இந்த வார விகடன் இதழில் சூர்யா இடம் கேட்கப்பட்ட அரசியல் சம்பந்தமான கேள்விக்கு சூர்யா அவர்களின் பதில் சிறப்பானதாக உள்ளது
ஒவ்வொருவரும் அரசியலுக்கு வந்துதான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என மக்களை ஏமாற்ற நினைக்கும் இந்த காலத்தில் மன நிம்மதி மற்றும் உண்மையான சந்தோஷம் ஒன்றுக்காக மக்களுக்கு உதவ வேணும் என நினைக்கும் சூர்யா போன்றோர்கள் அதிகம் நினைத்தால் எப்படி இருக்கும்
'கோயம்புத்தூர்ல 'ஏழாம் அறிவு’ ஷூட் டிங். டைரக்டர், கேமராமேன் எல்லாம் சாப்பிட ஒரு ஹோட்டலுக்குப் போனோம். டேபிள் துடைக்கிறவர் என்கிட்டே வந்து, 'சார், உங்க அகரம் ஃபவுண்டேஷன் மூலமா, என் பையன் படிக்கிறதுக்கு உதவி செஞ்சீங்க. இப்போ நல்லாப் படிக்கிறான். ரொம்ப நன்றி சார்’னு கண் கலங்கி சொன்னப்போ, உள்ளுக்குள் உணர்ந்த சந்தோஷத்துக்கு முன், அரசியல் எல்லாம் ரொம்ப சாதாரணம்!
விகடன்ல ஆண்டனி, லதானு பார்வையற்ற தம்பதிபற்றி ஸ்டோரி வந்துச்சு. 'ஆண்டனிக்கு பி.எட்., சீட் கிடைச்சுடுச்சு. 10 ஆயிரம் ரூபா பணம் வேணும்’னு அகரம் ஃபவுண்டேஷனுக்கு எழுதி இருந்தாங்க. இது நடந்து மூணு வருஷம் ஆச்சு.
கடந்த வாரம், ஆண்டனி போன் பண்ணார். 'அரசுப் பள்ளியில் ஆசிரியரா வேலை கிடைச்சிருக்கு. முதல் போன் உங்களுக்குத்தான் சார்’னு அவர் சொன்னபோது கிடைச்ச பரவசத்தை வார்த்தையில் சொல்லத் தெரியலை. நீங்க உணரணும்னா, தேவை இருக்கிறவங்களுக்கு உதவி செஞ்சு பாருங்க. இந்தக் கேள்வி சாதாரணமானதுன்னு அப்போ உங்களுக்கே புரியும்!'
என்ன உண்மையான வரிகள் இதோ போன்று மக்களுக்கு உண்மையில் உதவ வேணும் என வரும் தேர்தலில் வேட்பாளர்கள் அனைவரும் நினைத்தால் உண்மையில் வளமான தமிழகம் நிஜத்தில் மாறும்
IF YOU LIKE THE ARTICLE SHARE YOUR FRIENDS IN FACE BOOK
மக்களுக்கு உண்மையில் உதவ வேணும் என வரும் தேர்தலில் வேட்பாளர்கள் அனைவரும் நினைத்தால் உண்மையில் வளமான தமிழகம் நிஜத்தில் மாறும்
ReplyDelete....இந்த வரியை எதற்கு சின்ன எழுத்துக்களில் போட்டு இருக்கிறீங்க? It should be on BOLD LETTERS
உண்மை தான் நண்பா
ReplyDeleteஅந்நாள் விரைவில் வரும்
Unga perambalurkaraar eppadi edhavadhu udhavi seydhuirukkirarra
ReplyDelete