Friday, July 30

எந்திரன் வியாபாரம் ஸ்டார்ட்

ஒரு ருபாய் போட்டு நூறு ருபாய் எடுப்பது எப்படி என்றால் சன் டிவி இடம் கேட்க்க வேண்டும்

ரஜினி என்னும் திமிங்கலத்தை வைத்து பெரும் செலவில் எடுக்கும் படத்தை சும்மாவா விடுவார்கள்
ஆரம்பத்தில் இருந்து அடக்கி வைத்த சன் டிவி வியாபார மந்திரம் இன்று எந்திரன் பிரத்யோக புகைப்படங்கள் தினகரன் இதழ் உடன் வந்தது

நாளை எந்திரன் பாடல்கள் சூரியன் எப் எம்மில் மட்டுமே விளம்பரம் கூட போட்டகிவிட்டது
நாளை எப்படியும் சூர்யன் எம் எம் விளம்பரம் டபுள்தான் கலக்குறே சந்துரு
சும்மாவா கலாநிதி மாறன் இந்திய அளவில் பெரிய கோடிஸ்வரன் ஆகா வந்தார்
இன்னும் என்ன என்ன பிரத்யோக ஒலிபரப்பு வரபோகுதோ ?

எந்திரன் இப்போதைக்கு சன் டிவி டி ஆர் பி ஏத்த போகும் இந்திரன்

Friday, July 23

24.7.2010 (Life in a Day) வாழ்க்கையில் ஒரு நாள் பங்கு பெறுங்கள்




 உங்களிடம் நல்ல ஒரு கேமரா இருக்கா? நல்ல  க்ரியேடிவ்  ஐடியா  இருக்க  ஒரு நாளின் நடக்கும் நிகழ்சிகளின் தொகுப்பை கொண்டு உலக புகழ் பெற்ற ஒரு டாகுமெண்டரி படத்தில் பங்கு பெற   கூகுள் மற்றும் யு ட்யுப்  ஒரு அறிய சந்தர்பம் அளிக்கிறது



ஆஸ்கர் விருது பெற்ற இயக்குனர் கெவின் மெக்டோனல்ட் இயக்கத்தில் இந்த வீடியோ தொகுப்பில்  உங்கள் உழைப்பு ஒரு பகுதியாக அமைய 


இன்று 24 மணி நேரத்தில் நடக்கும் நிகழ்சிகள் மட்டுமே

நீங்கள் செய்ய வேண்டியது 24/07/2010  இன்று நடக்கும் உங்கள் வாழ்க்கையின் சுவையான  தருணங்களை வீடியோ எடுங்கள் கீழே உள்ள யு ட்யுப் இணையத்தில் 

சொல்லிய படி அப்லோட் செய்யுங்கள்
உங்களின் வீடியோ தொகுப்பு சிறப்பானதாக இருந்தால் உங்களின் ஆக்கம் இந்த சாதனை வீடியோவில் வரும்

இந்த டாகுமெண்டரி வெளியுடு சண்டன்ஸ் திரைப்பட விழாவில் ஜனவரி 2011 வெளிடப்படும் 



மேலதிக விவரம் பெற இதை அழுத்தவும்





 இந்த வீடியோ அப்லோட் இன்று மட்டுமே (24/07/2010) 


Thursday, July 22

சிரிக்க தொடங்குமா (ரீமேக் ) திரை உலகம் ?




 

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்கள் நடிக்க மறுக்கும்  அல்லது நடிக்க விரும்பாத வெற்றி மந்திரம் நகைச்சுவை படங்கள் ,


ஹிந்தி திரை உலகில் அதிக அளவில் பயன்படுத்தபடுகிறது .நகைச்சுவை படம் நடிப்பதால் எந்த அளவில் இவர்களின் மார்க்கெட் கீழே போகும் என தெரிய வில்லை

தன்னை நம்பி வரும் ரசிகன் சந்தோசமாக இருப்பதை விட ,தங்களின் ஒன்றுக்கும் பயன்படாத வெட்டி பந்தாவுக்கு ஆசைப்படும் சில நடிகர்களால்தான்  தமிழ் சினிமாவின் நகைச்சுவை என்னும் கோட்டை குட்டி சுவர் ஆனது


நல்ல நகைச்சவை படம் பார்க்க வேண்டும் என்றால் இப்போது நாம் சொல்வது மலையாள படங்கள் ,ஹிந்தி படங்கள் ,சில நேரங்களில் தெலுங்கு படங்கள்
நகைச்சவை இயக்குனர்கள் கொடிகட்டி பரந்த தமிழ் திரை உலகின் இன்றைய  நிலை புது இயக்குனர் முதலில் சொல்லும் கதை

" நம்ம ஹீரோ ஐந்து வயசு இருக்கும் போது பசி கொடுமை உடனே என்ன பண்றான் பக்கத்துல இருக்குற ரொட்டியை திருடுறான் அப்போ தடுக்க வர்ற ஒரு ஆளை ஏதோ கோபத்துல கையில இருக்குற கத்தியால ஒரு குத்து இப்போ ஸ்க்ரீன் புல்லா ரெட் ஆகுது "
இப்படித்தான் கதை சொல்கிறாகள்.
 
அதை விட்டால் காதல் வன்முறை ,பரம்பரை வன்முறை ,ஜாதி வன்முறை ,
ஏன் இதை விட்டால் வேறு கதையை நம்ம மக்கள் பார்க்க மாட்டார்கள் என்று இவர்களே முடிவு செய்து விடுவது
பிறகு
எப்படி எல்லா தரப்புக்கும் லாபம் தரும் நல்ல படங்கள் வரும்

            இவர்கள் செய்யும் இந்த சேட்டைகள் பார்ப்பதை விட ஆங்கில படத்தின் சேட்டைகள் பரவாயில்லை என்று நினைப்பதால் தான் மொழிமாற்று ஆங்கில படங்கள் மாபெரும் வெற்றி பெறுகிறது


தமிழில் வெற்றி பெரும் நல்ல படம் என்றால் அது மினிமம் உத்ரவாதம் ரீ மேக் படம் என மாற காரணம் ஒரே மாதிரி கதையை இயக்கம் வரவேற்கும் நடிகர்களை சொல்லலாம் 

புகழின் உச்சியில் இருக்கும் எல்லா நடிகர்களின்  படங்களும் அவர்களின் வெற்றியை தரும் படம் எல்லாம் ரீ மேக் படமாக இருக்க முக்கிய காரணம், இங்கே சொல்லும் படியான நல்ல கதை உள்ள  படங்கள் குறைவாக வருவதே .
சொல்லும்படியான் படங்கள் என்று எல்லா விதத்திலும் எல்லா தரப்பையும் சந்தோசபடவைத படங்கள் குறைவே அவை அயன் ,நாடோடிகள்,சிங்கம்,பையா , என குறைவான அளவில் சொல்லி விடலாம் .திரை அரங்கு சென்று பார்க்க வேண்டும் என்று நினைக்க வைக்கும் படங்கள் எத்தனை என விரல் விட்டு எண்ணி விடலாம் .

மினிமம்  வெற்றி பெற்றால் போதும்  நினைக்க வைக்கும் படங்கள் இப்போது அதிகம் வருகிறது .

எல்லா தரப்பையும் கவரும் நல்ல திரை கதை உள்ள படங்கள் என்றால் அது மிகவும் குறைவே

செலவும் குறைவு மினிமம் உத்தரவாதம் உள்ள படங்கள் நகைச்சுவை உள்ள படங்கள் என்பதை நம் நடிகர்களும் ,இயக்குனர்களும் உணரும் வரை இது போன்று ரீ மேக் படத்தின் பின்னே அலைய வேண்டியது நம் தலை எழுத்து


ஹிந்தி மொழியில் இப்போது புகழ் பெற்ற நடிகர் அக்சய் குமார் கூட தன் மினிமம் வெற்றிக்கு நம்புவது  .காமெடி நிறைந்த நகைச்சுவை படங்களை தான்
அக்சய் குமார் பிரியதர்சன் என்றால் வெற்றி கூட்டணி  என்பது மறுக்க முடியாது .வெற்றி கூட்டணி என்பதை விட நம்பி போகும் ரசிகரை சிரிக்க  வைத்து அனுப்புவதில்
சிறந்த கூட்டணி என கூட சொல்லலாம் .

இவர்களின் கூட்டணியில் வரும் படம் கட்டா மிட்டா
பிரியதர்சன் படம் எல்லாம் நகைச்சுவை வகை சேர்ந்த்தது இல்லை ஆனால்.அக்சய் குமார் பிரியதர்சன் இணைந்தால் அது நிச்சயம் காமெடி வகை படமாக மாறும் என்பதில் மாற்றம் இல்லை
இதற்க்கு முன் இவர்கள் கூட்டணயில் வந்த தே டன டேன் ,பூல் புலாலியா (சந்த்ரமுஹி),கரம் மசாலா ,ஹீரா பெரி ,என சொல்லிக்கொண்டு போகலாம்

நம்ம தமிழ்  சினிமா சிரிக்க தொடங்குவது எப்படி










   

Wednesday, July 21

"தில்லாலங்கடி" கிக் ஏற்றுமா ?

இந்த வாரம் வர்ற தில்லாலங்கடி ஒரு ஜனரஞ்சக படமாக ரசிகருக்கும் நல்ல வசூல் தரும் படமாக திரை அரங்க உரிமையாளருக்கும் அமையும் என எதிர் பார்க்கலாம் 

  "சில படங்கள் சரியான வசூல் இல்லாமல் இருந்தாலும் சன் பிக்சர் வழங்கும் அனேக படம் திரை அரங்க உரிமையாளருக்கு நல்ல படமாக அமைவதால் அவர்கள் சன் பிக்சர் வழங்கும் படத்திற்கு ஆதரவு தருகிறார்கள் "


(தொடர் தோல்வி தரும் நடிகர் படத்திற்கு நஷ்ட ஈடு கேட்ட திரை அரங்க உரிமையாளர்கள் ,இதனால் தான் சன் பிக்சர் எதிராக பணம் கேட்க்க வில்லை)

"தெலுங்கு கிக் படம் தமிழில் "தில்லாலங்கடி" ஆகா நகைச்சுவை நிறைந்த வெற்றி படமாக இருக்கும் என நினைக்கிறேன் "


*தெலுங்கு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஷாம் இதில் அதே கேரக்டரில் நடிக்கிறார்
*ரி மேக் கிங் ரா
ஜா இயக்கம் 
 
*ஜெயம் கம்பனி படத்தை சன் பிக்சர் முதல் முறையாக வெளி விடுகிறது


*தமன்னா சன் பிக்சர் மீண்டும் இணையும் படம் 

 
*வடிவேலு முக்கிய நகைச்சுவை வேடத்தி நடித்து உள்ளார்


*சந்தானம் ,சத்யன் ,பிரபு சுகன்சின் நளினி என ஒரு நடிகர் பட்டாளமே நடித்து இருக்கும் படம் 

*யுவன் ஷங்கர்  ராஜாவின் சிறப்பான இசை படத்திற்கு பலம்

எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா என வரும் வெள்ளிகிழமை தெரியும்




 "தில்லாலங்கடி " facebook 
http://www.facebook.com/pages/Thillalangadi/108015899219625
 

Tuesday, July 20

எ ஆர் ரஹ்மான் ஒரு மில்லியன் தொடர்பவர்கள் & பேஸ் புக்

காலத்திற்கு ஏற்ப மாறும்  இந்த விசயத்தில் எ ஆர் ரஹ்மான் எப்போதும் ஒரு படி முன்னே தான் உள்ளார் .
.இந்திய இசையை உலக தரத்தில் கொடுத்து உலக புகழ் பெற்ற உலக நாயகன் எ ஆர் ரஹ்மான்


மாறி வரும் காலத்திற்கு ஏற்ப புதிய தலை முறை தொழில் நுட்ப வசதிகளை பயன் படுத்தி தினமும் தன் ரசிகர்களுடன் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் இன்னும் அதே புத்துணர்வுடன் தொடர்பு கொள்வதில் ஆர்வம் காட்டுவதால் தான் ரஹ்மான் இன்னும் இந்திய அளவில் முன்னணி இசை அமைப்பாளராக இருக்கிறார்


தன் பேஸ் புக்கில் ஒரு மில்லியன் தொடர்பவர்கள் வந்ததை கொட்டும் விதமாக அதே எளிமையுடன் தன் பேஸ் புக் பதிவில் சொல்லி இருக்கும் அதே வார்த்தை "எல்லா புகழும் இறைவனுக்கே "


தான் ஒரு எளிமை நிறைந்த ஆள் என்பதை மீண்டும் நிருபித்துள்ளார்


ஒரு மில்லியன் தொடர்பவர்களை கொண்ட ரஹ்மானின் பேஸ் புக்கில் உடனே இணையுங்கள்

Monday, July 19

எபிக் இந்திய ப்ரவ்சர் &ராஜஸ்தான் லாரி

எபிக் இந்திய ப்ரவ்சர்

          எபிக் பிரவ்சர் பற்றி முதன் முதலில் படித்தவுடன் சரி 
இதையும்இந்தியாவை மையபடுத்தி வந்த ஒரு ப்ரவ்சர் என நினைத்தேன் .

ஆனால் இந்த பிரவ்சர் பயன் படுத்த ஆரம்பித்தவுடன் .அந்த எண்ணம் நூற்றுக்கு நூறு உண்மை என நினைக்க வைத்து விட்டது 



நம்ம ஊரு ராஜஸ்தான் லாரி மாதிரி அப்படி ஒரு லுக் இந்த எபிக் பிரவ்சர் ..இந்தியாவிற்காக  இந்தியனுக்காக தயாரிக்கப்பட்டது சார்



இதிலே இருக்கும் ஆண்டி வைரஸ் (esodi 32 ) மற்றும் பார்க்கும் பொது கலக்கலா இருக்கும் அமைப்பு மற்றும் அதிலும் நமக்கு பிடித்த தீம் வைத்து கொள்ளும் வசதி ரஜினி ,அஜித் .படைப்ப ,தமிழ் படம் ஹிந்தி படம் மற்றும்   சிறந்த கலைஞர்களின் தீம் கலக்கலா இருக்கு அதிலும் சொல்லும் படியான  விஷயம் தலைவர் எ ஆர் ரஹ்மானுக்கு கலகலான தீம் இருக்கு 


எம் ஜி ஆர் .கருணாநிதி சிவாஜி கணேசன் என பலருக்கு சிறப்பாக தீம் உள்ளது
 இதை டவுன்லோட் செய்து பயன்படுத்தி பாருங்கள் 

     ராஜஸ்தான் லாரிக்கும் எபிக் பிரவ்சருக்கும் உள்ள வித்தியாசம் சொல்லுங்கள்

*உலகத்தில் ஆண்டி வைரசுடன் வரும் முதல் ப்ரவ்சர்

*அலோக் பரத்வாஜ் அவர்களின் ஹிட்டன் ரெப்லக்ஸ்  கம்பனியின் சீரிய உழைப்பில் வந்தது

  உண்மை சொல்ல வேண்டும் என்றால் மேட் பார் இந்தியா சிறப்பா இருக்கு
இதன் உண்மையான  வெற்றி வரும் காலங்களில்  இதன் குறை இல்லாத இதன் பயன்பாட்டில் தெரியும்



மற்றபடி தொழிநுட்ப விஷயங்கள் தெரியாது ,ஆனா இந்தியா உழைப்பு சிறப்ப இருக்கு 




தமிளிஷ் இன்ட்லிக்க்கு மாறிய முதல் எனக்கு விழும் வாக்கின் அளவு குறைந்து உள்ளது
மறக்காம கொஞ்சம் வோட்டையும் போட்டுட்டு போங்க 




மற்ற பதிவர்களின் பதிவை படிக்கும் அதே நேரத்தில் மறக்காம வோட்டையும் போடுகிறேன் ஆனா பின்னுட்டம் இடுவதில்லை ஏனோ அப்படி ஒரு சோம்பேறி தனம் வரும் காலங்களின் மாற பார்க்கிறேன்
உங்களின் மேலான  ஆதரவை வேண்டி







                   ஹாய்    அரும்பாவூர்









Saturday, July 17

சிறந்த விளையாட்டு தளங்கள்

விளையாட்டுன்னு சொன்ன நம்ம மக்களுக்கு இப்போ அதிகம் தெரிவது கிரிக்கெட் அதை விட்டா கொஞ்சம் டென்னிஸ் அதற்க்கு  சானிய மிர்சாவுக்கு நன்றி
இப்போ இருக்குற தொழிநுட்ப காலத்தில் குழந்தைகள் வெளியே சென்று விளையாடுவதை விட  கம்ப்யுட்டரில் விளையாடுவதை மிகவும் விரும்புகின்றனர் அவர்களுக்கு ஏற்ற சில சிறந்த தளங்கள்

கேம் டாப் :
                     எதற்கு பணம் கொடுத்து வாங்க வேண்டும் வாங்க இலவசமாக டவுன்லோட் செய்யுங்கோ விளையாடுங்கோ அப்படின்னு சொல்ற சிறந்த் விளையாட்டு தளம்
சிறந்த கணினி விளையாட்டுக்கள் அதிகமான அளவில் உள்ளன நமக்கு தேவையான விளையாட்டை டௌன்லோட் செய்து  விளையாடலாம் 



உண்மையிலே சிறந்த விளையாட்டு தளம் இது ஒரு முறை போய்தான் பாருங்க டவுன்லோட் செய்து விளையாட அதிகமான சிறந்த கேம் உள்ளன

கேம் டாப் பார்க்க இதை அழுத்தவும்

zapak .காம்

                   வாங்க விளையாடுங்க பணம் பணம் சேருங்க என்று சொல்ற இந்தியாவில் சிறந்த கேம் போர்டல் .சபக் காம் ஒரு முறை உங்கள் விவரங்களை பதிவு செய்து விட்டால் போதும் .ஒவ்வொரு முறை நீங்கள் விளையாடும் போதும் நீங்கள் பெரும் பாயின்ட் உங்கள் கணக்கில் சேரும் ,குழு சேர்த்து விளையாட குழு விளயாட்டுக்கள் உள்ளன.


இந்தியாவின் பெரிய விளையாட்டு தளம் என்று கூட சொல்லலாம்

பேஸ் புக் கணக்கு  இருந்தால் போதும்

ZAPAK .COM பார்க்க இதை அழுத்தவும்


போகோ கேம் :

 
                                  குழந்தைகளுக்கு ஏற்ற விளையாட்டு தளம் இது பஸல்  கேம் ,வோர்ட் கேம்,பல பிருவுகளின் கீழே சிறந்த கேம் உள்ளன
குழந்தைகளுக்கு ஏற்ற சிர்னந்த வலை தளம் இது
இதிலும் பேஸ் புக் அக்கௌன்ட் இருந்தால் நேரிடையாக விளையாடலாம்


 

Thursday, July 15

குமுதம் ,விகடன், புதிய தலைமுறை

 

ஜோசியத்தை ஒழிப்போம்


  
  நாளை இறக்கும் போது தெரிய போற விசயத்திற்கு
இன்றே அடித்து கொள்ளும் மத நோய் !

மதத்தை மனதுக்குள் வைப்போம்
மனித தன்மையை வெளியே காட்டுவோம்


மதம் என்பது உன்னை உயர்த்த வேண்டுமே தவிர
மதத்தை நீ உயர்த்த கூடாது


பசித்த ஒருவனுக்கு தராத உணவு
கடவுளுக்கு கொடுத்து என்ன பயன்

உழைக்காமல் வாழ சொல்லும் கால நம்பிக்கை விட
உழைத்து வரும்  பழைய சோறு  சிறந்த்தது :



“இப்போ உனக்கு நேரம் சரி இல்லை என்று சொன்ன
ஜோசியர் கையில் பணம் !அவருக்கு நல்ல நேரம்



       "
உழைத்து வாழ சொல்லுவோம் உழைக்காமல் வாழ வைக்கும் ஜோசியத்தை ஒழிப்போம் "

"
நான் முஸ்லிம் ,நீ ஹிந்து ,கிறிஸ்துவன் என்பதை மனதிற்குள் வைப்போம்
நாம் அண்ணன் தம்பியாக இருப்போம் "

                 " 
நம்மை பிரிக்க நினைக்கும் சக்திகளை குப்பையில் போடுவோம் "


நம்மை மதத்தை வைத்து பிரிக்க நினைக்கும் சக்திகளிடம் இருந்து காக்க சபதம் எடுப்போம்

உழைக்காமல் வாழ்ந்தால் ஒரு  பருக்கை சோறு கூட கைக்கு  வராது என்பதை நினைவில் வைப்போம்


       
இந்தியாவின் உண்மையான வளர்ச்சியை "அழிப்பது" ஊழலும் ,வியாபாரம் ஆகும் மதம் மட்டுமே என்ற கருத்தின் அடிப்படயில் எழுதியது

பிடித்து இருந்தால் உங்கள் விரிவான பின்னுட்டம் தேவை
  


 ஹாய் அரும்பாவூர்


                          மறக்காமல் இதற்க்கு வாக்களிக்கவும் 








Wednesday, July 14

நாட்டுக்கு ரொம்ப முக்கியமான சினிமா செய்திகள்




   எந்திரன் படபிடிப்பு முடிந்ததது
                                            "ரஜினி முந்தைய படமான சிவாஜி அளவிற்கு ஒரு எதிர்பார்ப்பு இல்லை என்றாலும் சிவாஜி படத்தை விட அதிக செலவில் அதை விட அதிகமான தொழிநுட்ப அளவில் வரும் எந்திரன் படம்  வெற்றிகராமாக படபிடிப்பு முடிந்தது விரைவில் ரஹ்மானின் கலக்கல்   இசையை கேட்கலாம் 


                                            "எந்திரம் திரை முன்னோட்டம் எந்திரன் ஆடியோ முன்னோட்டம் எந்திரன் கலைஞர்கள் நேர்காணல் என முன்னோட்டத்திலே சன் டிவி ஒரு பெரும் தொகையை லாபம் பார்க்க போவது நிச்சயம்
   தொடரும் செயற்கை கோள் கோளறு சன் டைரக்ட் பிரச்சினை
                                             " ஒரு வாரமாக இன்சாட் 4  - பி  செயற்கை கோள் கோளாறு சரி ஆகாத காரணத்தால் சன் டைரக்ட் இன்னும் தன முழுமையான சேவையை தரவில்லை
                                             "பிரச்சினை சரி ஆகும் வரை பார்க்கும் நிகழ்ச்சிக்கு பணம் இல்லை இலவசம் என்று சொல்கிறது எங்கே முழுமையா தெரியாமா யார் சார் பணம் தருவா ?
வாரம் இனி மூன்று படம்
                                          "தயாரிப்பாளர் சங்க தலைவராக வந்த ராம நாராயணன் அறிவித்துள்ளார் இதன் பயனால் இனி சிறு தயாரிப்பில் வரும் படங்களுக்கு திரை அரங்கு கிடைக்கும் என்று நம்பிக்கை
                                          (அப்படியே நல்ல படம் எடுக்காவிட்டால் அபராதம் போடுங்க சார் )
அசின் நான் ஒரு மலயாளிங்கோ
                                               "அரசியல்வாதி போகலாம் கிரிக்கெட் வீர்கள் போகலாம் நான் மட்டும் போக கூடாத என்று சரியாக கேட்ட அசின் படபிடிப்புக்கு மட்டும் போன சரி அங்கே ராஜ பக்சே மனைவியுடன் வெளியே போனது ஏனுங்கோ ?


                                               "இலங்கை போகதே என்று சினிமா கலைஞர்களை  மட்டும் சொன்ன பெயர் கிடைக்கும் மற்றவர்களை சொன்ன வம்பு இல்லை கிடைக்கும்  அந்த பயம் தான் அம்மணி

அஜித் நடிக்கும் மங்காத்தா (உண்மையா )

 
                                                  " அஜித் நடிப்பதா இப்போ மங்காத்தா  படம் அப்படின்னு சொல்றாங்க  இது கூட உண்மையான்னு அஜிதுக்கே தெரியாது  நெக்ஸ்ட்  பிளைட் ஓட்ட போறன்னு "பிளைட்பாக்கம்" போறேன்னு சொன்னல்லும் சொல்லுவார் 


Sunday, July 11

குறுக்கு வழிக்காரன் பெரிய குறுக்கு வழிக்காரன்



          ஜோசியம் என்னும் விசயமே நூற்றுக்கு நூறு சதம் காக்க உட்கார பலாபழம் விழுந்த கதைதான் .இன்னொரு வகையில் சொன்னால் சூல்நிழை என்ற
விஷயத்தை தான் ஜோசியம் என்று நம் மக்கள் ஏமாற்றுகிறார்கள் .எப்படி என்றால் நான் மட்டும் அன்னைக்கு அந்த இடத்திற்கு போக வில்லை என்றால் என் வாழ்க்கை மாறி இருக்கும் என்று சிலர் சொல்வதை கேட்டு இருக்கலாம் .அது என்னான்னு தெரியலை நான் எது செய்தாலும் சரியா நடக்க மாட்டேன் என்கிறது என்று சொல்லும் ஒர்வன்ரின் முகத்தை பார்க்கும் போதே நாம் இப்படி செய் அப்படி செய் என்று சொல்வது இயல்பு .
    அதே விஷத்தை பணத்தை வாங்கி கொன்று வியாபாரம் ஆகா சொல்லும் ஒருவரின் ஒரு வார்த்தை நடப்பதால் நாம் அவரை கடவுள் அளவிற்கு கொண்டு சொல்கிறோம்
அந்த வகையில் உலகத்தில் இப்படி சிலர் கிளம்பி உள்ளனர் .அவர் சொல்வது எல்லாம் நடப்பது உண்மை என்றால் அவரிடம் செல்லும் எல்லாம் அவரின் ஆசிப்படி நன்றாக இருக்க வேண்டும் அது நடப்பது இல்லை ஏன் .
    உழைக்காமல் உட்கார்ந்து வாழ வேண்டும் என்று நினைத்தால் வேண்டும் என்றால் ஜோசியம் பார்க்கலாம் ஆனால் இந்த  உலகத்தில் வந்தாகிவிட்டது இனி உழைத்து அடுத்தவனை ஏமாற்றாமல் நல்லவனாக வாழ வேண்டும் என்று நினைத்தாலே ,இது போன்ற ஏமாற்று விஷயங்கள் மீது நமக்கு நம்பிக்கை வராது 

மாதம் 3 ஆயிரம் சம்பாதிக்கும் ஒருவனும் இவ்வுலகில் வாழ்கிறான் .மாதம் லட்சம் ருபாய் சம்பாதிக்கும் ஒருவனும் வாழ்கிறான் பிரச்சினை என்பது இவர்களால் இல்லை கழுதை தாண்டி உள்ளே சென்றால் உணவு கூட வேறு பெயர் மாறி விடும் என்ற கோட்பாட்டை மீறி .

    *1800 கோடி ஊழல் செய்த செத்தான் தேசாய் என்ன தினமும் எத்தனை ருபாய் சாப்பிடுவார் ,இவர்கள் போன்றவரின் ஈன தனமான பிழைப்பால்தான் ,உழைக்கும் மக்கள்  உழைக்காமல் வாழும் ஜோசியத்தை நம்பி வாழ்கின்றனர்

   அது எல்லாம் சரி சொல்ல வந்த விசயத்திற்கு வருவோம்
இது வரை நடந்த போட்டிகளில் எல்லாம்  சரியான முறையில் முடிவுகள் சொன்ன ஆக்டோபஸ் ஹீரோ ஆகா இருக்கிறது இது கூட காக்கை உட்கார பலாபழம் விழுந்த கதை என்றால்
   நடுவில் புகுந்து கிளி ஜோசியம் பார்த்தவரை என்னவென்று சொல்வது அதையும் மீறி கிளி சொன்னது போல அந்த அணி வெற்றி பெற்று  இருந்தால்  கிளி கொண்டு புகழ் அடைந்து இருக்கலாம் என்று அவர் நினைக்கலாம் 




    நல்ல வேலை இதே போல நாய் ஜோசியம் ,கழுதை ஜோசியம் ,மாடு ஜோசியம் வரவில்லை  

ஜோசியம் பார்க்கலையோ ஜோசியம் !


 

அரும்பாவூர் இஹ்லாஸ் இஸ்லாமிய கல்வி விழிப்புணர்வு மாநாடு




       எந்த ஒரு இனமும் அதன் உண்மையான வெற்றி என்பது உலக கல்வியுடன் கூடிய மார்க்க கல்வி என்பது சால சிறந்த்தது .மறுமை வாழ்க்கை என்பதிற்கு நாம் செய்யும் அளவிற்கு இந்த உலக வாழ்க்கைக்கும் செய்ய வேண்டி வரும் .கடவுளை மட்டும் நம்பி உழைக்காமல் உட்கார்ந்தால் எறும்பு கூட எட்டி மிதித்து  செல்லும் .

  
            எவர் ஒருவர் மார்கத்தை மட்டும் நம்பி உட்கார முடியாது அதே அளவிற்கு அவர் இந்த உலக வாழ்க்கையும் ஓட்ட உலக கல்வியும் தேவை என்ற சீரிய நோக்கில், கல்வி படிப்பில் பின்தங்கி இருக்கும் இஸ்லாமிய சமுதாயத்திற்கு கல்வி விழிப்புணர்வை ஊட்டும் வகையில் அரும்பாவூர் இஹ்லாஸ் இஸ்லாமிய நற்பணி மன்றம் ஆண்டுதோறும் கல்வி ஆண்டின் ஆரம்பத்தில் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடத்தி சிறந்த முறையில் கல்வி கற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு விருதுகள் வழங்குவதோடு மட்டும் இல்லாமல் கல்வி சேவையில் சிறப்புற பணியாற்றும் கல்வி மேதைகளை அழைத்து வந்து சிறப்பு பேச்சுக்களை அனைவரும் பயன் பெரும் வகையில்  செயலாற்றி வருகிறது 

அரும்பாவூர் இஹ்லாஸ் இஸ்லாமிய நற்பணி மன்றம்

அந்த வகையில் அரும்பாவூர் இஹ்லாஸ் இஸ்லாமிய நற்பணி மன்றம் மற்றும் சுன்னத்தவல்  ஜமாஅத்  இணைந்து நடத்திய எட்டாம் ஆண்டு கல்வி விழிப்புணர்வு மற்றும் சமுக நல்லிணக்க விழா சிறப்புற நடைப்பெற்றது


அரும்பாவூர் ஜாமியா பள்ளிவாசல் வளாகத்தில் காலை ஒன்பது மணி அளவில் இவ்விழா நடைப்பெற்றது 
அரும்பாவூர் ஜனாப் அ.முஹம்மது சித்திக் அவர்கள் வரவேற்ப்பு உரை ஆற்றினார்கள் 
முன்னிலை ஜனாப் ஹலில் ரஹ்மான் ,ஜனாப் அப்துல் கரீம் ,ஜனாப் முஹம்மது அலி

நிகழ்ச்சியில் கிராஅத் மௌலான மௌலவி   அ .காதர் மைதீன் அவர்கள்

நிகழ்ச்சயில் வரவேற்பு உரை மு.முஹயிதின் அவர்கள்

  நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர் அவர்கள் முனைவர்  ம.சிவசுப்ரமணியம் அவர்கள் (தாளார் ,ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் பெரம்பலூர் )
சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ மணிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்

நிகழ்ச்சயில் சிறப்பு பேச்சாளர் மௌலான மௌலவி எம் .அபுதாஹிர், பாக்கவி  அவர்கள் (பேராசிரியர் ,நூருல் இஸ்லாம் அரபி கல்லூரி ,சேலம் )
இஸ்லாம் கட்டும் வாழ்க்கை நெறி என்ற தலைப்பில் சிறப்புற பேசினார்கள்

ஜனாப், பிரின்சஸ் பராகுவலித் அவர்கள்  (இயக்குனர் எய்ம்ஸ் எஜுகேசன் &cci கம்ப்யூட்டர் எஜுகேசன் சேலம் )
அவர்கள் இக்கால கல்வி முறையும் சமுக மாற்றங்களும் என்ற தலைப்பில் சிறப்புற பேசினார்கள்


நிகழ்ச்சயில் நன்றியுரை சு.ராஷித் அலி அவர்கள்


*இந்த நிகழ்ச்சியில் அரும்பாவூர் மற்றும் அதனை சுற்றி உள்ள தொண்டமாந்துரை ,கிருஷ்ணாபுரம் ,பூலாம்பாடி பெரியம்மா பாளையம் ,மேட்டூர் ,முகமது பட்டினம் போன்ற ஊரில் இருந்து  அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்  

  * இக்கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் அதிக மதிப்பெண் பெற்ற  மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது .
*இந்நிகழ்ச்சில் பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டது
*மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டது .

  *கல்வி விழிப்புனர்வுக்கென இந்த விழா சிறந்த நிகழ்ச்சியாக அமைந்த்தது 


யாருடைய உள்ளத்தில் அணு அளவு
பெருமை இருக்கிறதோ

அவன் சுவர்க்கம் நுழையமாட்டான்

                     நூல் :முஸ்லிம் 131

Saturday, July 10

செயற்கை கோள் கோளாறும் சன் டைரக்டும்


                           இரண்டு நாட்களாக சன் டைரக்ட் சேனல்கள் எதுவும் வர வில்லை இதனால் இதனால் DTH சேவை பயன்படுத்தும் அனைவரும்  சேனல்கள் எதுவும் முழுமையாக பார்க்க முடியாமல் இன்னலுக்கு ஆளானார்கள்


        ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொன்னாலும் முழுமையான காரணம் இன்சாட்-4 பி  செயற்கை கோளில்   ஏற்பட்ட தொழிநுட்ப கோளறு முக்கிய காரணம் ஆகும் இந்த செயற்கை கோளில் மின்சார சக்தியை வழங்க இரண்டு சூரிய சக்தி கருவிகள் இடம்பெற்றுள்ளன

 
அவற்றில் சூரிய சக்தி கருவியில்  ஏற்பட்ட கோளறு காரணமாக செயற்கை கோளின் செயல்பாடு பாதியாக குறைந்து விட்டது இதனால் இந்தியாவில் சில டிவி சேனல்களும் தொலைதொடர்பு சேவையில் பாதிப்பு ஏற்பட்டது





 விரைவில் இந்த கோளறு சரி செய்து விரிவில் இயங்கும் என்று தெரிகிறது




  சன் டைரக்ட் இயங்காமல் போனதிற்கு இதுவே முக்கிய காரணம் விரைவில் எனவே விரைவில் சன் டைரக்ட் தன முழுவையான  சேவையை வழங்கும் என்று தெரிகிறது

  இந்த குளறு படி காரணமாக சன் டைரக்டில் எல்லா சேனல்களும்   மாறி மாறி வருகிறது
  விரைவில் இந்த கோளறு சரி ஆனா உடன்
சிறப்பான சேவை மீண்டும் வழங்குவோம்
என்று சன் டிவி அறிவித்து உள்ளது

Friday, July 9

ஏர்டெல் வழங்கும் இலவச பேஸ் புக் சேவை




          உலகம் முழுவதும் சக்கை போடு போடும் பேஸ் புக் சேவை இப்போது  இந்தியாவில் ஆர்குட்டுக்கு இணையாக புகழ் பெற்று வருகிறது .அப்படிப்பட்ட பேஸ் புக்  சேவையை ஏர்டெல் இரண்டு மாதத்திற்கு முழுவதும் இலவசமாக வழங்குகிறது இதற்கென தனியாக டேட்டா   கட்டணம் பயன்பாடு கட்டணம் இல்லை


  இந்தியாவில் பேஸ் புக் சேவையை பிரபல படுத்த இந்த இலவச சேவை பயன்படும் என நினைக்கலாம்

 சில பேர் தூங்கறது முழிக்கிறது எல்லாம் பேஸ் புக் மற்றும் ஆர்குட்லதான்  அந்த வகையில் அவர்கள் எவ்வளவு நேரம் அவர்கள் facebook  அவர்கள் இருந்ததாலும் அது அவர்கள் இரண்டு பேருக்கு மட்டும் தெரியும்

அதே நேரம் இருபது நிமிடம் நாம் எழுதும் இந்த பதிவு உலகம் முழுவதும் போவதால் ஏதோ நாம் முழு நேரமும் ப்ளாக்ல இருப்பது போல ஒரு பிரமை உண்டாகி விடுகிறது 


சரி அது எல்லாம் இருக்கட்டும் சொல்ல வந்த விசயத்திற்கு வருவோம்

இந்த இலவச பேஸ் புக் சேவை ஆகஸ்ட் 31 வரை இலவசம் 
நோ டேட்டா கட்டணம் முழுவதும் இலவசம்

'FACEBOOK   என்று டைப் செய்து  54321 
என்ற எண்ணுக்கு அனுப்பினால் இந்த சேவை இலவசமாக கிடைக்கும்

மேற்கொண்டு விவரம் பெற   m .facebook .com

மேற்கொண்டு விவரம் பெற ஏர்டெல் பிரத்யோக இணைய தளம் செல்ல இதை அழுத்தவும்


 

Thursday, July 8

சுகமான (கடி) கவிதைகள்

"ரோட்டோர கடையில் சாப்பிட்ட நினைவுகளை
மறக்க நினைக்கும் டாலர் கனவுகள்"




"சிரிக்கும் குழந்தையின் சிரிப்பில் இறைவனை காணலாம்
சிரிக்கும் அரசியல்வாதியின் சிரிப்பில் ??"


ரோட்டோர மரத்தை வெட்டும் அரிவாளுக்கு தெரியுமா
அந்த மரம் கடந்து வந்த சுகமும் துக்கமும்

"கடவுளே எனக்கு நீ இதை கொடு
உனக்கு நான் அதை தருகிறேன்
கடவுள்  மனிதன் வியாபார ஒப்பந்தம்
வியாபாரி ஆகும் கடவுள்"





"சரியான சில்லறை தரவும் சொன்ன பேருந்தில்
கால தாமதமாய் நான்"


"வறுமையில் குடும்பம் பலி உச்சு கொட்டும்
பதுக்கல் அரசியல்வாதி"

 

Wednesday, July 7

பெரம்பலூர் TO திருச்சி கல்லூரி சாலை புகைப்படங்கள் 2

பெரம்பலூர் TO திருச்சி  சாலையை ஒரு வகையில் கல்லூரி சாலை என கூட சொல்லலாம் .பெயருக்கு  ஏற்ற வகையில் சாலை ஓரங்களில் சிறந்த கல்லூரி நிறுவனங்கள் உள்ளன  இதில் சில  சாலயோர சிறந்த கல்வி நிறுவனங்களின் புகைப்படம் விடுப்பட்டுள்ளன அவைகள் விரைவில் இடம்பெறும்
அந்த கல்லூரி நிறுவனங்கள் ரோவர் கல்லூரி  அங்காளம்மன் கல்லூரி மற்றும் சில நிறுவனங்கள் 







Tuesday, July 6

பெரம்பலூர் TO திருச்சி நேஷனல் ஹை வே பகுதி 1

ஒரு காலத்தில் பெரம்பலூர் டு திருச்சி சாலை பயணம் குண்டும் குழியுமாக இருக்கும் இப்போது வந்துள்ள இந்த நாற்கர சாலை உதவியால் சாலை பயணம் சிறப்பானதாக அமைந்துள்ளது சாலையோர கல்லூரிகள் விரைவில் வர இருக்கும் மருத்துவ கல்லுரி மற்றும் எம் ஆர் எப் தொழிற்சாலை என பெரம்பலூர் திருச்சி ஹை வே சாலை மிகவும் முன்னேறி உள்ளது அதே நேரத்தில் பச்சை பசுமையாக இருந்த வயற்காடுகள் அழிந்து பார்பதற்கு வேறு மாதிரி உள்ளது

சில சாம்பிள் புகை படங்கள் கீழே மீதி அடுத்த பதிவில்


                                      நீண்ட ஒரு வழி பாதை

சாலையோர பசுமை செடிகள்

அழகிய பூங்கா
விரைவில் வர இருக்கும் மருத்துவ கல்லூரி  
    அழகிய சாலைகள்
அழகிய சாலையோர காடுகள்  
சாலையோரங்களில் இருக்கும் அழகிய மஞ்சள் பூக்கள்  
மீதி படங்கள் அடுத்த பதிவில்