Wednesday, November 4

லீலை அமைதியான மாலை நேரம்



லீலை அமைதியான மாலை நேரம்


ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஆதிகம் யாரும் பார்த்திராத ஆனால் .ஆனால் அதிகம் பேரால் அறியப்பட்ட நபர் அவர் பேசி யாரும் பார்த்து இல்லை ஆனால் அவர் படம் பேசி பலர் பார்த்து உண்டு

லீலை ஆஸ்கர் ரவிச்சந்திரன் வழங்கும் புது பட பாடல் பற்றி உங்களுடன்
ஆண்ட்ரு லூயிஸ் இயக்கத்தில் இப்போதே ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ள படம் என்றால் மிகை இல்லை

இசையமைப்பாளருக்கு இது முதல் படம் என்றால் நம்ப முடிய வில்லை ஒரு நல்ல கலைஞனின் நேர்த்தி மற்றும் கலக்கலாக ஆனால் அமைதியான பாடல்கள்




ஜில்லென்று ஒரு கலவரம் // சதீஷ் சக்கரவர்த்தி

பப்ள் கம் //பென்னி தயாள் ,சுனிதா சாரதி ,சுவி

ஜில்லென்று ஒரு கலவரம் //சதீஷ் சகர்வர்த்தி

ஒரு கிளி ஒரு கிளி // சதீஷ் சக்கரவர்த்தி


உன்னை பார்த்த பின்பு //ஹரி சரண் மரியன்

பொன்மாலை பொழுது ///பென்னி தாயால்

ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதம் .
ஜில்லென்று ஒரு கலவரம் நிறைய பேர்களுடைய ரிங்க்டோன் ஆகா மாறும் பாடல் கேட்கும் பொது அமைதியான ஆனால் ஒரு சிறப்பான இசையுடன் ஒரு கார்பொரட் கம்பெனி போல் பாடல் நம்மை மெல்ல வசிகரிக்கும்
இரவு நேரத்தில் ஐ போட் இல் இதை கேட்க்கும் போது மனதை ஏதோ செய்வது உண்மை
பப்ள் கம் பாடல் மனதில் உடனே ஒட்ட மறுக்கிறது இருந்தாலும் குறை சொல்ல முடியாத பாடல்
ஒரு கிளி ஒரு கிளி மெலிதான மெல்லிசை மெலிதான தாள கட்டு பாடல் கேட்கும் போது நம்மை வசிகரிப்பது உண்மை ஸ்ரேயா கோஷல் குரல் சிறப்பாக உள்ளது வயலின் ஷெனாய் புல்லாங்குழல் கோஷலின் குரல் எல்லாம் ஒரு சிறந்த பாடலை கேட்ட உணர்வு தருவது உண்மை
பொன்மாலை பொழுது ஆரம்ப தாளாம் பென்னி தயாளின் குரல் சிறப்பாக உள்ளது
இளைஞர்களின் நாடி துடிப்பு பார்த்து அடிக்கப்பட்ட இசை என்றல் மிகை இல்லை
உன்னை பார்த் பின்பு ஹரி சரண் குரல் மயக்கும் குரலாக உள்ளது
மொத்தத்தில் லீலை உடனே இல்லை என்றாலும் மெல்ல மெல்ல நம்மை கேட்கும் போது மயக்கும் என்பது உண்பாய்
ஆஸ்கர் முந்தைய படம் உன்னாலே உன்னாலே போல் லீலை பாடல்களும் சிறப்பாக உள்ளது
முடிந்த அளவிற்கு ஒரிஜினல் கேசட்டை வாங்கவும் போலிகளை புறகணிப்போம்
MY MUSIC RATING 8.5/10
DONT MISS MY VOTE

Tuesday, November 3

வேட்டைக்காரன் சில எதிர்பார்ப்புகள்



விஜய் ஒரு பக்கம் சன் பிக்சர்ஸ் பேனர் ஒரு பக்கம் என்று வேட்டைக்காரன் படத்திற்கு ஒரு மாஸ் எதிர்பார்ப்பு உண்டாகி விட்டது இதையும் மீறி விஜய் ரசிகர்கள் இதை ஒரு வெற்றி படமாக அமைய வேண்டும் என்று ஒரு புறம் இருக்க
நல்ல படம் வந்தால் தியேட்டர் சென்று பார்க்க வேண்டும் என்ற சராசரி ரசிகனின் பார்வைல் சில எதிர்பார்ப்பு உள்ளது
நிச்சயமாக இந்த படத்தில் நான் வந்தால் அதிரும் குதிரும் என்ற ரசிகனை சூடேற்றும் பேச்சு இல்லாமல்,  போட்டி நடிகரை மட்டம் தட்டும் வசனங்கள் இல்லாமல்,   ரசிகனை முட்டாள் ஆக்கும் சண்டைகள் இல்லாமல் ஒரு நல்ல ஆக்சன் படம் தேவையே தவிர
செத்து போன அல்லது தமிழ் ரசிகர்கள் சமிபகாலமாக குப்பை தொட்டியல் போட்ட வெட்டி ஆக்சன் வேண்டம்.
 
அப்படி வந்த குருவி வில்லு தோரணை என்று பல படங்களை சொல்லலாம்

அதையும் மீறி அயன் வெற்றி என்பது உண்மையான கதைக்கு கிடைத்தது
கதையுடன் கூடிய ஆக்சன் படம் யாரை எந்த நடிகரையும் குறை கூறாமல் கதைக்காக நடித்த சூர்யாவின் நடிப்பு ஒரு காரணம்

சன் டிவி இன் நல்ல மார்க்கெட்டிங் தந்திரம் மணிக்கொரு விளம்பரம் இவை எல்லாம் ஒரு காரணம்

இப்போதைய ரசிகனின் மன நிலை நல்ல கதை இருந்தால் யார் நடித்தாலும் பார்போம் என்பதுதான் 

இந்த நேரத்தில் படத்தில் குருவி வில்லு போன்று அமையாமல் இருந்தால் மட்டுமே நிச்சய வெற்றி அடையலாம்

வேட்டைக்காரன் படம் நல்ல பாடல்கள் உள்ளன நல்ல நிறுவனத்தின் தயாரிப்பு சிறந்த நிறுவனத்தின் வெளியுடு எல்லா வித வெற்றி வாய்ப்புகள் உள்ளன இதையும் மீறி படம் தோல்வி அடைந்தால் . அது நிச்சயமாக விஜய் இன் தோல்வியாக இருக்குமே தவிர சன் டிவி உடைய தோல்வியாக இருக்காது
நிச்சயம் இது கில்லி போல் ஒரு வெற்றி படம் போல மாற நல்ல கதையுடன் கூடிய நடிப்பே தவிர உங்கள் குருவி வில்லு போல் இல்லாமல் இருக்கும் என்ற நம்பிக்கail 
வேட்டைக்காரன் வெற்றிகாரனாக மாற விட்டால்
குருவி செத்து போய்டுச்சு வில்லு உடைந்து போய்டுச்சு வேட்டைக்காரன் வந்து என்ன செய்ய போறான் என்ற எஸ் எம் எஸ் செய்தி உண்மையாகாமல் இருக்க நல்ல கதை மட்டுமே தேவை
அயன் போன்று நிச்சயம் வேட்டைக்காரன் வெற்றி பெற வாழ்த்துக்கள்

Sunday, November 1

சன் டி டி ஹெச் இன் HD சேவை


சன்னின் புது சேவை சன் டிடிஹெச்HD
சன் டிவிஇன் பல்வேறு பொழுது போக்கு சேவைகளை வழங்கி வருகிறது அதன் ஒரு படி முன்னே சன் டி டி ஹெச் சேவை முன்னேற்றமாக சன் டி டி ஹெச் HD
சேவை வழங்குகிறது

இந்திய டி டி ஹெச் நிறுவனங்களில் சன் டி டி ஹெச் முதல் முறையாக ஹெச் டி (HD) சேவையை சன் டிவி வழங்குகிறது


இந்த சேவையை பெற இதற்கென பிரத்யோக செட் அப் பாக்ஸ் வாங்க வேண்டும் இதன் இதன் பாக்ஸ் மற்றும் உபகரணங்கள் விலை ரூ 6250 மற்றும் ஆக்டிவேசன் சார்ச் ரூ ஹெச் டி காண்டன்ட் விலை ரூ 2750 மற்றும் JUMBO PACK விலை ரூ 3600 என செலுத்த வேண்டும்
இதன் சேவை பெற மொத்தமாக எல்லா செலவு சேர்த்து ரூ14,800 ஆகும்

டி டி ஹெச் ஒரு சேனல் மாத சந்தா ரூ100 மட்டும் டி டி ஹெச் ஹெச் டி சேவை சாதரண சேவையை விட 5.1 டி டி எஸ் சேவை மற்றும் ஐந்து பட மடங்கு துல்லியம் நிறைந்தது
மிகவும் தெளிவான அகல திரை மற்றும் நாம் பார்க்க நினைக்கும் சிறந்த படங்களை ஹெச் டி சேவை சிறப்பான தியேட்டர் தரத்தில் வழங்குகிறது
மற்றும் இந்த ஹெச் டி பாக்ஸ் தேவை இல்லை என்றல் திருப்பி தரும் வகைஇல் உள்ளது ஆனால் அதற்க்கு தனியே சில விதிகள் உள்ளன
நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு ஹோம் தியேட்டர் கொண்டு சேனல் பார்க்க விரும்பினால் சன் டி டி ஹெச் ஹெச் டி சேவை ஒரு சிறப்பான சேவையாக இருக்கும்
கொஞ்சம் பணம் செலவு செய்தால் உங்கள் வீட்டில் ஒரு துல்லிய திரை அரங்கை கொண்டு வரலாம்

இதன் சிறப்பு 5.1 சவுண்ட்
துல்லிய பட தரம்
சிறப்பான அகல திரை
கண்களுக்கு குளிர்ச்சியான தரம்



இதன் மேல் விவரங்கள் பெற இந்த இணைய தள முகவரி கிளிக்கவும் link சன் டி டி ஹெச்

மறக்காமல் எனக்கு உங்கள் வாக்கை இடவும்

உங்கள் கருத்துக்கள் ஏதும் இருந்தால் எனக்கு மெயில் பண்ணவும்
arumbavur@gmail.com