Saturday, July 30
யோஹன்- அத்தியாயம் ஒன்று A.R.ரஹ்மான் இசை அமைக்கிறாரா?
அப்படி இப்படி என்று ஒரு அளவிற்கு தான் முன்பு செய்த தவறுகளில் இருந்து நல்ல பாடம் கற்று உள்ளார் விஜய் அவர்கள்
இனி சுறா புறா ,வேட்டைக்காரன் மட்டைகாரன் போன்ற காவியம் வாய்ந்த படங்களில் நடிக்க மாட்டார் என்று தெரிய வருகிறது அவரின் வர போகும் புது படங்களில் பார்க்கும் பொது அதார் விடும் காட்சிகள் இருக்காது என்பதற்கு பெரும் எடுத்து காட்டு அவரின் விரைவில் வர போகும் நண்பன் படம் அதை தொடர்ந்து அஜித் நடிக்க மறுத்த (துப்பறியும் சந்துரு) யோஹன் என்ற பெயரில் விஜய் அவர்கள் நடிப்பு வாழ்க்கையில் மாறுபட்ட படமாக இருக்கும் என்று தெரிகிறது
"பஞ்ச டயலாக் இல்லை என்று அவரின் சில ரசிகர்கள் வருத்தப்படலாம் அவர்களுக்குதான் வேலாயுதம் படம் வருகிறது "
FIRST DAY
சரி இப்போ நம்ம விசயத்திற்கு வருவோம் முதல் நாள் வந்த விளம்பரத்தில் இசை யார் என்ற விவரம் இல்லாமல் வந்த போஸ்டர் இந்த படத்திற்கு யார் இசை என்று சந்தேகம் இருந்தது
ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிக்கும் நண்பன் படத்திற்கே இசை அமைக்க மாட்டேன் என்று சொன்ன ரஹ்மான் நிச்சயம் இந்த படத்திற்கு இசை அமைக்க மாட்டார் என்றுதான் நேற்று வரை நினைத்து இருந்தால் இன்றைய விளம்பர போஸ்டரில் அது மாற்றம் இசை ரஹ்மான் என்று வந்துள்ளது
SECOND DAY WITH A.R.RAHMAN NAME
ஆகா மொத்தத்தில் இந்த படத்திற்கு இசை ரஹ்மான் என்பது நிச்சயம் ஆகி விட்டது
விரைவில் வர இருக்கும் ரஹ்மான் இசை பிட்ஸ்
செப்டம்பர் மாதம் ரஹ்மான் இசையில் அவரின் உலக இசை ஆல்பம் "SUPERHEAVY " வர இருக்கு
அடுத்த மாதம் ரஹ்மான் இசையில் ஹிந்தி மொழி படம் "ராக் ஸ்டார் வருகிறது
இதற்க்கு நடுவில் ரஹ்மானின் அடுத்த ஆங்கில படம் "WELCOME TO PEOPLE " வர இருக்கு
இதற்கும் இடையில் ரஜினி அவர்களின் "ரானா"
சேகர் கபூர் இயக்கத்தில் "PAANI "
யாஷ் சோப்ரா உடன் ஒரு ஹிந்தி மொழி படம் "
ஹாலிவுட் நிறுவனம் ட்ரீம் வொர்க்ஸ் தயாரிக்கும் " MONKEYS OF BOLLYWOOD "
கௌதம் மேனன் இயக்கத்தில் ஹிந்தி மொழி விண்ணை தாண்டி வருவாயா
இவர் கையில் இத்தனை படங்கள் இருக்கும் போது யோஹன் படத்திற்கு இசை அமைப்பார் என்ற இன்றைய விளம்பரம் தான் மலைப்பா இருக்கு
Wednesday, July 27
எப்படி தயாரிக்கிறார்கள் " HIGHLIGHTERS " FM (19)
எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் இன்றைய பதிவில் நாம் பார்க்க போவது அலுவலகங்களில் மற்றும் நாம் கல்லூரிகளில் அதிகம் ப்ராஜாக்ட் விசயங்களில் நாம் அதிகம் உதவும் ஹை லைட்டர் எனப்படும் கலர் பென்சில் பற்றி நாம் பார்க்கலாம்
நாம் சொல்ல போகும் மிகவும் முக்கியமான விஷயங்கள் பற்றி தனியாக சொல்ல அந்த விஷயத்தை மட்டும் தனியாக கோடிட்டு காட்ட பயன்படும் ஹை லைட்டர்
எவ்வாறு தொழிற்சாலைகளில் தயாரிக்கிறார்கள் என்று பார்க்கலாம் ,
நாம் சொல்லும் விசயங்களை கலர் கலராக அடிகோடிட்டு காட்ட மிகவும் உதவுவது இந்த ஹை லைட்டர் தான்
Monday, July 25
எப்படி தயாரிக்கிறார்கள் " PAPER CUPS" FM(18)
எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் இன்று நாம் பார்க்க போவது பேப்பர் கப் இந்த நாகரிக உலகில் கண்ணாடி கிளாசில் தேனீர் ,குளிர்பானம் குடிப்பதை இன்றைய மக்கள் விரும்புவதில்லை எல்லாவற்றிக்கும் பேப்பர் கப் பயன்படுத்தும் இந்த காலத்தில்
பேப்பர் கப் மறு சுழற்சி மூலம் மீண்டும் பயன்படுத்தலாம் என்பது நல்ல விசயமோ அதை போல இந்த பேப்பர் கப் தயாரிக்க மரங்கள் வேட்டபடுவது ஒரு தீமையான விஷயம் கூட
முடிந்த அளவிற்கு வீடுகளில் பேப்பர் கப் பயன்படுத்தாமல் கண்ணாடி பீங்கான் பொருள்களில் தயாரித்த கிளாஸ்களில் நாம் தேனீர் மற்றும் குளிர்பானம் குடிப்பதால் இயற்க்கை காப்பதற்கு நாம் உதவி புரியலாம்
சரி சரி இப்போ இந்த பேப்பர் கப் எப்படி தயாரிக்கிறார்கள் என்று பாப்போம்
சோசியல் நெட்வொர்க்கில் பேஸ்புக் வெற்றிபெறுமா கூகிள் பிளஸ் வெற்றி பெறுமா என்று நாம் பட்டிமன்றம் வைக்கும் இந்த நேரத்தில் இவர்கள் நம்மை வைத்து இன்னும் சில மில்லியன் டாலர்களை லாபம் பார்த்து இருப்பார்கள்
நூறு கோடி பேரு இருக்கும் நம் நாட்டில் இதுவரை சொல்லும்படியான சர்ச் இஞ்சின் ,சோசியல் நெட்வொர்க் உருவாக்கி உலக அளவில் ஹிட் கொடுக்க திறமைசாலிகள் இல்லையா? (சபீர் பாட்டியா தவிர )
Subscribe to:
Posts (Atom)




