Friday, July 2
காவல்காரன் யாரை காப்பாத்த போறார் ?
1 . காவல்காரன்னு பேரை வைத்தாலும் வைத்தாங்க படத்தை பற்றி வர்ற செய்தியை காப்பதுறதே பெரிய விஷம் ஆயிடிச்சி
மலையாளத்தில் பாடி கார்ட் படத்தை தயாரித்த ஜானி தாமஸ் பாடி கார்ட் படத்தின் உரிமை எல்லாம் என்னிடம் இருக்கு எப்படி தமிழில் எப்படி சித்திக் எப்படி தயாரிக்கலாம் அப்படின்னு கோர்ட் படி ஏறி இருக்கிறார்
2 . தன் முந்தைய படங்களால் பாதிப்படைந்த விநியோகஸ்தர் திரை அரங்க உரிமையாளருக்கு சலுகை விலையில் தரவே காவல்காரன் படத்தை முதல் பிரதி அடிப்படையில் வாங்கி உள்ளார் விஜய் என்று ஒரு பேச்சு உள்ளது (சன் டிவி தப்பித்தது )
3 . இப்போ எல்லாத்தை விட மிக முக்கியமான் விஷயம் அசின் விஷயம் தான் விஜய் தன் படத்திற்கு அசினை போட்டாள் மார்க்கெட் கொஞ்சம் நன்றாக இருக்கும் என்று நினைத்து இருக்கலாம் (ஆனா அசின் மலையாள சேச்சி அல்லவா )விஜய் உடன் நடித்தால் தமிழ் நாட்டில் மட்டுமே முகம் தெரியும் அதே சல்மான் கான் உடன் நடித்தால் இந்தியா முழுவதும் பெயரும் பணமும் நிறைய கிடைக்கும் என்று நினைத்து இருக்கலாம் .அதனால் தான் சேச்சி அசின் தடையை மீறி சல்மான் உடன் ஸ்ரீலங்கா செல்கிறார் என வைத்து கொள்வோம்
இப்போ விஜய் என்ன செய்ய போகிறார் அசினை விட தமிழ் உணர்வுக்கு முக்கியதுவம் கொடுப்போம் என காவல்காரன் படத்தில் அசினை தூக்கி தமிழ் உணர்வை காட்ட போகிறாரா
அல்லது அசினை காப்பற்ற போகிறாரா ?
இல்லை சூர்யாவுக்காக ரத்த சரித்ரா மன்னிக்கலாம் என்பது போல ? விஜய் அவருக்காக அசினை மன்னித்து விடுவார்களா ?
தமிழ் வாழ்க தமிழன் ?
Thursday, July 1
"NEWSHUNT " மொபைல் செய்தி தாள்
செய்தி அறிவது காலத்திற்கு ஏற்ப மாறி வருகிறது .புறா,கடிதம் ,தந்தி ,செய்தி தாள் ,வானொலி ,தொலைக்காட்சி ,இணையம் என மாறி இணையத்தில் செய்தி தாள் ,இப்போது நாம் விரும்பும் செய்தி தாள்களை விரைவாக மொபைலில் இணைய உதவியுடன் பார்க்க சிறந்த வசதி "NEWSHUNT "
இந்த வசதி எளிதாக்கப்பட்ட முறையில் இதில் செய்தி தாள்களை மொபைலில் பார்க்கலாம்
இப்போது இந்தியாவில் உள்ள சிறந்த செய்தி தாள்களை படிக்கலாம் தமிழில் இப்போது தின மலர் பத்திரிக்கை உள்ளது
இதில் உள்ள சிறப்பு தமிழ் எழுத்துக்கள் சிறப்பான முறையில் படிக்கலாம்
உங்கள் மொபைலில் இந்த வசதி வேண்டும் என்றால் உங்கள் மொபைலில் GPRS வசதி வேண்டும்
இந்த இணைய தளம் சென்று உங்கள் மொபைல் என்னை கொடுத்தால் உங்கள் மொபைல் போனுக்கு அவர்கள் இதன் டவுன்லோட் லிங்க் கொடுப்பார்கள்
இதற்க்கு தேவை மொபைல் போனில் இணைய வசதி மட்டுமே .
டெக்கான் ஹெரால்ட் ,தி இந்தியன் எக்ஸ்ப்ரஸ்,தி நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ்
போன்ற செய்தி தாள்களை படிக்கலாம்
நியூஸ் ஹன்ட் பார்க்க அழுத்தவும்
Monday, June 28
உலக நாயகன் யார் ?
இதற்க்கு முந்தைய என் பதிவுகளில் ரஹ்மானை பற்றி எழுதுகையில் ஆஸ்கர் நாயகன் உலக நாயகன் என்று எழுதுவேன் .இருந்த போதும் அதில் ஒரு நெருடல் இருக்கும் நாம் எழுதும் போது உலக நாயகன் என்று எழுதுகிறோம் இதை மற்றவர்கள் எப்படி எடுத்துகொள்வார்கள் என்ற சந்தேகம்
ரஹ்மான் ஆஸ்கர் ,கிராமி பாப்ட உட்பட உலக விருதுகள், உலக தரத்தில் பாடல்கள் என்று அவர்களின் இடத்தில் சென்று சாதனை செய்து இருக்கும் அவரை நான் உலக நாயகன் ரஹ்மான் என்று அழைப்பது சிறந்த்தது என்று சொல்கிறேன்.
இதில் ஏதும் தவறு இருந்தால் மறக்காமல் பின்னுட்டம் போடவும் அல்லது வாக்களித்து உங்கள் ஆதரவோ எதிர்ப்போ தெரிவிக்கவும்
நான் ரஹ்மான் ரசிகன் அதனால் இப்படி சொல்கிறேன் உங்கள் கருத்து என்னவோ நாகரிகமான முறையில் உங்கள் ஆதரவை தெரிவிக்கவும்
ஒரு வாரத்திற்கு நடைபெறும் வாக்கெடுப்பில் உங்கள் மனதில் உள்ளதை தெரிவிக்கவும் அன்புடன்
ஒரு வாரத்தில் இதை பற்றி மட்டும் அடிக்கடி பதிவு போடுவேன் திட்டாமல் ஆதரவு தரவும்
ஒரு நபர் ஒரு முறை மட்டுமே வாக்களிக்கவும்
முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கு சொல்லவும்
உங்கள் ஆதரவை நாடி ஹாய் அரும்பாவூர்
Subscribe to:
Posts (Atom)






