Wednesday, May 4

இந்த வார சினி மினி (கோடம்பாக்கம் )may first week



1. சிறுத்தை படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்பு கார்த்திக்கின் அடுத்த அதிரடி "சகுனி " தலைப்பே வித்தியாசமா இருக்கு படத்தில் அரசியல் கெட்டப்பில் ஒரு விளம்பர படம் இருக்கு ஆகவே இது அரசியல் சகுனி ஆட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்லாம்


  2.விஷால்  பிரபுதேவா இயக்கத்தில்  நடிக்கும் படத்தின் பெயர் பிரபாகரன் என்று சொல்லபடுகிறது எது எப்படியோ தொடர் தோல்விக்கு பின்பு விஷால் நடிப்பில் பால இயக்கத்தில் "அவன் இவன்" பிரபுதேவா இயக்கத்தில் "பிரபாகரன் " பூபதி பாண்டியன் இயக்கத்தில் "பட்டது யானை "
என ஒரு தொடர் வெற்றி வேண்டி இருப்பது மட்டும் உண்மை

3. மாப்பிள்ளை படத்திற்கு சரியான வரவேற்பு இல்லாமல் போனதால் தனுஷ் அதிகம் நம்பி இருப்பது ஹரி இயக்கத்தில் வரும் "வேங்கை " படத்தை தமனாவிற்கு இந்த படம் விட்டால் வேறு படம் இல்லை

4. விஜய் நடிக்கிறார் விக்ரம் நடிகிறார் என்ற பல செய்திகள் வந்த பொன்னியின் செல்வன் படம் இப்போதைக்கு வர போவதில்லை என்பது மட்டும் நிச்சயம் மிக பெரும் பட்ஜெட் என்பது ரஜினி தவிர வேறு யாரையும் நம்பி போட யாரும் முன்வரவில்லை இதுதான் நிச்சயம்

5.அவன் இவன் படம் எல்லா வேலைகளும் முடிந்து வெளியிட தயாராகிவிட்டது அநேகமாக ஜுன் இறுதியல் இந்த் படம் வரும் என்று எதிர்பார்க்கலாம்


6.ஷங்கர் படம் என்றால் புகைப்படம் அவர் தரும் முன் எப்படியாவது அவர் தரும் முன் பத்திரிக்கையில் போடுவது எல்லோருக்கும் விருப்பம் ஆனால் நண்பன் படம் பற்றி யாருக்கும் அந்த அளவிற்கு ஆர்வம இல்லை என்பது என்பதே உண்மை காரணம் அது ரீமேக் படம் என்பது காரமாக இருக்கலாம் 


7.இந்த ஐந்து மாதத்தில் வந்த படத்தை விட வர வேண்டிய படங்களில் எண்ணிக்கை மூன்று மடங்காக இருக்கும் என்று தெரிகிறது குறுகிய காலத்தில் இத்தனை படங்கள் வருவதால் எத்தனை படங்கள் வெற்றி பெரும் என்பது ஒரு கேள்வி குறி

DON'T MISS VOTE

Monday, May 2

கொச்சி அணியும் அலப்பறை சேட்டன்மார்களும்


முதலில் ஒன்று சொல்லிக்கிறேன் இந்த ஐபிஎல்லில் இருக்கும் மற்ற ஒன்பது அணிகளையும் நல்ல அணிகள என்பேன்
கொச்சி அணியை ஒரு அணியாகவே மதிக்க மாட்டேன் காரணம் . நம் ஊரில் ஒரு பெருசுகள் எல்லாம் சொல்வார்கள் பணம் இருப்பவன் எல்லாம் பணக்காரன் இல்லை பணம் எப்படி சம்பாதித்து வந்தது அதை வைத்துதான் அவனை மதிப்பார்கள்

அது போல இந்த கொச்சி அணி வந்த கதையும் அதன் பின்னணியில் நடந்த கேவலமான செயல்களும் அதன் காரணமாக ஒரு மத்திய மந்திரி தன் பதவியை இழந்தது ஒரு தனி கதை

கடைக்கு யாருடா முதலாளி என்று கேட்டபின்பு இவர்தான் முதலாளி என்று சொல்ல தனியாக நேரம் கேட்ட அணி இது

கடைசி கட்டத்தில் ஐந்து ஆறு பேர்களை காட்டி இவர்தான் முதலாளி என்று சொன்ன சிறந்த அணி இது (அதில் எவ்வளவு உண்மை யார் அறிவார் )

அதிலும் கொடுமை தினமும் ஒரு ஒனர் வரும் ஒரே ஐபிஎல் அணி இது மட்டுமே 

இவர்கள் கிரிக்கெட் பார்க்கும் அழகே தனி அணி 
வெல்லும்போதுமட்டும் பார்பதும்.
அணி தோற்று போனால் கொஞ்சம் கூட யோசிக்காமல் சொல்லும் மற்றும் ஒரு விஷயம் ஸ்ரீ சாந்த் நல்ல விளையாடினார் முத்தைய வீண் ,பார்திவ் சரி இல்லை என்று ஒரு நொடியில் சொல்லும் ஸ்டையில் ஆகட்டும்

அணி வென்றவுடன் ஸ்ரீ சாந்த் மற்றும் பரமேஸ்வரன் இரண்டு மலையாளிகள் இல்லை என்றால் இந்த மேட்ச் தோற்று போய் இருக்கும் என்று சொல்வதாகட்டும் 
  

அதிலும் ஒன்றுக்கும் உருப்படாத அலப்பறை ஸ்ரீசாந்த் ஒரு பக்கம் இவன் ஆடும் ஆட்டத்தை மலையாளி ஒருவன் வேண்டும் என்றால் பார்க்கலாம் அதில் மற்றவர்களுக்கு இவன் ஒரு ஜீரோ மட்டுமே

(இவன் போடும் பந்தை பார்பதை விட டிஸ்கவரி சேனல் விலங்குகளை பார்க்கலாம்)

ஆகா மொத்தத்தில் இவர்கள் எப்படி வந்தார்கள் என்று பார்பதே ஒரு வீணான ஒரு விஷயம்
இதில் இவர்கள் வென்றார்கள் என்று சொல்வது இன்னும் வேஸ்ட்




DON'T MISS VOTE

Sunday, May 1

எப்படி தயாரிக்கிறார்கள் "The 2 Euro Coin (€2)" FM(12)



எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் இன்று நாணயம் எப்படி ஒரு மனிதனுக்கு முக்கியமோ அது போல அதன் தயாரிப்பும் சுத்தமாக இருக்க வேணும் என்று சொல்லாமல் சொல்கிறது இந்த யுரோ நாணயம் தயாரிக்கும் முறைகள் 

காப்பர் உலோகத்தில் எப்படி உருக்கி அதனை சுத்திகரித்து தயாரிக்கிறார்கள் என்று பாருங்கள்

ஒவ்வொரு நிலையிலும் நாணயம் தயாரிப்பில் இவர்கள் காட்டும் துல்லியம் வாரே வா யுரோ என்று சொல்ல வைக்கிறது





DON'T FORGET VOTE