Thursday, July 8

சுகமான (கடி) கவிதைகள்

"ரோட்டோர கடையில் சாப்பிட்ட நினைவுகளை
மறக்க நினைக்கும் டாலர் கனவுகள்"




"சிரிக்கும் குழந்தையின் சிரிப்பில் இறைவனை காணலாம்
சிரிக்கும் அரசியல்வாதியின் சிரிப்பில் ??"


ரோட்டோர மரத்தை வெட்டும் அரிவாளுக்கு தெரியுமா
அந்த மரம் கடந்து வந்த சுகமும் துக்கமும்

"கடவுளே எனக்கு நீ இதை கொடு
உனக்கு நான் அதை தருகிறேன்
கடவுள்  மனிதன் வியாபார ஒப்பந்தம்
வியாபாரி ஆகும் கடவுள்"





"சரியான சில்லறை தரவும் சொன்ன பேருந்தில்
கால தாமதமாய் நான்"


"வறுமையில் குடும்பம் பலி உச்சு கொட்டும்
பதுக்கல் அரசியல்வாதி"

 

8 comments:

  1. "கடவுளே எனக்கு நீ இதை கொடு
    உனக்கு நான் அதை தருகிறேன்
    கடவுள் மனிதன் வியாபார ஒப்பந்தம்
    வியாபாரி ஆகும் கடவுள்"

    நச் வரிகள்

    ReplyDelete
  2. //ரோட்டோர மரத்தை வெட்டும் அரிவாளுக்கு தெரியுமா
    அந்த மரம் கடந்து வந்த சுகமும் துக்கமும்//

    ரசித்த வரிகள்....எல்லாமே நல்லா இருக்கு நண்பரே...வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. //"சிரிக்கும் குழந்தையின் சிரிப்பில் இறைவனை காணலாம்
    சிரிக்கும் அரசியல்வாதியின் சிரிப்பில் ??"//

    எங்களது ஏமாளித்தனத்தை காணலாம்.

    ReplyDelete
  4. வியாபாரி ஆகும் கடவுள்...அருமை . வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. ஒவ்வொரு கடியும் நறுக்கென்று இருக்கிற்து...
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. நல்லா இருக்கு வாழ்த்துகள்

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை