Saturday, October 30

டியோட்ரன்ட் விளம்பரம் பெண்களும்

      
ஒரு விளம்பரம் என்பது ஒரு பொருளை விற்க எந்த அளவிற்கு முக்கியம் என்பது அனைவரும் அறிந்தது
ஒரு தீப்பெட்டி முதல் சேலை வரை எந்த பொருளும் விளம்பரம் இல்லாமல் விற்பது என்பது இப்போது குதிரை கொம்பு
அந்த விளம்பரம் படைக்கப்படும் விதத்தில் அனைவரையும் கவரும் ஆனால் நான் பார்த்த வரை அதிகமான  டியோட்ரன்ட் விளம்பரம்  சொல்லி வைத்த மாதிரி ஒரே மாதிரி பாருமுலவை பின்பற்றி வருவது ஏனோ எனக்கு தெரியவில்லை

                           பெண்களை அழாகாக காட்டி விளம்பரம் செய்யும் சோப்பு விளம்பரம் ஆகட்டும் குழந்தை பயன்படுத்தும் பொருள்களுக்கான விளம்பரம் ஆகட்டும் பெண்களை அழாகா காட்டும் முறை தான் உள்ளது
இதற்க்கு எத்தனையோ உதாரணம் சொல்லலாம் ஆனால் இதற்க்கு விதி விளக்கா உள்ளது டியோட்ரன்ட் விளம்பரங்கள்

எவனோ ஒருவன் குளித்தோ குளிக்காமலோ டியோட்ரன்ட் அடிக்க எங்கே இருக்கும் ஒரு பெண் அந்த வாசனைக்கு அடிமையாகி அவனை தேடி வருவது போன்ற கருத்துகளை கொண்ட விளம்பரம் இங்கு மட்டும் இல்லை வெளிநாட்டு டியோட்ரன்ட் விளம்பரம் கூட இதே பார்முலாவை பயன்படுத்துகிறது

   ஏன் இது போன்ற விளம்பரத்தை  மேல் நாட்டில் எதிர்க்க வில்லை 

     சின்ன சின்ன விசயத்திற்கு கூட எதிர்ப்பு செய்யும் நம் ஆட்கள் பெண்களை கேவலபடுத்தும் இது போன்ற விளம்பரம் பற்றி என்ன நினைக்கிறார்கள்

   டியோட்ரன்ட் என்பதே உடலில் வரும் துர்நாற்றத்தை வேர்வை நாற்றத்தை போக்க  என்ற கருத்தை கொண்டு இல்லாமல் டியோட்ரன்ட் அடித்தால் பெண்கள் மயங்குவார்கள் என்ற பாணியில்  செல்லும் சில விளம்பரங்களை என்னவென்று சொல்வது அழகிய சில விளம்பரங்கள் இருக்கும் அதே நேரத்தில் இது போன்ற சில விளம்பரங்கள் இருப்பதால் இந்த கேள்வி ?


          சில டியோட்ரன்ட் விளம்பரம் அந்த பொருள் பற்றி சொல்லமால் அந்த டியோட்ரன்ட் பயன்படுத்தினால் பெண்கள் மயங்குவார்கள்  என்று சொல்வதை என்னவென்று சொல்வது


               







ஒரு அழகிய முறையில் spinz விளம்பரம்





                *******     VOTE THIS ARTICLE   ******

        மறக்காமல் உங்கள் வாக்கை அளிக்கவும்



                                                  விரைவில்

                                 ஹாய் அரும்பாவூர் விருதுகள் 2010

Friday, October 29

IT இளைஞரின் "காதல் பீவர்" பாடல் விமர்சனம்


   சாய் சுதர்சன் இந்த ஐ டி  இளைஞரின் இசை ஆர்வத்தின்  முயற்சின் முதல் வெளியிடு  காதல் பீவர் இவரின் முதல் முயற்சியில் இவரே பாடல் எழுதி அதற்க்கு மெட்டமைத்து  பாடலையும் பாடி உள்ளார்

பாராட்ட மற்றும் கேட்கக்கூடிய  முயற்சி

இது இவரின் முதல் இசை முயற்சி என்பதால் கீ போர்ட் துணையுடன் இரண்டே இசை இணைப்புகள் வைத்து பாடல் வரிகளை அழகாக ஏற்ற இறக்கத்துடன் பாடி உள்ளார்
 
 அதிலும் பாடல் வரிகள் பாராட்ட வேண்டிய ஒரு முயற்சி காதலன் நகர பின்னணியில் பாடும் பாடல் போன்ற வரிகள் தெர்மா மீட்டர் ,ட்ரிக்னோ மெட்ரிக்   வளைவுகள் என பாடல் வரிகள் கேட்க்கும் விதமாக உள்ளன





இவர் சொல்லி உள்ளது போல் இது இப்போது ஆரம்பம் மட்டுமே வரும் காலங்களில் இன்னும் பல இசை கோர்ப்புகள் சேர்க்கும் போது பாடல் இன்னும் கேட்க்க சிறப்பாக இருக்கும்
அவர் எழுதிய வரிகள் சில கீழே





"ஏதோ  மாற்றம்  என்னை  வந்து  தாக்குதே !

என்னை  உந்தன்  கால்  அடியில்  கொண்டு  புதைக்குதே !
நீ  சிரித்தால்  என்  மேல்  மவுண்ட்  எவரெஸ்ட்  வந்து  உருகுதே !
கண்  அடித்தால்  எந்தன்  இதயம்  வெடித்து  சிதறுதே !
உன்  சென்டிமீட்டர்   பார்வையால்  அந்த  தெர்மோமீட்டர்  தெரிகுதே 
உன்  ட்ரிக்னோ மெட்ரிக்   வளைவுகள்  என்  தூக்கத்தை  திருடும்  பாவிகள் !
இதற்கு  பேர் தான் காதல்  பீவரா   ?
உன்  கண்கள்  ரெண்டும்  என்னை  சூறையாடி  சென்றதா !"

நிச்சயம் இவரின் இந்த முதல் முயற்சியில் குறை சொல்ல ஒன்றும் இல்லை இன்னும் சில இசை சந்தங்களை சேர்த்து இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும்

ஒரு சில இடங்களில் கீபோர்ட் இசை ஒரே மாதிரி வருவது ஏதோ மாதிரி உள்ளது

ஆனால் இவர் இது சோதனை  முயற்சி என்று சொல்லி இருப்பதால்

பாஸ் மார்க் வாங்கிவிட்டார்

பாடல் வரிகள் பாடல் கேட்க கீழே



stand alone player



Quantcast


இவரும் ஷங்கர் மகாதேவன் போல சிறந்த இசை அமைப்பாளர்  பாடகராக வருவார் என எதிர்பார்க்கலாம்


இருவரும் கணினி  துறையில் இருந்து  இசை மீது ஆர்வம் கொண்டுள்ளவர்கள்


"இந்த பதிவிற்கு மறக்காமல் வாக்களித்து இந்த பாடல் பற்றி பலருக்கு தெரிய செய்யுங்கள் "


மறக்காமல் சாய் சுதர்சன் அவர்களின் இந்த முயற்சி பற்றி பின்னுட்டம் இடவும்

          இந்த பதிவை பதிவை படித்ததிற்கு  நன்றி 


 சாய் சுதர்சன் வருங்கால  இசை உலகில் சாதனை செய்ய வாழ்த்துவோம்
 


                        *********   vote the article **********
 
 

Thursday, October 28

தீபாவளி கலைஞர் குடும்ப திரைபடங்கள் (வேற வழி )

        
         தீபாவளி என்றால் பத்து படங்களுக்கு மேல் வருவது அந்த காலம் வர சில படங்களே ஒழுங்கா வருவதில்  சிக்கல்  அப்படியே வந்தாலும் திரை அரங்கில் ஓடுவது சில நாட்கள் அவற்றில் பாதி நாட்கள் காலியான திரை அரங்கு என தமிழ் திரை உலகின் போக்கே மாறிவிட்ட இந்த காலத்தில் தமிழ் திரை உலகம் முழுமையாக கலைஞர் குடும்பம் வசம் சென்று விட்டது என்பது சால சிறந்தது
                   ஒரு பக்கம் சன் பிக்சர்ஸ் ,உதயநிதி ஸ்டாலின் ,துரை தயாநிதி என இவர்களின் மூன்று பேருடைய கையில் தமிழ் திரைப்படம் முழுமையாக சென்று விட்டது .

 இந்த நிலையில் தீபாவளிக்கு அதிகமான படங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மூன்று படங்கள் மட்டுமே வரும் என எதிர்பார்க்க படுகிறது
அதில் இரண்டு கலைஞர் குடும்ப படங்கள் 1 . மைனா       2 . வா குவாட்டர் கட்டிங் (என்ன புதுமை ?)

மற்ற படம் தெலுங்கு ரீமக் உத்தமபுத்திரன்

1  மைனா (உதயநிதி ஸ்டாலின் )
                           உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தை பார்த்து தன்னுடைய தூக்காம் போய் விட்டது .இந்த படம் என் மனதை என்னவோ செய்து விட்டது என்று கூறிய படம் தனக்கு இந்த படம் மிகவும் பிடித்து விட்ட காரணத்தால் இந்த படத்தை அவரே வாங்கி இந்த தீபாவளிக்கு  வெளியுடுகிறார்
     கமல் இப்படத்தை பற்றி சிறப்பாக சொல்லி இருப்பது இப்படம் பற்றி ஒரு எதிர் பார்ப்பை உண்டாக்கி விட்டது மலை காடு பின்னணியில் ஒரு காதல் கதையாக இருக்கும் இப்படம் தமிழ் திரைபடங்களில் ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்பது  மட்டும்   நிச்சயம் 


      இப்போது இருக்கும் நிலையில் புதுமை விரும்பும் தமிழ் ரசிகர்கள் இப்படத்தை பெரும் வெற்றி படமாக மாற்றுவார்கள் இல்லை என்றால் உதயநிதி டீம் அந்த வேலை செய்யும்

 2 . வா குவார்டர் கட்டிங் (துரை நிதி அழகிரி ) என்ன புதுமையான தலைப்பு                ஓரம் போ படத்திற்கு பின் அந்த இயக்குனர்களின் வித்தியாசமான படைப்பு .மாலை தொடங்கி காலைக்குள் ஒரு இரவில் நடைப்பெறும் கதை .சென்னை பின்னணியில் கதை
தமிழ்படம் வெற்றிக்கு பின் அதே நாயாகன் அதே தயாரிப்பாளர் என்று இப்படம் பற்றி ஒரு எதிர்பார்ப்பு உண்டாக்கி விட்டது .இப்படத்திற்கு தொலைக்கட்சிகளில் வரும் விளம்பரம் நிச்சயம் இப்படம் கொஞ்சம் சிரிக்கவும் வைக்கும் என  நம்ப வைக்கிறது


           மதுரை ஆள்பவரின் சென்னை களம் கொண்ட கதை தீபாவளிக்கு என்ன மாயம் செய்யும் என்று பார்க்கலாம்

3 .உத்தமபுத்திரன்
இப்படம் பற்றி சொல்ல ஒன்றும் இல்லை தனுஷ் நடித்த படங்கள் எல்லாம் இப்போ ரீமேக் படமாக இருப்பது அவர் தன்னுடைய  குறைந்த பட்ச வெற்றி தக்கவைத்து கொள்ள ரீமேக் படம் உதவி புரியும் என நினைது விட்டாரோ என்னவோ
                 "ரீமேக் படங்களில் நடிப்பதும் அதம் மூலம் வெற்றி பெறுவதும் எனக்கு என்னவோ உண்மையான வெற்றி இல்லை என சொல்வேன் "

              
                     கலைஞர் டிவியில் அடிக்கடி சிவாஜி திரைப்படம் காட்டி விரைவில் என விளம்பரம் வருகிறது எனவே தீபாவைல்க்கு கலைன்ஞர் டிவி அதிரடி படம் சிவாஜி என் நினைக்கிறேன்
         சன் டிவி அதற்க்கு என்ன ஆப்பு வைத்து உள்ளது என பொருத்து இருந்து பார்க்கலாம்  
                               விரைவில்
                               விரைவில்
                             
                "ஹாய் அரும்பாவூர் விருதுகள் 2010 " 
                          HAI ARUMBAVUR CINEMA AWARDS 2010



                           உங்கள் மேலான ஆதரவு தேவை    



 பேஸ்புக் மூலம் இந்த பதிவை பற்றி உங்கள் நண்பர்களுக்கு சொல்லுங்கள் கருத்துக்களை கூறுங்கள்





             இதுவரை பொறுமையாக படித்ததிற்கு நன்றி