Friday, August 6

சின்ன சின்ன சினிமா செய்திகள்



1 .அஜித்தின் மங்காத்
தா படபிடிப்பு  தொடங்கியது . அஜித் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான ஆகஸ்ட் 2  படபிடிப்பு தொடங்கியது 

2.எந்திரன் தெலுங்கு மொழி உரிமை 30 கோடிக்கு விற்பனையானது ..இதில் இன்னும் ஒரு சிறப்பு ரஜினி தெலுங்கு மொழியில் டப்பிங் பேசி உள்ளார் தெலுங்கில் எந்திரன் ரோபோ என்று வெளி வரும்

3.கௌதம் குறுகிய காலத்தில் இயக்கி வெளியிட இருக்கும் நடுநிசி நாய்கள் விரைவில் வர இருக்கிறது .இது வரை யார் இசை என்று தெரிய வில்லை அநேகமாக எ ஆர் ரஹ்மானாக கூட இருக்கலாம்

4.ஏழு கோடிக்கு விற்கப்பட்ட எந்திரன் ஆடியோ எதிர்பார்த்ததை விட ஹிமாலய வெற்றி பெற்றுள்ளது . சி டி சேல் மற்றும் இணைய தள டவுன்லோட் மூலம் பெரும் சாதனை படைத்தது உள்ளது .ரஹ்மான் ரஜினி என்றாலே விற்பனை மந்திரம் தான்


5.எந்திரன் சனி ஞாயிறு மெகா வியாபாரம்
               சாதாரண விழா என்றாலே விளம்பரம் மூலம் லாபம் பார்க்கும் சன் டிவி நாளை மற்றும் நாளை மறு நாள் நடக்கும் எந்திரன் ஆடியோ விழா மூலம் sun tv  எவ்வளவு லாபம் பார்க்க போகுதோ .விவேக் வடிவேலு இரண்டு பேருடைய நகைச்சுவை கலக்கலா
இருக்கு மறக்காம பார்க்க வேணும் 



6.உத்தமபுத்திரன்
        தனுஷ்
நடித்து அடுத்த வர இருக்கும் படம் தமிழ் திரையுலகில் இப்போது பெரிய ஹீரோக்களை காப்பற்றும் வெற்றி மந்திரம் அதே ரீ மேக் படம்தான் .
ரெடி என்ற தெலுங்கு படம் இப்போ மினிமம் வெற்றி எல்லாம் பக்கத்து வீட்டில் இருக்கு








Wednesday, August 4

ஏ ஆர் ரஹ்மான் ஐ ட்யூன் சாதனை ஷ்லம்டாக் மில்லியனர் &எந்திரன்




  இப்போது வந்து இருக்கும் எந்திரன் பாடல்கள் ஐ ட்யுனில் சாதனை என்று அந்த ஐ  ட்யூன்  இணைய தளம் சென்று பார்த்த போது ஐ ட்யுனில் எ ஆர் ரஹ்மானின் ஷ்லம்டாக்  மில்லியனர் பாடல்கள் இன்னும் சத்தம் இல்லாமல் சாதனை செய்து வருகிறது


  ஐ ட்யுனில் பல்வேறு நாடுகளின் ஐ ட்யூன் தளங்களின் டாப் 10  டவுன்லோட் செய்ய படும் பாடல்களில் எ ஆர் ரஹ்மானின் ஷ்லம்டாக்  மில்லியனர் நீண்ட நாட்களக்கு பிறகும் இன்னும் சாதனை  செய்து வருகிறது 



நாடுகள் வாரியாக டாப் 10 டவுன்லோட் பாடல்களில் ஷ்லம்டாக்  மில்லியனர் இடம்
பிரான்ஸ் 2  ,ஆஸ்திரேலியா 2 ,ஆஸ்திரியா 3 ,பெல்ஜியம் 1 ,டென்மார்க் 7  ,பின்லான்ட் 9  ,இத்தாலி 7
ஜெர்மனி 9  லெக்சம்பர்க்  1  ,நார்வே 1 ,ந்யுசிலாந் 1 , ஸ்பெயின் 1  ஸ்விடன் 3  போர்சுகல்  5  





என பல்வேறு நாடுகளில் ரஹ்மானின்  இசை சாதனை படைப்பது அவரின் உழைப்புக்கு ஏற்ற வெற்றி
ஐ ட்யூன் top10world albums பிரத்யோக இணைய தளம் செல்ல  இதை அழுத்தவும்


Sunday, August 1

ஒரே வார்த்தை ஓஹோன்னு "எந்திரன்" பாடல்கள்



       சும்மா சொல்ல கூடாது ரஜினி படம்னா ஒரு டைட்டில் பாட்டு தத்துவ பாட்டுன்னு ஒரே மாதிரி அவரை பார்த்து இப்போ எந்திரன் பாட்டு கேட்க்கும் 
போது
  சிவாஜி படத்துல விவேக் சொல்வரே இப்போ வர விடலை பசங்க எல்லாம் கை தூக்கி பஞ்ச டயலாக் பேசறாங்க நீயுமா சிவாஜி அப்படின்னு கேட்ப்பார் (இப்போ வர்ற அரை டிக்கெட் நடிகர்கள் எல்லாம் பஞ்ச டயலாக் பேசி ரஜினி படத்திற்கு உரிய மரியாதை போய்டுச்சு )

  டைட்டில் பாட்டு இல்லை குத்து பாட்டு இல்லை தமிழ் திரை உலகதிற்கு புதுமையான பாட்டு அதுவும் ரஜினி சார் படத்தில்.
 நிச்சயம் பாட்டு எல்லாம் ஹிட் 


எப்பன்டின்னு சொன்ன முதல்ல கேட்க்கும் போது எனக்கு சுத்தமா பிடிக்கவில்லை
ரெண்டாவது முறை கேட்க்கும் போது பரவாயில்லை என சொல்ல வைத்தது
திரும்ப திரும்ப கேட்க்க  ரஹ்மான் ரியல்லி இசை மேஸ்ட்ரோ என்று நிருபித்து விட்டார்
புதுமையான இசை ஒலிகள் சிறப்பான தமிழ் கலந்த அறிவியல் வரிகள் (சிட்டி பாட்டு மட்டும் கொஞ்சம் ஸ்லம்டாக் ஞாபகம் வருகிறது மற்றபடி )


   ரஜினிக்கு இந்த பாட்டு ஒத்து
வராது என்று சொல்ல முடியாது  (யார் சொன்னது ரஜினி ரசிகர்கள் புதுமையான பாட்டை கேட்க்க மாட்டார்கள் என்று அது அந்த காலம் மாப்பு )

இப்படி வேண்டும் என்றால் சொல்லலாம் இந்த கால இளைய தலைமுறை நடிகர்களுக்கு கூட இப்படி பட்ட பாட்டு கிடைக்காது
மொத்தத்தில் எந்திரன் பாட்டுகள் அமெரிக்க ஐ பேட் முதல் சௌகார் பேட்டை சைனா மொபைல் வரை  ஒத்து போகும் கலக்கல் பாட்டுகள்


அரிமா அரிமா என்ன பாட்டு சார்
கிளிமஞ்சாரோ கேட்க்க கேட்க்க சொக்க வைக்கும்
பூம் பூம்  கலக்கல் பூம்

சிட்டி
சிட்டி காலர் ட்யூன் ஹீரோ

இரும்பில் செய்த இதயம்   ரஜினி சார் எப்படி இந்த பாட்டுக்கு டான்ஸ் ஆடபோறார் என்று மலைக்க வைக்குது (
பாட்டின் ஆரம்பம் மட்டும் காதல் வைரஸ் படத்தில் வரும் பைலமொரே பாட்டை ஞாபகபடுத்தும்)



காதல் அணுக்கள்  ஆரம்பத்தில் வரும் பழைய இளையராஜா ட்யூன் போன்ற சந்தம் கிறங்க வைக்கும் குரல் கேட்க்க கேட்க்க ஸ்லொவ் பாய்சன்  "சிம்பு ,சூர்யா அஜித் எல்லாம் பொறமை பட போகும் பாட்டு "

புதிய மனிதா மட்டும் கொஞ்சம் லேட் பிக்அப்   இதவும் ரஹ்மான் குரல்க்கு கேட்கலாம் கூடவே எஸ் பி பாலசுப்ரமணி



புதிய தலைமுறைக்கு ஏற்ற அடுத்த கட்ட இசை எந்திரன்


மன்னிக்கணும் புதிய மனிதா திரும்ப oru முறை கேட்டேன் இதுவும் ஹிட்


(நான் ரஹ்மானின் தீவிர ரசிகன் சார் )






பாட்டை நல்லா கேட்டு எனக்கு எல்லா பாட்டும்  பிடித்த பின் இந்த பதிவு