Tuesday, November 10

எ ஆர் ரஹ்மானும் பிலிம் பேர் விருதுகளும்





எ ஆர் ரஹ்மானும் பிலிம் பேர் விருதுகளும்

இந்திய அளவில் தரப்படும் மிக முக்கிய விருதுகளில் மிக முக்கிய விருது என்றால் பிலிம் பேர் விருது ஒன்று


1954 ஆண்டு முதல் இன்று வரை தொடரும் மிக பழமையான விருதுகளில் பிலிம் பேர் விருது ஒன்று

அந்த பிலிம் பேர் விருது அதிக அளவில் பெற்றவர் என்ற ஒரு சிறப்பு ரஹ்மானுக்கு உண்டு அதை பற்றி ஒரு ஆய்வு

எ ஆர் ரஹ்மானின் பிலிம் பேர் விருது வேட்டை தொடங்கியது அவரின் முதல் படத்தில் இருந்தே

1992 ரோஜா சிறந்த இசை அமைப்பாளர் விருது

1993 ஜென்டில் மேன் சிறந்த இசை அமைப்பாளர் விருது

1994 காதலன் சிறந்த இசை அமைப்பாளர் விருது

1995 பாம்பே சிறந்த இசை அமைப்பாளர் விருது இசைப்

1995 இதே ஆண்டு ஹிந்தி ஆர் டி பர்மன் விருது

1996 காதல் தேசம் சிறந்த இசை அமைப்பாளர் விருது

ரங்கிலா (ஹிந்தி ) சிறந்த இசை அமைப்பாளர் விருது

1997 மின்சார கனவு சிறந்த இசை அமைப்பாளர் விருது

1998 ஜீன்ஸ் சிறந்த இசை அமைப்பாளர் விருது

1999 முதல்வன் சிறந்த இசை அமைப்பாளர் விருது

தில் சே (ஹிந்தி) சிறந்த இசை அமைப்பாளர் விருது

2000 அலை பாயுதே சிறந்த இசை அமைப்பாளர் விருது

தால் (ஹிந்தி) சிறந்த இசை அமைப்பாளர் விருது

2002 கன்னதில் முத்தமிட்டால் சிறந்த இசை அமைப்பாளர் விருது

லகான் (ஹிந்தி) சிறந்த இசை அமைப்பாளர் விருது

2003 இந்த ஆண்டு முதல் பின்னணி இசைக்கு தனியாக விருது தரப்பட்டது


தி லெஜன்ட் பகவத் சிங் சிறந்த பின்னணி இசை

2005 ஸ்வதேஸ் சிறந்த பின்னணி இசை

2006 சில்லுனு ஒரு காதல் சிறந்த இசை அமைப்பாளர் விருது

2007 ரங் தே பசந்தி சிறந்த இசை அமைப்பாளர் விருது

2007 சிவாஜி சிறந்த இசை அமைப்பாளர் விருது

2008 குரு (ஹிந்தி) சிறந்த இசை அமைப்பாளர் விருது

குரு (ஹிந்தி ) சிறந்த பின்னணி இசை


2009 ஜானே து யா ஜானே சிறந்த இசை அமைப்பாளர் விருது

ஜோதாஅக்பர் சிறந்த பின்னணி இசை

இதுவரை எ ஆர் ரஹ்மான் ஹிந்தி படத்திற்கு 13 விருதுகள் தென்னிந்திய திரைப்படம் 11 விருதுகள் என்று மொத்தம் 24 விருதுகள் பெற்று பிலிம் பேர் விருது நாயகனாக உள்ளார் கமல் ஹாசன் 19விருதுகள் பெற்று இரண்டாம் இடத்தில உள்ளார்

மிக குறுகிய காலத்தில் அதிக பிலிம் பேர் விருது பெற்றவர் எ ஆர் ரஹ்மான் என்றால் மிகை இல்லை


இதே பிலிம் பேர் இதழ் ஆண்டு தோறும் மிகவும் சிறந்த் புகழ் பெற்ற ஹிந்தி திரை உலகை சேர்ந்த பிரபலங்களை தேர்ந்தெடுக்கும்
இதில் இசை அமைப்பாளர் பிரிவில் இந்த கருத்து கணிப்பு தொடங்கிய ஆண்டு முதல் எ ஆர் ரஹ்மான் இன்று வரை முதல் இடத்தில உள்ளது இன்னொரு சிறப்பு
எல்லா பிரிவுகளும் சேர்ந்து பிலிம் பேர் பவர் லிஸ்ட் பிரிவில் இசை அமைப்பாளர் எ ஆர் ரஹ்மான் மட்டுமே இடம் பெற்று உள்ளார்

அரும்பாவூர் ப்ளாக் இந்த ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி விருது
LINK THE SITE Visit சிறந்த தொலைக்காட்சி விருது அறிவிப்பு !


>தமிழின் சிறந்த பத்திரிக்கை குழுமம் எது!

Monday, November 9

தரமான திரைப்படங்களுக்கு அரசே நிதி உதவி அளிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்



தரமான திரைப்படங்களுக்கு அரசே நிதி உதவி அளிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்

தரமான படங்களுக்கு அரசு நிதி உதவி அளிக்க வேண்டும் என்ன கொடுமை சார் இது .மக்கள் பணம் எப்படி எல்லாம் வீணாக போக வேண்டும் ஒவ்வொருவரும் கங்கணம் கட்டிக்கொண்டு நடகின்றனரோ என தோன்றுகிறது


தமிழ் பெயர் வைத்தால் போதும் வரி இல்லை என்ற ஒரு சலுகைகள் அளித்து மக்களின் சேவைக்கு பயன் படும் பணம் வீணாக போகிறது

இதனால் தமிழ் மக்கள் என்ன பயன் அடைந்தனர் என்று யாருக்கும் தெரியாத இந்த நேரத்தில் தரமான படம் தரமற்ற படம் என்ன சார் ?உள்ளது மக்களுக்கு நல்ல உணவு கிடைக்கிறதா நல்ல சுகதரமான இட வசதி உள்ளத என்பதை விட்டு விட்டு சினிமாகாரக்கு
வரி விலக்கு மக்களுக்கு இலவச கலர் டிவி இது தேவையா

ஏன் மக்கள் வரி பணத்தில் ஊருக்கு ஒரு பூங்கா அமைக்கலாம் ,தூர்த்து போய் உள்ள குளம் குட்டை ஏரி ஆழபடுதலாம்

மழை காலம் வந்தால் வெள்ளம் போன்றவை ஏற்பட காரணம் தண்ணிர் செல்ல வசதி இல்லாமல் பாலங்களின் கீழ் பழைய குப்பைகள் மற்றும் ஆறு ஓரங்களில் உள்ள தடுப்புகளை மழை வரும் முன் சரி செய்யும் அமைப்பை ஏற்படுத்தலாம்
மழை வந்து முடிந்த பின் விரைவில் தண்ணிர் பஞ்சம் வர காரணம் மழை நீர் சேகரிப்பு போன்ற வசதிகளை அரசு செய்யாததும் ஒரு காரணம்

இப்படி மக்களுக்கு பயன்படும் எத்தனயோ திட்டத்திற்கு குரல் கொடுப்பதை விட்டு விட்டு நல்ல சினிமா கெட்ட சினிமா என்ன பாகுபாடு உள்ளது

சினிமாவை எதிர்க்கும் எதிர்க்கும் ராமதாஸ் இதற்கு குரல் கொடுப்பது வேதனையாக உள்ளது

எந்த சினிமாகாரனும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று சினிமா எடுப்பதில்லை இது அவரின் வியாபாரம் இதில் அவர் லாபம் அடைந்தால் மக்களுக்கு என்று வருடம் வருடம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு பங்கு தருகிறேன் என்று சொன்னாரா ?
படம் ஓட வில்லை என்றால் அதற்க்கு நூறு காரணம் உள்ளது



இப்போது தியேட்டர் செல்ல மக்கள் யோசிக்க காரணம் என்ன நல்ல ஒலி ஒளி அமைப்பு எத்தனை திரை அரங்கில் உள்ளது சொல்லுங்கள். நல்ல தரமான ஒலி ஒளி குளிர்சாதன வசதி இருக்கை வசதி எத்தனயோ காரணம் உள்ளது



மக்கள் திரை அரங்கிற்கு வரவழைக்க மக்கள் பணம் வீணாக்க வேண்டாம்


அது எப்படி பட்ட படமாக இருந்தாலும்



இந்த கருத்து ஏதும் தவறு இருந்தால் எழுதவும்
நன்றாக இருந்தாலும் பாராட்டவும்


கீழே என் மற்றொரு கருத்தின் லிங்க்
Visit மரம் ஒரு வரம் !

Sunday, November 8

தமிழில் எ ஆர் ரஹ்மானின் எதிர்பார்ப்பு உள்ள படங்கள்

எ ஆர் ரஹ்மானின் தமிழ் பட எண்ணிக்கை குறைந்து வந்து ஆண்டிற்கு இரண்டு ஒன்று என்று மாறி விட்டது அதிலும் ரஹ்மான் ஹிந்தி படத்திற்கு காட்டும் ஆர்வம் தமிழ் படத்திற்கு காட்டவில்லையோ என்று தோன்றுகிறது
தமிழில் அவர் இசை அமைப்பில் வரவிருக்கும் படங்களில் சொல்லும்படியான படங்கள் சில உங்கள் பார்வைக்கு


1) விண்ணை தாண்டி வருவாயா
கௌதம் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி பிரிவுக்கு பின் ரஹ்மான் கௌதம் கூட்டணி மீது இப்போதே எதிர்பார்பை உண்டாக்கி உள்ள படம் என்றால் மிகை இல்லை
ரஹ்மான் ஆஸ்கர் விருதுக்கு பின் தமிழில் வரும் ரஹ்மான் இசை அமைப்பில் வரும் முதல் படம் என்பது இன்னொரு சிறப்பு
இணையதளங்களில் இந்த படத்தின் பாடல் என்று பல பாடல்கள் வர ஆரம்பித்து இந்த கூட்டணி பாடல்களுக்கு இப்போதே ஒரு எதிர்பார்ப்பு உள்ளது


2) எந்திரன்
ஷங்கர் ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி என்றாலே ஒரு தீபாவளி பண்டிகைதான்
ரசிகர்களுக்கு .அதிலும் இந்திய அளவில் அதிக செலவு செய்து எடுக்கப்படும் படம் என்பது மற்றும் சன் டிவி நிறுவனத்தின் முதல் நேரடி படம் என்பது இதன் இன்னொரு சிறப்பு
ஏற்கனவே எந்திரன் பாடல் என்று ஒரு பாடல் இணைய ரசிகர்களை ஏமாற்றியது நினைவிருக்கலாம்
அடுத்த ஆண்டு வரும் என்று எதிர்பார்க்க படும் ரஹ்மான் ரஜனி ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக எதிர்பார்க்க படும் படம் எந்திரன்

3) ராவணா
மணிரத்னம் மெட்ராஸ் டாகிஸ் நிறுவனத்தின் தயாரிப்பு தமிழ் ஹிந்தி என்று ஒரே நேரத்தில் இரு மொழிகளில் வரும் படம் தமிழில் விக்ரம் ஐஸ்வர்யா நடிக்கும் படம் மணிரத்னம் ரஹ்மான் கூட்டணி என்றால் இந்திய அளவில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் இந்த படம் அதே வகை சேர்ந்தது
மணிரத்னம் ரஹ்மான் கூட்டணி எப்போதும் போல் வெல்லும் என்பது உறுதி



4) சுல்தான் தி வாரியார்
இது ரஜனி கதாநாயகனாக வைத்து அனிமேசன் மூலம் தயாரிக்கும் படம் என்பது ஒரு சிறப்பு அதிலும் ரஜனி மகள் சௌந்தர்யா தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வரும் படம்
இதில் ரஹ்மானின் இசை ஒரு முக்கிய பங்காற்றும் என்பது உறுதி


இதே போல் ரஹ்மானின் இசை அமைப்பில் வரும் படங்கள் என்று சில படங்கள் உள்ளன அது பற்றி இந்த படங்கள் பற்றி அதிகாரபூர்வ தகவல்கள் இல்லத்தால் மேற்கொண்டு எழுத வில்லை
அவை சென்னைல் ஒரு மழை காலம்
கௌதம் இயக்கம்

மாணவர் தினம்
கதிர் இயக்கம்


சிறந்த தொலைக்காட்சி வாக்கு முடிய இன்னும் ஒரு நாளே உள்ளது உங்கள் வாக்கை மறக்காமல் இடுங்கள்
எனக்கும் வோட்டு போட்டு முன்னிலை அடைய செய்யுங்க ஸாரேஏஏஏஏஎ

தமிழில் எ ஆர் ரஹ்மானின் எதிர்பார்ப்பு உள்ள படங்கள்