாப் அப்துல் கரீம் ,ஜனாப் முஹம்மது அலி

நிகழ்ச்சியில் கிராஅத் மௌலான மௌலவி   அ .காதர் மைதீன் அவர்கள்

நிகழ்ச்சயில் வரவேற்பு உரை மு.முஹயிதின் அவர்கள்

  நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர் அவர்கள் முனைவர்  ம.சிவசுப்ரமணியம் அவர்கள் (தாளார் ,ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் பெரம்பலூர் )
சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ மணிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்

நிகழ்ச்சயில் சிறப்பு பேச்சாளர் மௌலான மௌலவி எம் .அபுதாஹிர், பாக்கவி  அவர்கள் (பேராசிரியர் ,நூருல் இஸ்லாம் அரபி கல்லூரி ,சேலம் )
இஸ்லாம் கட்டும் வாழ்க்கை நெறி என்ற தலைப்பில் சிறப்புற பேசினார்கள்

ஜனாப், பிரின்சஸ் பராகுவலித் அவர்கள்  (இயக்குனர் எய்ம்ஸ் எஜுகேசன் &cci கம்ப்யூட்டர் எஜுகேசன் சேலம் )
அவர்கள் இக்கால கல்வி முறையும் சமுக மாற்றங்களும் என்ற தலைப்பில் சிறப்புற பேசினார்கள்


நிகழ்ச்சயில் நன்றியுரை சு.ராஷித் அலி அவர்கள்


*இந்த நிகழ்ச்சியில் அரும்பாவூர் மற்றும் அதனை சுற்றி உள்ள தொண்டமாந்துரை ,கிருஷ்ணாபுரம் ,பூலாம்பாடி பெரியம்மா பாளையம் ,மேட்டூர் ,முகமது பட்டினம் போன்ற ஊரில் இருந்து  அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்  

  * இக்கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் அதிக மதிப்பெண் பெற்ற  மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது .
*இந்நிகழ்ச்சில் பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டது
*மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டது .

  *கல்வி விழிப்புனர்வுக்கென இந்த விழா சிறந்த நிகழ்ச்சியாக அமைந்த்தது 


யாருடைய உள்ளத்தில் அணு அளவு
பெருமை இருக்கிறதோ

அவன் சுவர்க்கம் நுழையமாட்டான்

                     நூல் :முஸ்லிம் 131

1 comment:

  1. //எந்த ஒரு இனமும் அதன் உண்மையான வெற்றி என்பது உலக கல்வியுடன் கூடிய மார்க்க கல்வி என்பது சால சிறந்த்தது .மறுமை வாழ்க்கை என்பதிற்கு நாம் செய்யும் அளவிற்கு இந்த உலக வாழ்க்கைக்கும் செய்ய வேண்டி வரும் .கடவுளை மட்டும் நம்பி உழைக்காமல் உட்கார்ந்தால் எறும்பு கூட எட்டி மிதித்து செல்லும் //

    true.

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை