Sunday, September 4

Most Viewed YouTube Channels - மியூசிக் வீடியோ august Month



உலக அளவில் அதிகம் பேர் பார்த்த இசை வீடியோ பற்றி இந்த வாரம்
இது இந்த மாதத்தில் அதிகம் பேர் பார்த்த ஹிட்ஸ் கணக்கில் இந்த டாப் வீடியோ கணக்கிடப்படுகிறது
இதில் மொத்த பார்வையாளர்கள் கணக்கிடப்படுவதில்லை
இந்த மாதத்தில் அதிக அளவில் பார்க்கும் ஹிட்ஸ் கணக்கிட்டு இந்த டாப் வீடியோ


முதல் இடத்தில இருப்பது

 டாப் நம்பர் 1 இருப்பது nicki in super bass






டாப் நம்பர் 2 இருப்பது PARTY ROCK ANTHEM




டாப் நம்பர் 3 இருப்பது DANZA KUDURO





டாப் நம்பர் 4 இருப்பது RAIN OVER ME FT. MARC ANTHONY


டாப் நம்பர் 5 இருப்பது LAST FRIDAY NIGHT





  " ENJOY THE VIDEO AND DON'T FORGET VOTE THE ARTICLE FACEBOOK AND
     SHARE THE ARTICLE UR FACEBOOK"

Saturday, September 3

அஜித் ஹாரிஸ் ஜெயராஜ் சூர்யா மற்றும் அரசு கேபிள்

அஜித் (rock )

   
   இந்த ஆண்டில் சூப்பர் ஹிட் படங்கள் சிறுத்தை ,கோ ,காஞ்சனா வரிசையில்  மங்காத்தா சந்தேகம் இன்றி சேரும் எல்லா சாத்திய  கூறும் உள்ள படம் இது
   படத்தில் உங்களை காப்பாற்றுவேன் நீங்கள்தான் எனக்கு கடவுள் என்று  ரசிகனை ஏமாற்றும் வசனங்கள் இல்லை படம் வருவதற்கு முன்பு படம் ஓட வைக்க ஆடு மாடு நோட்டு புத்தங்கள் தரவில்லை
  ரசிகர்களை நோக்கி என் படம் பிடித்து இருந்தால் மட்டும் பாருங்கள் என்று சொல்லி ரசிகர் மன்றங்களை களைத்த பின்பு இவர் படம் எங்கே ஓடும் என்று அனைவரும் நினைத்து இருந்தது என்னவோ உண்மை

  ஆனால் அஜித் மீண்டும் தான் ஒரு பாக்ஸ் ஆபீஸ் ஹீரோ என்று நிருபித்து விட்டார்
ஒரு படம் ஓட நல்ல கதை மட்டுமே தேவை தேவை இல்லாத ரசிகர்களை ஏமாற்றும் பில்ட் அப் தேவை இல்லை என்று இனிமேல்  புரிந்தால் சரி 
  இதே சூட்டோடு வரும் பில்லா படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் படம் பிடித்து இருந்தால் மட்டும் படம் பார்க்க சொல்லும் அஜித் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  கொசுறு : மணிரத்தனம் அஜித் விரைவில் இணைவார்கள் என்று தெரிகிறது

ஹாரீஸ் ஜெயராஜ் 3டி உலக இசை பயணம் 



   தமிழ் திரை உலகில் no 1  இசை அமைப்பாளர் முதல் முறையாக உலக இசை பயணம் மேற்கொண்டுள்ளார் எல்லா இசை நிகழ்ச்சி நவீன தொழில்நுட்பம் மூலம்  3டி ஒளிபரப்பாவது சிறப்பு மற்றும் ஒரு சிறப்பு முதல் நிகழ்ச்சி அவர் நம் தமிழ் மண்ணில் தொடங்குவது
முதல் இசை நிகழ்ச்சி சென்னை மாயாஜாலில் அக்டோபர் 2-ந்தேதி நடைபெறும். கோவையில் அக்டோபர் 16-ந்தேதியும் ஹைதராபாத்தில் 22-ந்தேதியும், துபாயில் நவம்பர் 18-ந்தேதியும், மலேசியாவில் டிசம்பர் 3-ந்தேதியும் நடைபெறும்
ஹரிகரன், கார்த்திக், திப்பு, கிரிஷ், ஹரிணி, ஆண்ட்ரியா, சின்மயி, பென்னிதயாள், நரேஷ் அய்யர், ஹரீஷ் ராக வேந்திரா புகழ் பெற்ற மற்றும் வெளிநாட்டு கலைஞர்களின் நடனமும் இடம்பெறும்

  மிக குறைந்த செலவில் உலக தரமானா இசை நிகழ்ச்சி நடத்தும் ஹாரிஸ் அவர்கள் இதன் மூலம் வரும் வருமானத்தில் ஒரு பகுதியை ஏழை குழைந்தைகள் உதவிக்கு வழங்க இருக்கிறார்


 அசத்தும் சூர்யா   இனி  இந்திய நாயகன் 


  தமிழில் ஏழாம் அறிவு ,மாறன் படங்களில் நடித்து வரும் சூர்யா அடுத்த சூப்பர் ஹிட் இந்திய அளவில் கொடுக்க உள்ளார் தன் தம்பி நடித்தூ சூப்பர் ஹிட் ஆனா பையா படம் ஹிந்தி மொழியில் ரீமேக் ஆகா போகிறது கார்த்திக் வேடத்தில் ஹிந்தி மொழியில் கலக்க போவது யாரும் இல்லை நம்ம சூர்யா அவர்களே
  ஏற்கனவே விளம்பரங்கள் மற்றும் ரத்த சரித்திரா படம் மூலம் ஹிந்தி மொழியில் நுழைந்த இவர் அடுத்த ஏழாம் அறிவு ஹிந்தி மொழியில் வருகிறது கலக்குங்க சூர்யா அவர்களே

  அரசு  கேபிள் (எங்கே சன் டிவி )


   நம்ம ஊரை பொறுத்த வரை கேபிள் டிவி என்றால் அது சன் டிவி என்பதை மாற முடியாது என்பதை நிருபித்த அரசு கேபிள் மக்கள் நூறு சேனல் கொடுத்தாலும் சன் டிவிக்கு இணையாகுமா
பார்க்கலாம் கட்டண சேனல்கள் உடன் விரைவில் பேச்சு வார்த்தை நடைபெற்று; விரைவில் கட்டண சேனல் வரும் என்று எதிர்பார்க்கலாம்
  அது வரை பக்கத்து வீட்டில் போய்தான் நாடகம் பார்க்க வரும் நம்ம பெண்களுக்கு
டிஸ்கவரி தமிழ் போன்ற சேனல்கள் வழங்கும் இந்த அறிவியல் நிகழ்சிகள் இலவசமாக வழங்க சொல்வது எப்படி சரியாகும்
தமிழ் சேனல்கள் இலவசமாக வழங்கலாம் ஆனால் டிஸ்கவரி போன்ற சேனல்கள் ரூ .10 கொடுத்தாலும் குறைவே  

Thursday, September 1

A.R.ரஹ்மானின் ராக் ஸ்டார் முன்னோட்ட இசை துளிகள்



   ரஹ்மானுக்கு தால் படத்திற்கு பிறகு முழுவதும் இசையுடன் சம்பந்தப்பட்ட படம் ஹிந்தி மொழியில் கிடைக்க வில்லை என்ற ஆசை நிறைவேற்றி உள்ள படம் இது 


தால் படத்திற்கு எப்படி ரஹ்மானின் இசை ஒரு தூணாக இருந்ததோ அதே போல இந்த படத்திற்கு இருக்கும் என்பதில் மாற்றம் இல்லை 



  எவ்வளவுதான் இசை சிறப்பாக இருந்தாலும் அதை இன்னும் சிறப்பாக அனைவரிடம் கொண்டு செல்ல உதவுவது படத்தின் வெற்றி கூட.





யுவராஜ் (சுபாஸ் கய் இயக்கத்தில் வந்த படம்) இந்த படத்தில் ரஹ்மானின் இசை எவ்வளவு சிறப்பாக இருந்த போதும் இந்த படத்தின் தோல்வி இந்த இசை ஒரு அளவிற்கு மேல் அனைவரிடமும் செல்லவில்லை
சல்மான் கான் நடிப்பில் இந்த படத்தில் ரஹ்மானின் இசை சிம்பொனி இசை ஒத்து இருந்த போதும் வெற்றி அளவு அவரின் ரசிகர்களிடமும் இசை விமர்சகர் இடம் மட்டுமே பாராட்டு பெற்றது

  இப்போ ராக் ஸ்டார் விஷயத்திற்கு வருவோம் 


   இந்த படத்தின் இயக்குனர் அவர்களுக்கு இது நான்காவது படம் ரஹ்மானுடன் இணையும் முதல் படம்  இந்த கதை ஒரு இசை கலைஞன் சம்பந்தப்பட்ட படம் என்பதால் இம்தியாஸ் இந்த படம் இசை அமைத்தால் அது ரஹ்மான் அவர்களின் இசை மட்டுமே இருக்க வேண்டும் என்ற முடிவில் ரஹ்மானை இந்த படத்திற்கு இசை அமைப்பாளாராக ஒப்பந்தம் செய்தார்

  ரூ 60 கோடி செலவில் ஒரு இசை சம்பந்தப்பட்ட படத்திற்கு  மிக பெரும் பொருள் செலவில் தயாரித்துள்ளது எரோஸ் மற்றும் ஸ்ரீ விநாயக் சினி விசன் 



  இந்த படத்தின் மூன்று நிமிட முன்னோட்டத்தில் வரும் ரஹ்மானின் இசை இந்த படம் ரஹ்மானின் இசை வாழ்க்கையில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகா இருக்கும் என்று எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது

  ரன்பீர் கபூர் ,நர்கீஸ் மற்றும் சமிபத்ல் மரணம் அடைந்த ஷம்மி கபூர் அவர்களுக்கு இது கடைசி படம்

  



இந்த படத்தின் முன்னோட்ட காட்சிகள் 
இந்த முன்னோட்டத்தில் வரும் ஷதா  ஹக் பாடல் அதனை ஒட்டி வரும் பேஸ் கிடார் இசை ஆவேசம் கொண்டுள்ள ஒரு இசை கலைஞனின் இசை எப்படி வரும் என்று ரஹ்மானின் மூலம் வந்துள்ளது

        ஹிந்தி திரை உலகில் அதிகம் எதிர்பார்க்கும் இசை இன்றைய அளவில் ராக் ஸ்டார் முன்னிலையில் உள்ளது