Saturday, June 5
சனியன்கள் ஒழிந்தன ?
இந்த பதிவில் தமிழ் திரை உலகை கேவலமான நிலைக்கு கொண்டு செல்ல இருந்த சில நடிகர்களின் தொடர் தோல்வி பற்றி
நிச்சயம் இந்த நடிகர்களின் தோல்வி மூலம் நஷ்டம் அடைந்த திரை அரங்க உரிமையாளர்கள் வேறு நல்ல நடிகர்கள் மூலம் லாபம் பார்க்க வாழ்த்துக்கள்
நிச்சயம் படம் என்னும் ஒரு விஷயம் ஒரு பொழுது போக்கு மட்டுமே ஆனால் அதை ஒவ்வொரு சராசரி ரசிகனின் ரசிக்கும் விதத்தை மாற்றி அவனை மேலும் முட்டாள் ஆக்கும் கதை மட்டுமே தேர்ந்த்தெடுத்து .
ரசிகன் என்பவனை தன படம் மட்டுமே பார்க்க வைக்கும் ஒரு விளங்காத மனிதனாக மாற்றி .நடக்க முடியாத நடக்காத தன்னால் முடியாத விசயங்களை தன்னால் முடியும் என்று அவனை ஏமாற்றி .
குளிர் காய்ந்த இது போன்ற உருப்படாத நடிகர்கள் எவன் பெத்த பிள்ளைகளை தன் அடியாளாக தன் அடிமை போன்று சித்தரித்து வசனம் பேசி
(நான் உம்முன்னு ஒரு வார்த்தை சொன்ன எனக்கு பின்னாடி ஒரு கூட்டமே இருக்கு ,இவனுங்க எல்லாம் எனக்காக உயிரை கூட கொடுப்பானுங்க இன்னும் இருக்கு )
என்ன கொடுமை சார் இவர் மட்டும் தன் தாய் தந்தைக்கு நல்ல மகனாக சிறந்த வாழ்க்கை வாழ வேண்டும் தன் குழந்தைக்கு ஒரு நல்ல அப்பனாக இருக்க வேண்டும் ,தன் மனைவிக்கு ஒரு நல்ல கணவனாக இருக்க வேண்டும் அவரி நம்பி படம் பார்க்கும் ரசிகன் மட்டும் குடும்பம் இல்லாத அனாதை என்று ஒரு நினைப்பு .
தன் படத்திற்கு போஸ்டர் ஒட்டவும் ,படபெட்டியை எடுத்து வரும் பொதி மாடு போல நடத்தும் இவர்கள் போன்ற நடிகர்களை சொல்வதா அல்லது இவர்களை நம்பும் நாளைய உண்மையான் இந்திய நாயகர்களை சொல்வதா
ஜாக்கிசான் காட்டாத ஆக்சன் காட்சியா ?மிஷன் இம்பாசிபிள் படத்தில் டாம் க்ருஸ் காட்டாத ஆக்சனா ?இப்படி எதனையோ சொல்லி செல்லலாம் ஆனால் இங்கு மட்டும் இந்த அரை குறை நடிகர்கள் தங்களுக்கு ஒரு பட்டம் சூட்டி இன்னும் எதனை நாட்கள் மோசம் செய்வார்கள்
கதையில் வரும் கதாபாத்திரம் பற்றி வசனம் இருந்தால் சரி ஒவ்வொரு படத்திலும் தன்னை பற்றி நான்கு கைத்தடிகளை பேச வைத்து தன் போட்டி நடிகரை மறை முகமாக திட்டி
அண்ணன் தம்பியாக பழகி வரும் நண்பர்களுக்குள் சண்டை மூட்டி தன் படத்தின் வெற்றி பற்றி யோசிக்கும் இந்த மாதிரி அரை குறை நடிகர்கள் படங்கள் தொடர் தோல்வி அடைய வாழ்துவோம்
முடிந்த வரை இது போன்ற நடிகர்கள் படத்தை பற்றி நல்ல விதமாக எழுதாமல் இருப்போம்
சரி யார் அந்த நாயகர்கள் என்று நீங்கள் கேட்பது தெரிகிறது
அவனுங்க பேரு எதுக்கு சார் நமக்கு தேவை நல்ல டைம் பாஸ் உள்ள நல்ல படங்கள் மட்டுமே
Friday, June 4
ரஹ்மானின் உலக இசை பயணம்
ஜூன் 11 முதல் ரஹ்மான் உலக தர இசை பயணம் "எ ஆர் ரஹ்மான் ஜெய் ஹோ கான்சர்ட் "
சில இசை துளிகள்
ஜூன் 11 முதல் நியூ யார்க் நாசாவு கலோசின் அரங்கில் தொடங்குகிறது
ஜூலை 5 லண்டன் வெம்ப்ளி அரங்கில் முடிகிறது
நியூ யார்க் இசை நிகழ்ச்சயில் ஜெய் ஹோ சர்கிள் பகுதியில் இசை கேட்க்க ரூ .50 ,000
புகழ் பெற்ற ஆடை அலங்கார நிபுணர் ரிட்டு பெரி இந்த இசை நிகழ்ச்சிக்கு 300 விதமான ஆடைகள் வடிவைமைத்து
உள்ளார்
ஒரு இந்திய இசை அமைப்பாளர் இசை நிகழ்ச்சி இந்திய தாண்டி உலக அளவில் இந்த அளவில் பிரமாண்ட அளவில் நடை பெறுவது ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கு மட்டுமே
நல்ல இசை கேட்க்க மொழி தேவை இல்லை என்று நிறுபித்தது ரஹ்மானின் இசை உலக அளவில் இந்த அளவிற்கு புகழ் பெற்றது ஒரு சான்று
ரஹ்மானின் இசையில் ஒரு குஜராத் தீம் சாங்
IPL SONGS
சின்ன கவிதை
தாய்மைக்கு மாறும் மாற்றங்களை
காமத்திற்கு மாற்றும்
(அ)நாகரிகக உடைகள்
Wednesday, June 2
தனியார் பள்ளிகளும் அப்பாவி மக்களும்
"என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில் ஏன் கையை எந்த வேண்டும் வெளிநாட்டில் "
பள்ளி கல்வி பற்றிய பதிவிற்கு ஏன் இந்த வசனம் என்று நீங்கள் கேட்பது தெரிகிறது
நம் மக்களுக்கும் இருக்கும் இந்த தனியார் பள்ளி மோகம் வர காரணம் ஏன் .அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளியில் சேர்த்தால் தன் குழந்தைகள் எதிர் காலம் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் வர காரணம் என்ன
அரசு பள்ளிகளில் இலவச கல்வி இருந்தும் .அதை கூட நம்பாமல் மக்கள் தனியார் பள்ளியில் சேர்த்தால் தான் குழந்தையின் எதிர் காலம் சிறப்பாக இருக்கும் எண்ணம் ஒரு பலமான அஸ்திவாரம் போல் மாறி பல காலம் ஆகி விட்டது
அப்படி என்றால் அரசு பள்ளிகளில் சரியான கல்வி இல்லையா ?
தன்னுடைய வருமானத்திற்கும் மீறி அதிக படியான செலவு செய்து தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் இந்த விஷயம் இப்போது மிகவும் நாகரிகமாக மாறி விட்டது
என்னை பொறுத்த வரை மிகவும் அதிகமான பெற்றோர் தன் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க காரணம் வீட்டில் தன் குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுக்க நேரம் இல்லாதது
மற்றும் தனியார் பள்ளிகள் என்றால் தங்கள் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் மிகவும் நன்றாக படித்து அதிக மதிப்பெண் பெற்றால் .தங்கள் பள்ளிக்கு நல்ல பெயர் கிடைப்பதுடன் வரும் காலங்களில் இந்த தேர்வு முடிவுகளை காட்டி அதிகப்படியான விளம்பரம் செய்து இன்னும் வருமானம் பார்க்கலாம்
இந்த விசயத்தில் தனியார் பள்ளிகளை குறை சொல்ல முடியாது .ஏன் என்றால் இலவசமாக தர இது ஒன்றும் அரசு பள்ளி இல்லை பள்ளியில் பணி புரியும் ஊழியர்களுக்கு சம்பளம் தர வேண்டும் வாகன செலவு பள்ளி பராமரிப்பு செலவு என பல செலவுக்கு பின் தான் அவர்கள் தேர்வு நேரத்தில் நல்ல தேர்வு முடிவுகளை காட்டி ஒரு நிலையான இடத்தை அடைய முடியும் .
அதாவது குறைந்த சம்பளம் வாங்கும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களின் அதிகப்படியான உழைப்பில் சிறப்பான தேர்வு முடிவுகள் வரும் போது
அதை விட அதிக சம்பளம் வாங்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் சொல்லி கொடுக்கும் மாணவர்கள் குறைந்த தேர்வு முடிவுகள் பெற காரணம் என்ன ?
இப்போது வந்த தேர்வு முடிவுகள் அதிக அளவில் அரசு பள்ளிகள் சிறப்பான தேர்ச்சி விகிதம் காட்டி வருகிறது .ஆனால் இதே போல் எல்லா அரசு பள்ளிகளிலும் வராமல் போவதிற்கு யார் காரணம் ?
ஒரு நல்ல தலைமை அமைந்தால் வெற்றி எல்லோருக்கும் கிடைக்கும் அரசு பள்ளிகள் பற்றி மக்கள் இடம் இருக்கம் தவறான கருத்தை மாற்றி தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகள் சிறந்தது என்று மாற்ற அரசு பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களால் மட்டுமே முடியும்
மீண்டும் படியுங்கள் " என்ன தகுதிகள் இல்லை அரசு பள்ளியில் ஏன் அலைய வேண்டும் தனியார் பள்ளிகளில் "
- அரசு பள்ளிகளில் மாதம் ஒரு முறை கண்டிப்பாக பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு நடத்த வேண்டும்
- கற்றல் திறமை குறைவாக உள்ள மாணவர்களை தனிய தனி பயிற்சி கொடுத்து அவர்களுக்கு சிறந்த எதிர்காலம் அமைய சிறப்பு பயிற்சி கொடுத்தல் மற்றம் பெற்றோர்களிடம் குழந்தைகள் எதிர்காலம் பற்றி பேச வேண்டும்
- மாணவர்களுக்கு கல்வி பற்றி விஷயத்துடன். அவர்களுக்கு எதிர்காலத்திற்கு உதவும் மன தைரியம் பற்றி பயிற்சிகள் அளிக்க வேண்டும்
- தேர்வு நெருங்கும் நேரத்தில் மாணவர்களுக்கு தேர்வு பற்றிய பயம் போக்க தனி பயிற்சிகள் அழைக்க வேண்டும்
- தேர்வுக்கு பின் எந்த விதமான படிப்பு படிப்பது பற்றி பல் துறை வல்லுனர்களை அழைத்து கலந்தாய்வு நடத்த வேண்டும்
எது எப்படியோ தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகள் சிறந்ததுதான் .ந ஆசிரியர்கள் படிக்கும் மாணவர்கள் தங்கள் குழந்தைகள் போல நினைத்து அவர்கள் எதிர்காலத்திற்கு சிறப்பான முறையில் உழைத்தால் .
அரசு பள்ளிகள் பற்றி மக்கள் இடம் இருக்கும் தவறான எண்ணம் மாறும்
எது எப்படியோ இந்த கருத்தில் உங்கள் நிலை என்ன மறக்காமல் பின்னுட்டம் இடவும்
"மழை வருது மழை வருது" பதிவை படிக்க இதை அழுத்தவும் "
Subscribe to:
Posts (Atom)





