Saturday, June 4
இப்போ எதுக்குப்பா இந்த உண்ணாவிரத மெகா பட்ஜெட் படம்
அண்ணா ஹாசரே உண்ணாவிரதம் இருந்தார் இவர் உண்மையில் மக்களுக்கு நன்மை செய்வார் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு பதிவர் தொடங்கு சராசரி ஆட்கள் வரை அண்ணா அவர்களின் உன்னவிரத்திர்க்கும் அவர் தொடங்கிய இயக்கத்திற்கும் அமோக ஆதரவு தந்த அனைவரும் இப்போ யோசிக்க ஆரம்பித்துள்ளனர்
பூனைக்குட்டி இப்போ மெதுவாக வெளியே வர ஆரம்பிதுள்ள்ளது
இப்போ இவர்கள் உண்மையில் கருப்பு பணத்திற்குதான் உண்ணாவிரதம் இருக்கிறார்களா இல்லை காங்கிரஸ் சொல்வது போல கறுப்புப் பணத்துக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் யோகா குரு ராம்தேவின் பின்னணியில் ஆர்எஸ்எஸ் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் ஆகியவை இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது உண்மையா ?
இந்த உண்ணாவிரதத்துக்கு ஆர்எஸ்எஸ், பாஜக ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளதோடு, தனது தொண்டர்களை பெருமளவில் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்பர் என்றும் ஆர்எஸ்எஸ் கூறியுள்ளது.
இந்தியாவின் உண்மையான முன்னேற்றத்திற்கு தடையாக ஊழல் ஒரு காரணமோ அதை போல மத வெறி கலந்த செயல்களும் ஒரு காரணம்
ஒரு ஹிந்துவாக இரு முஸ்லிமாக இரு கிறிஸ்துவனாக இரு நாம் முதலில் இருக்க வேண்டியது இந்தியனாக மட்டுமே
மதம் என்பது நம்மை வளர்க்க மட்டுமே நாம் வளர்க்க இல்லை
இப்போது ராம்தேவ் இருக்கும் இந்த உண்ணாவிரத்திற்கு அண்ணா ஹசாரே அவர்கள் கலந்து கொண்ட அளவிற்கு ஆதரவு இல்லாமல் போனது அனைவருக்கும் இருக்கும் இந்த சந்தேகம் மட்டுமே!
உண்மையில் இவர்கள் கருப்பு பணத்திற்கு எதிராக உண்மையில் போராடுகிறார்களா இல்லை என்றால் காங்கிரஸ் சொல்வது போல இது 5 ஸ்டார் உண்ணாவிரதம் என்பது உண்மையா?
இவர்களின் இந்த செயலில் உடன்பாடு இல்லாத காரத்தால் கூட அண்ணா ஹசாரே இதுவரை இதில் கலந்து கொள்ள வில்லை "இந் நிலையில் ராம்தேவின் உண்ணாவிரதத்தில் பங்கேற்கப் போவதாக அறிவித்திருந்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, அது குறித்து நாளை டெல்லிக்கு வந்த பின்னரே முடிவு செய்யவுள்ளதாகக் கூறியுள்ளார். இதனால் அவர் உண்ணாவிரதத்தில் பங்கேற்பாரா என்பது சந்தேகமாகியுள்ளது."
எளிமையாக மக்கள் பிரச்சினைகளுக்கு மட்டுமே போராட்டம் மட்டுமே மேதா பட்கர் சொல்வது போல
இந் நிலையில் மக்கள் பிரச்சனைகளுக்கு அயராது உண்ணாவிரதப் போராட்டங்கள் பல நடத்திய சமூக சேவகி மேதா பட்கர் கூறுகையில், பாபா ராம்தேவின் போராட்டம் அதிக செலவிலான ஒன்று. இதுபோன்று செலவு பிடிக்கும் போராட்டங்கள், போராட்டத்தின் மற்றொரு முகத்தை காட்டுகிறது. நாம் ஊழலை எதிர்க்கிறோம். ஆனால் பல கோடிகளை செலவழித்து, இதுபோன்ற அதிக செலவாகும் போராட்டம் நடத்தப்படுகிறது.
ஆகா மொத்தத்தில் ராம்தேவ் நடத்தும் இந்த உண்ணாவிரத போராட்டம் மக்கள் ஆதரவு திரட்டபடுகிறதே தவிர கொடுக்கப்படவில்லை
Subscribe to:
Post Comments (Atom)
இவரை பார்க்க நித்தியானந்தா சாமி போல இருக்கு பாஸ் ( உருவத்தை சொன்னேன் ))
ReplyDelete