Tuesday, April 5

A. R. Rahman: The Spirit Of Music - வாழ்க்கை வரலாறு

.


இந்திய இசை தாண்டி உலக அளவில் புகழ் பெற்ற இந்தி இசை கலைஞர்களில் மிக முக்கியமான நம்ம ரஹ்மான் பற்றிய ஒரு முழுமையான வாழ்க்கை வரலாறு புத்தகம் ஆங்கில மொழியில் வருகிறது 
 

ரஹ்மான் வாழ்க்கை வரலாறு புத்தகம் இதுவரை இரண்டு மூன்று வந்து இருந்தாலும் இது இன்னும் சிறப்பானதாக இருக்கும்
இந்த புத்தகத்துடன் ஒரு சிடி இலவசமாக வருகிறது
இதில் ரஹ்மானின் இசை சாதனைகள் பல பற்றி விவரமாக எழுதபட்டுள்ளது .ரஹ்மான் ஆஸ்கர் விருது வாங்கியது ,டைம் இதழில் உலக அளவில் புகழ் பெற்றவர் வரிசையில் வந்தது ,ரஹ்மானின் இசை உலக அளவில் 150 மில்லியன் விற்றது
ரஹ்மான் இந்தியாவிற்கு தேடி தந்த பெருமைகள் பல இதில் இடம் பெற்றுள்ளது 
இந்தியாவின் தேசிய கீதத்திற்கு இசை அமைத்தது போன்றவைகள் இதில் இடம்பெற்றுள்ளது
 

ரஹ்மானின் சாதனைகள் அவர் இந்தியர்களில் கனவாக இருந்த ஆஸ்கரைஇரண்டாக வாங்கி இந்தியர்களை பெருமைபடுத்தியது போன்ற விஷயங்கள் மிகவும் நேர்த்தியான வடிவில் வருகிறது

இந்த வாழ்க்கை வரலாறு புத்தகத்தை எழுதியது நஸ் ரீன் முன்னி என்பவர் இவர் இதற்க்கு முன்பு குருதத் ,ஜாவீத் அக்தர் ,லதா மங்கேஸ்கர் பற்றி புத்தகங்கள் எழுதி உள்ளார்


இந்தப் புத்தக வெளியீட்டு விழா ஏப்ரல் 6 அன்று நடைபெறுகிறது திரையுலகப் பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள். மணிரத்னம் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். ஹாலிவுட் பாலிவுட் கலைஞர்கள் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள்.


புத்தக பெயர் : A. R. Rahman: The Spirit Of Music
ஆசிரியர்       :Nasreen Munni Kabir
வெளியுடு      :Om Books International
புத்தக வகை  : Binding: Hardback With Music Cd

          @@@@ JAI HO @@@@@@@@@@@
          @@@@ JAI HO @@@@@@@@@@@

Monday, April 4

தெய்வ திருமகன் -விக்ரம் அவர்களின் மாறுபட்ட நடிப்பில்




மதாராசா பட்டினம் படம் தந்த பின்பு விஜய் அவர்களின் மாறுபட்ட இயக்கத்தில் .தமிழ் திரை உலகில் மாறுபட்ட நடிப்புகளில் பட்டை கிளப்பும் 
விக்ரம் வித்தியாசமான வேடத்தில் நடிக்கும் படம் தெய்வ திருமகன் 
 
இந்த படத்தின் முன்னோட்ட காட்சிகள் பார்க்கும்போது நிரவ் ஷா அவர்களின் கேமரா இந்த படத்தின் முக்கிய இடத்தில இருக்கும் என்ற நம்பிக்கை தருகிறது

முன்னோட்ட வீடியோவில் விக்ரம் அவர்களின் அந்த குழந்தை தனம் கலந்த பேச்சு வாவ் !
விக்ரம் உங்களிடம் தமிழ் திரை உலகில் அதிகமான திறமைகள் உள்ளது அந்த திறமைகளை கொண்டு செல்லும் அதிர்டம் மட்டும் குறைவாக உள்ளது நிச்சயம் இந்த படம் உங்களுக்கு ஒரு மைல் கல்லாக இருக்கும்

தமிழ் திரை உலகில் இருந்து கொஞ்சம் காலம் ஒதுங்கி இருந்த ராஜ காளியம்மன் மோகன் நடராஜன் மீண்டும் விஜய் மற்றும் விக்ரம் மீது இருக்கும் நம்பிக்கையில் இந்த படம் மூலம் வந்துள்ளார்

படத்தின் முன்னோட்ட காட்சியை பாருங்கள் 
 





வாக்களிப்பது நமது கடமை
வாக்களிப்பதுதான் உண்மையான தேசபக்தி (விளையாட்டில் இல்லை)

Saturday, April 2

எப்படி தயாரிக்கிறார்கள் BATH SOAP (FM) 7




எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் இன்று நீங்கள் பார்க்க போவது சோப்பு
சோப்பு எத்தனையோ விதங்கள் இருந்தாலும் அவரிகள் தயாரிப்பு முறை மாறுபடும் இன்று நாம் பார்க்க போவது தொழில்நுட்ப முன்னேற்ற காலத்தில் எவ்வளவு விரைவாக நேர்த்தியாக சோப்பு தயாரிக்கிறர்கள் என்று பாருங்கள்

சோப்பை உடம்புக்கு போட்டு குளித்தால் உடம்புக்கு நல்லது
மற்றவர்களுக்கு போட்டால் வேலைக்கும் பணத்துக்கும் நல்லது