Tuesday, November 1

ஒஸ்தி மாஸ் பாடல்கள் "முதல் முறையா சிம்பு படத்தில் "



      சிம்பு படங்களில் பாடல்கள் நன்றாக இருக்கும் வித்தியாசமான முறையில்
இளைஞர்களுக்கு ஏற்ற முறையில் இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது 

     ஆனால் முதல் முறையாக சிம்புவுக்கு மாஸ் வசதி உள்ள பாடல்கள் கிடைதுள்ளது தரணி மற்றும் தமன் உதவியால்
இந்த ஆண்டின் முதல் ஹெவி மாஸ் மற்றும் கலக்கல் இசை உள்ள பாடல்கள் என்றால் இதை துணிந்து சொல்லலாம்

    ஏற்கனவே ஹிந்தி மொழியில் பட்டை கிளப்பிய படம் இதும் தபாங் சல்மான் கான் திரை வரலாற்றில் துணிந்து சொல்ல கூடிய படம் இது.அதிலும் அந்த முன்னி பாடல் கலக்கிய அளவிற்கு தமிழில் அதே தரத்துடன் ஒரு பாடல் இந்த இசை ஆல்பத்தில் உள்ளது 



   தரணிக்கு தன்னை மீண்டும் ஒரு வெற்றிகரமான இயக்குனராக காட்ட இந்த படம் தேவைபடுகிறது " குருவி என்ற தோல்வி படத்திற்கு பின்பு தரணி இயக்கத்தில் வரும் படம் இது
   குருவி அளவிற்கு இந்த படம் மோசமாக இருக்காது என்று எதிர்பார்க்கலாம்
  கில்லி ,தூள் ,thill போல இந்த படமும் தரணி படங்களில் ஒரு வெற்றி படமாக அமையும் என்று நம்புவோமாக

 ஆனால் பாடல்கள் ஆடியோ உலகில் விற்பனையில் முதல் இடத்தில உள்ளது கலக்கலான இசை மற்றும் தரணி குருவி படத்தில் செய்த தவறுகளில் இருந்து இந்த படத்திற்கு பாடங்கள் கற்று இருப்பது பாடல்களில் தெரிகிறது

 1 . உன்னாலே உன்னாலே
    தமன் ,எஸ் .ரீட்டா
    பாடலாசிரியர் " யுகபாரதி
    அமைதியான இசையுடன் ஆரம்பிக்கும் இந்த பாடல் மெதுவாக ஹை பிட்சில் கலக்கலான ஒரு காதல் பாடல் தமன் மற்றும் ரீட்ட குரல்  இந்த பாடலின் வெற்றிக்கு முக்கிய காரணம்
யுகபாரதி சிறப்பான பாடல் வரிகளை கொடுத்துள்ளார் மற்றும் ஒரு சிறப்பு

பாடல் ரேட்டிங் : 9 /10 


  ௨.நெடுவாலி நெடுவாலி
 ராகுல் நம்பியார் ,மஹாதி
  பாடலாசிரியர் :யுகபாரதி
 " அடடா மழைடா " பையா படத்தின் சூப்பர் ஹிட் பாடலுக்கு பிறகு ராகுல் நம்பியாருக்கு கிடைத்துள்ள மற்றும் ஒரு சிக்ஸர் இந்த நெடுவாலி
  கலக்கலான் இசை கோர்வைகள் மற்றும் கேட்க்க கேட்க்க பிடித்து போகும் பாடல்
பாடல் ரேட்டிங் :9 .5 /10


3 . பொண்டாட்டி  
பாடலை பாடி எழுதியவர் : யங்  சூப்பர் ஸ்டார்  எஸ் டி ஆர் (சிம்பு )

   சிம்பு இந்த பாடலை எழுதி பாடியும் இருக்கார் , சிம்பு பாடிய பாடல்களில் ஒரு நல்ல உற்சாகம் இருக்கும் இந்த பாடலில் அது உள்ளது
கலக்கல் பாடல் ரேட்டிங் :8 .5 / 10

4 .ஒஸ்தி மாமு
 பாடல் பாடியவர் : பாபா சேகல் ,ரஞ்சித் ,ராகுல் நம்பியார்
பாடலாசிர்யார் : வாலிப கவிஞர் : என்றும் இளமை வாலி

   பாபா சேகல் குரலில்  இந்த அதிரடி பாடல் கேட்க்கும்போது படம் எப்போ வரும் என்று எதிர்பார்க்க வைக்கிறது
குத்து பாடல் என்று ஒரு வரியில் சொல்லாமல் சரியான அளவில் இசை கோர்ப்பு வேலை இந்த படத்தின் தரத்தை குத்து பாடல் என்ற அளவையும் மீறி சரியான அளவில் வந்த மாடர்ன் குத்து பாடல் இது
பாடல் ரேட்டிங் :10 /10 

5 . கலாசலா  கலாசலா
  பாடல் பாடியவர் : வயதான  இளமை குரல்கள்  டி .ராஜேந்தர் .எல் ஆர் ஈஸ்வரி ,விஜயா
  இந்த டாப் பாடலை எழுதியவர் : வாலிப கவிஞர் நம்ம வாலிதான்

  படத்தில் டாப் விஷயமா இந்த் பாடல்தான் ஹிந்தி மொழியில் முன்னி பாடல் எப்படி ஒரு கலக்கு கலக்கியதோ அதை விட இரண்டு மடங்கு சிறப்பான பாடல் இது ,அதுவும்  எல் ஆர் ஈஸ்வரி குரல் இன்றைய யூத்தையும் ஆட வைக்கும்
வடக்கே கேட்டு பாரு என்று எல் ஆர் ஈஸ்வரி ஆரம்பிக்கும்போதே இந்த பாடலை எப்படி திரையில் தரணி கொண்டு வர போகிறார் என்று நம்மை எதிபார்ப்பை உண்டாக்கி விட்டார் தமன்
  இந்த ஒரு பாடலுக்கு மட்டும் மல்லிகா செகாவத்  குத்தாட்டம் சிம்புவுடன் ஆட போகிறார்

   நீண்ட நாட்களுக்கு பிறகு திரை அரங்கில் துணிந்து ஒன்ஸ்  மோர்  கேட்க்க வைக்கும் பாடல்கள் 

பாடல் ரேட்டிங் :10 /10

  ஆகா தமன் இசை அமைப்பில் அவருக்கு ஒரு மைல் கல் பாடல் இது

கண்டிப்பாக கேட்க்க கூடிய பாடல் இது 







SUPER OSTHI TRAILER 





Sunday, September 25

சீனிபிரபுவின் சிரிக்கவைக்கும் "ஊர்த்திருவிழா" மிமிக்ரி கேட்டு சிரியுங்கள்




    குரல் மாற்றி பேசுவது என்பது எல்லோருக்கும் கிடைக்கும் வரம் இல்லை அதிலும் குரல் மாற்றி பேசும்போது
சிரிக்க வைப்பது இன்னும் சிறப்பு அதில் 

சீனிபிரபு தன் திறமையை  இதற்க்கு முன்பு அவர் மிமிக்ரி மூலம் நிருபித்து இருக்கும் இவர் இன்ஜினியரிங் படிப்பை முடித்து சென்னையில் பெரும் நிறுவனத்தில் பணியாற்றும் இவர்
   தன்னுடைய மிமிக்கிரி கலையை மறக்காமல் அவ்வப்போது ஏதும் ஒரு கான்செப்ட் கொண்டு மிமிக்கிரி நிகழ்ச்சியை தயாரித்து வெளியிடுகிறார்
  சமிபத்தில் வந்த அவரின் ஊர்த்திருவிழா கேட்க்கும் வாய்ப்பு கிடைத்தது உண்மையில் பாராட்ட வேண்டிய விஷயம்.


 
சீனிபிரபு கணேசன் அவர்கள்  ஒரு நடிகர் பட்டாளத்தையே கிராமத்துக்கு கொண்டு சென்று நம்மை சிரிக்க வைத்து விடுகிறார் " சிம்பு ,விஜயகாந்த் ,பூர்ணம் விஸ்வநாதன் ,அஜித் ,சூர்யா ,சிவாஜி ,மம்மூட்டி என்று தொடரும் நடிகர்களின் காமெடி வசனங்களை எப்படி சிறப்பாக பேசி அதே நேரத்தல் நம்மையும் சிரிக்க வைத்துள்ளார் சீனிபிரபு கணேசன்
 ஒரு முறை கேட்டால் மீண்டும் கேட்டு சிரிக்க வைக்கும் வசங்கள் அதற்க்கு ஏற்ற சரியான அளவில் குரல் தேர்வு சீனி பிரபுவின் முயற்சி பாராட்ட வேண்டியாது

விரைவில் இன்னும் சில அவரின் படைப்புகள் ஹாய் அரும்பாவூரில்  அவரின் அனுமதியுடன்







இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் பேஸ்புக் மூலம் மற்றவர்களுக்கு சொல்லவும்

Saturday, September 24

ஆதாமிண்டே மகன் அபு + தெய்வ திருமகள் = ஆஸ்கர் awards




    இந்த ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கர் போட்டிக்கு செல்லும் படங்களின் வரிசையில் பல படங்கள் போட்டி போட்டாலும் அதில் சிறந்த படம் என்று மலையாள படமான ஆதமிண்டே மகன் அபு  தேர்ந்தேடுக்கப்படத்தில் சந்தோசம் இல்லையோ? 

அதே அளவு தெய்வ திருமகள் படம் தேர்ந்தெடுக்கப்படாமல்  போனதில் மிக்க சந்தோஷம் ?


  என்னடா இவன் இப்படி
சொல்கிறான் என்று நீங்கள் நினைக்கலாம் இதில் ஒரு சொல்லும்படியான விஷயம் தெய்வ திருமகள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தால் நம் தமிழ் படங்கள் பற்றி ஒரு அளவிற்கு இருக்கும் நல்ல பெயர் கெட்டு போய் இருக்கும் 

   பின்னே சும்மாவா தெய்வ திருமகள் படத்தின் மூலப்படமான ஆங்கில படம் ஐ ஆம் சாம் படத்தில் நடித்த நடிகர் சிறந்த நடிகருக்கு விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட    விஷயம் எல்லோருக்கும் தெரியும் அதே படத்தை காப்பி அடித்து ஒரிஜினல் என்று நாம் அனுப்பினால் தமிழ்
படங்களை பாராட்டவா செய்வார்கள் ?

  இந்திய தேசிய விருதுகள் நான்கு பெற்ற இந்த படம் ஆஸ்கர் விருது  வாங்க  வாழ்த்துக்கள்

  நறுமண திரவியங்கள் விற்கும் அபு ஹஜ் பயணம் செல்ல மிகவும் கஷ்டப்படும்  சூழ்நிலைகளும் ,அதன் பிறகு கிடைக்கும்
பணம் நேர்மையான வழியில் கிடைக்க வில்லை என்பதால் ஹஜ் பயணம் செல்லாமல் இருக்கும் கதையை சிறப்பான முறையில் இயக்கி உள்ளார் சலீம் அஹமது
  இந்த படத்தில் அபுவாக நடித்த சலீம் குமார் சிறந்த நடிகருக்கான தேசிய விருது வாங்கினார்
மற்றும் சிறந்த ஒளிப்பதிவு, மற்றும் சிறந்த பின்னணி இசை  ஆகிய பிரிவுகளிலும்  தேசிய விருது வாங்கிய  படம் இது


 வரும் ஆண்டுகளில் ஆஸ்கர்  விருதுக்கு தமிழ் மொழியில் இருந்து சொந்த கதையுடன் சிறந்த  படங்கள் போக வேணும் 


   மிக நீண்ட நாட்களுக்கு பிறகு  விகடன் திரை விமர்சனத்தில் குறையே சொல்லாத 50 /100  மதிப்பெண் பெற்ற படம் படம் "எங்கேயும் எப்போதும் "