Thursday, September 22

வெளிவந்துவிட்டது google + ஒரு முறை சோதித்து பாருங்கள்



                              பல வாரங்களாக சோதனை பதிப்பில் இருந்த கூகுல் பிளஸ் இப்போ சோதனை ஓட்டத்தை தாண்டி  இப்போ நம் பார்வைக்கு வந்து விட்டது 




                            கூகுல் என்னதான் பல துறைகளில் பலசேவைகள் தந்தாலும் ஒரே ஒரு சேவை மூலம் பேஸ்புக் ஹிட் அடித்து கூகுல் இணையதளத்தையே முந்தியது வியப்பின் சரித்திரம் 


                        


  கூகுல் இடம் மெயில் ,youtube , பிகாஸா,ஆர்குட் .பஸ் இன்னும் எத்தனையோ வசதிகள் இருந்துதான் முதல் இடத்தில இருந்தது . ஆனால் பேஸ்புக் ஒரே ஒரு சோசியல் நெட்வொர்க் மூலம் மொத்த உலகத்தையும் தன் கட்டுபாட்டில் கொண்டு வந்தது என்றால் மிகை இல்லை
                           அதிலும் இரண்டு ஆண்டுகள்
முன்புவரை ஆர்குட்டை விட்டு வர மனம் இல்லாத நம் இந்திய நண்பர்கள் கூட ஆர்குட்டை அம்போவென்று விட்ட கதை வேறு . இந்த ஆர்குட் கூட கூகுல் நிறுவனத்தின் சொல்லும்படியான ஒரு தயாரிப்பு கூட .
  பேஸ்புக்கில் இருக்கும்  எளிமை நாம் விரும்பும் விஷயத்தை உடனடியாக எல்லோரிடமும் பரிமாறும்
எளிமை  போன்றைவகள் தான் பேஸ்புக் 800  மில்லியன்(80 கோடி )   பயன்படுதுபவர்களுடன்  முதல் இடத்தில வர காரணம்

   சும்மா கல்லூரி போனோம் படித்தோம் ஒரு லட்சமோ இரண்டு லட்சமோ சம்பளம் கிடைத்தால் போதும் என்று நினைக்காமல் நண்பன் கொடுத்த ஐடியா கொண்டு துணிந்து இறங்கிய "Mark Zuckerberg "  இப்போ சம்பாதிக்கும் கணக்கு வேறு
   இப்போ சொல்ல வர விஷயம் அது இல்லை இதே நிலை நீடித்தால் கொஞ்ச நாளில் உலகம் முழுவதும் பேஸ்புக் இல்லை என்றால் பைத்தியம் 
பிடிக்கும் என்று சொல்லும் அளவிற்கு நம் மக்கள் மாறினால் கூட மிகை இல்லை
  இதை எல்லாம் கணக்கில் கொண்டுதான் கூகுல் பேஸ்புக் வளர்ச்சியை தடுக்கும் நோக்கில் அதில் இருக்கும் அதே சில வசதிகள் மற்றும் பேஸ்புக்கில் இல்லாத பல வசதிகளை கொண்டு துணிந்து இறங்கிய விஷயம் கூகுல் +

  என்னதான் பல வசதிகள் தந்தாலும் கூகுல் + செய்த மிக பெரும் தவறு என்று என்றால் நுழை வாயில் சரியாக இருந்தால் தானே பலரும் அதில் சென்று என்ன இருக்கு என்று பார்க்க முடியும்
எடுத்து காட்டு கணினி 
பற்றி  அதிகம் தெரியாதவன் கூட சும்மா இணையத்தில் சென்று பேஸ்புக் என்று அடித்தால் கூட போதும் எளிமையான இணைய முகவரி அதிக ஹிட்ஸ் கொடுக்கும் இது எளிய உளவியல் கூட 
படம் 1   
நீங்கள் கூகுல் இணையதளம் சென்றால் அதன் ஓரத்தில் இருக்கும் +you இடத்தை க்ளிக் செய்தால் நேராக அது கூகுல் பிளஸ் லாகின் செய்யும் இடத்திற்கு போகும்  

  ஆனால் கூகுல் பிளஸ் அப்படி இல்லை நீங்கள் இந்த முகவரி செல்ல வேணும் என்றால் plus . Google .com
என்று டைப் செய்ய வேணும்
  இதை இன்னும் இளமையாக plus .com  அல்லது gplus .com  என்று வைத்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும் 


படம் 2
இரண்டாவதா நீங்க sign in  என்பதை கிளிக் செய்ய வேணும்  


  எது எப்படியோ கூகுல் பிளஸ் போட்டிக்கு வந்து விட்டது, 

இப்போ பிளஸ்  வந்த உடன் பேஸ்புக் பல்வேறு மாற்றங்களை அதன் பயனாளர்களுக்கு வாரி வழங்கி வருகிறது 


படம் 3
  உங்களிடம் ஜிமெயில் கணக்கு இருந்தால் நீங்கள் sign inஎன்ற இடத்தில கணக்கை துவங்கலாம்
அப்படி உங்களிடம் ஜிமெயில் கணக்கு இல்லை என்றால் 2என்ற இடத்தில சொல்லி இருப்பது போல புது ஜிமெயில் கணக்கை  துவங்கி கூகுல் ப்ளஸில் கலக்கலாம்
3என்று சொல்லி இருப்பது அதில் இருக்கும் சில முக்கிய விஷயங்கள் கூட
 



    எப்படியோ இவர்களின் சண்டையில் லாபம் என்னவோ நமக்குதான்

 பேஸ்புக்கில் இது எனக்கு ஐந்தாவது வருடம் முதல் நான்கு வருடம் இந்தியர்கள் இல்லாத வெறும் பேஸ்புக் இப்போ அதிகம் இந்தியர்கள் மட்டுமே
   அதற்க்கு முன்பு ஆர்குட்டை விட்டு வர மாட்டோம் என்று சொன்னவர்கள் எங்கே நடந்த ஒரு சின்ன மேஜிக் ஆர்குட்டை அம்போவென விட்ட அதிசயம்தான்

  இந்த கூகுல் ப்ளஸில் சேர கூகுல் ஜி மெயில் கணக்கு மட்டும் போதும்

 


Tuesday, September 20

ஹாரிஸ் ஜெயராஜ் இசை துளிகள் பகுதி 1



   ஹாரிஸ் ஜெயராஜ் தன்னுடைய முதல் படமான மின்னலே தொடங்கி விரைவில் வரும் ஏழாம் அறிவு வரை அவர் காட்டும் உழைப்பும் இசையில் காட்டும் புதுமை மட்டுமே அவரை இந்த அளவிற்கு தமிழ் மொழியில் முதல் இடத்தில வைத்து உள்ளது அவரை பற்றிய இசை துளிகள் 



  ஹாரிஸ் ஜெயராஜ் பிறந்தது  ஜனவரி எட்டு 1975  அதாவது அவர் முதல் படமான மின்னலே படத்திற்கு இசை அமைக்க நுழைந்த பொது அவரின் வயது 26 மட்டுமே  

   அவரின் முதல் படமான மின்னலே தமிழ் திரை உலகில் ஒரு இசை சுனாமியை ஏற்படுத்தியது என்னவோ உண்மை இந்த படத்தின் ஆடியோ கேசட் வரலாறு படைக்கும் அளவிற்கு விற்பனை ஆனது மற்றும் ஒரு சரித்திரம் 


  இந்த படத்தின்  வெற்றிக்கு மிக முக்கிய காரணம் ஹாரிஸ் அவர்களின் இசை என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை
   வேறென்ன வேறன்ன வேணும் மற்றும் வசீகரா பாடல்கள் வசீகரிக்கத தமிழ் சினிமா ரசிகர்கள் இருக்க மாட்டார்கள் 


 சென்னையில் பிறந்து வளர்ந்த ஹாரிஸ்  அவர்களின் தந்தை கூட இசை துறையில் வந்த ஒருவர் எஸ்.எம் .ஜெயகுமார் சொல்லும்படியான் ஒரு கிடார் கலைஞர் மற்றும் இல்லாமல் இசை மீது ஆர்வம் உள்ளவர்
மலையாள படங்களில் உதவி இசை அமைப்பாளராக பணியாற்றி உள்ளார்

   ஹாரிஸ் ஜெயராஜ் பற்றி குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம்  சிறு வயது முதலே கர்நாடிக் இசை மற்றும் ட்ரினிட்டி இசை கல்லூரியில் பட்டம் பெற்றவர் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள்

  இப்போ ரஹ்மான் மற்றும் ஹாரிஸ் சில ஒற்றுமைகள் :1


ரஹ்மான் பிறந்தது ஜனவரி 8  ஹாரிஸ் பிறந்த நாள் ஜனவரி 6 


ரஹ்மான் மற்றும் ஹாரிஸ் பிறந்தது சிங்கார சென்னையில்


இருவரும் ட்ரினிட்டி கல்லூரியில் இசை பட்டம் பெற்றவர்கள் 



                                                                                                               
தொடரும்

Sunday, September 18

எப்படி தயாரிக்கிறார்கள் "french fries " fm(27) & செய்தி கதம்பம்

பிரெஞ்சு பிரைஸ் சும்மா சொல்ல கூடாது நல்ல சூடான உப்பு தூவப்பட்ட பிரெஞ்சு பிரைஸ் மற்றும் டொமாடோ சாஸ் (தக்காளி சாஸ் ) உடன் சாப்பிடுவது இன்னும் சுவை தரும் விஷயம்

இந்த உருளை கிழங்கு எப்படி ஆளாக வெட்டப்பட்டு குளிர்விக்கப்பட்டு சரியான அளவில் சூப்பர் மார்க்கெட் மூலம் நம்மை எப்படி அதே தரம் சுவையுடன் வருகிறது என்று பார்க்கலாம்
பிரெஞ்சு பிரைஸ் பிறப்பிடம் பெல்ஜியம் இருந்த போதிலும் இதம் பெயர் உலகம் முழுவதும் பிரெஞ்சு பிரைஸ் என்று அழைக்கப்படுவது அதன் மற்றும் ஒரு சிறப்பு

எங்கேயும் எப்போதும் விமர்சன வெற்றி :

சும்மா சொல்ல கூடாது எங்கயும் எப்போதும் படத்திற்கு கிடைத்த சாதகமான விமர்சனம் எனக்கு தெரிந்து இதற்க்கு முன்பு எந்த படத்திற்கும் கிடைத்து இருக்குமா எனபது சந்தேகமே
சொல்லப்பட்ட விதம் சொல்ல வனந்த கருத்து மிகைப்படுத்தாமல் சொன்ன ஒரே காரணத்தால் மட்டுமே இந்த ஆதரவு விமர்சனம் என்று சொல்லலாம்
இல்லை என்றால் சும்மா இருக்கும் நம்ம விமர்சனம் அதற்க்கு எடுத்து காட்டு ஒரு
வந்தான் வென்றான் படத்திற்கு வந்த ஒரு வரி விமர்சனம்
" வந்தான் நொந்தான் "

ஆனால் இதே எங்கேயும் எப்போதும் படத்திற்கு நான் சொல்லும் விஷயம் முடிந்தால் திரை அரங்கில் பார்க்கவும் "


காமெடி உண்ணாவிரதங்கள் மற்றும் உண்மையான உண்ணாவிரதங்கள் :
இப்போ உண்மையான காரணத்திற்கு உண்ணாவிரதம் இருப்பவனையும் காமெடி ஆகா மாற்றி விட்டது இந்த ஹசாரே மற்றும் மோடி போன்றவர்களின் விளம்பர உண்ணாவிரதங்கள்
ஒரு பக்கம் இரோம் சர்மிள பற்றி எப்படி அதிக மக்களுக்கு தெரியாமல் இந்த மேடைய செய்ததோ அதே போல இப்போ கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான உண்ணாவிரதமும் திட்டமிட்டு மீடியா ஒளிபரப்புவதில்லை

அந்நிய செலவாணி கவலை :

வெளிநாட்டில் இருக்கும் ஒவ்வொரு இந்தியனுக்கும் ஒரு கவலை நிச்சயம் இருக்கும் அது தங்கள் இருக்கும் நாட்டில் பண பதிப்பு இந்திய பணமதிப்பில் அதிகம் ஆனால் சந்தோஷம் அடைவதும் குறைந்தால் வருத்தம் அடைவதும்

என்ன செய்வது இங்கே இருக்கும்போது இந்திய பண மதிப்பு அதிகம் தேவை என்று நினைக்கும் மனம் அதே நாம் இந்தியாவில் இருக்கும்போது குறைய வேணும் என்று நினைப்பது இயல்புதானே
" எப்போடா சொந்த நாட்டில் அமெரிக்க லண்டன் துபாய் போல நாம் வாழ்வது

இதற்க்கு நாமும் உண்ணாவிரதம் இருந்தால் மட்டுமே உண்டு