Sunday, October 31

AR ரஹ்மானின் செய்தி துளிகள்(FACEBOOK,127 HOURS,ASIAN AWARDS)



இந்த பதிவுல ரஹ்மான் பற்றி சில செய்தி துளிகள்

இரண்டு மில்லியன் தொடர்பவர்கள் :

  ரஹ்மானின் சாதனைகள் பல இருந்த போதிலும் அவரின் பேஸ்புக் சாதனை இன்னும் சிறப்பு இந்தியாவில் அதிகம் தொடர்பவர்கள் இருக்கும் பேஸ்புக் ரஹ்மான் அவர்களுடைய பேஸ்புக் மட்டுமே
ரஹ்மான் ஆர்வத்துடன் தன்னுடைய ஒவ்வொரு புது செய்தியையும் அவர் தன்னுடைய் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வது கூட இந்த அளவிற்கு அவருக்கு பேஸ்புக் தொடர்பவர்கள் வர காரணமாக இருக்கலாம்

சின்ன  விசயம் பெரிய விஷயம் என்று இல்லாமல் அவர் பேஸ்புக்  மூலம் கருத்துக்களை பரிமாறுவது  அவர் ரசிகர்கள் மிகவும் விரும்புகிறார்கள்
புது படம் பற்றி அவருடன் வேலை செய்பவர்கள் பற்றி பரிமாறுவது என பேஸ்புக் சரியாகா அவர் பயன்படுத்துகிறார்

இந்த பதிவு எழுதும் பொது வரை அவரின் தொடர்பவர்கள் எண்ணிக்கை :  2,077,347
ரஹ்மானின் அடுத்த ஹாலிவுட் ஹிட்  127 hours 

    ஷ்லம்டாக் வெற்றிக்கு பின் அதே கூட்டணியில் ரஹ்மானின் வேறுபட்ட இசையில் நவம்பர் 5 இந்த ஹாலிவுட் படம் வருகிறது
இந்த் படத்தின் இசை நாளை வெளி வருகிறது இந்திய இசை சாயல் இல்லாமல் இதில் பின்னணி இசை சிறப்பாக இருக்கம் என எதிபார்க்கலாம்
டானி பாயல் ரஹ்மானின் இசையை சரியாக பயன்படுத்துவார் இதில் எப்படி என பார்க்கலாம்


ரஹ்மானின் asian awards 2010 

                                    Lebara Asian People’s Choice Award. லண்டன் நகரில் வழங்கப்பட  இந்த விருதை ரஹ்மான் டெண்டுல்கர் அமிதாப் மல்லையா ,சுனில் மிட்டல் ,ரத்தன் டாட்டா  போன்ற பிரபலங்கள் பெற்று கொண்டனர்
ரஹ்மானுக்கு இந்திய இசையை உலக அளவில் கொண்டு செர்த்திற்கு இந்த விருது வழங்கப்பட்டது   


  ரஹ்மானின் கையில் இப்போ இரண்டு படங்கள் மட்டுமே உள்ளன அவைகள் சுல்தான் தி வாரியார் மற்றும் ராக் ஸ்டார்


 மற்ற அதிகாரபூர்வ படங்கள் விரைவில் வரும்


Saturday, October 30

டியோட்ரன்ட் விளம்பரம் பெண்களும்

      
ஒரு விளம்பரம் என்பது ஒரு பொருளை விற்க எந்த அளவிற்கு முக்கியம் என்பது அனைவரும் அறிந்தது
ஒரு தீப்பெட்டி முதல் சேலை வரை எந்த பொருளும் விளம்பரம் இல்லாமல் விற்பது என்பது இப்போது குதிரை கொம்பு
அந்த விளம்பரம் படைக்கப்படும் விதத்தில் அனைவரையும் கவரும் ஆனால் நான் பார்த்த வரை அதிகமான  டியோட்ரன்ட் விளம்பரம்  சொல்லி வைத்த மாதிரி ஒரே மாதிரி பாருமுலவை பின்பற்றி வருவது ஏனோ எனக்கு தெரியவில்லை

                           பெண்களை அழாகாக காட்டி விளம்பரம் செய்யும் சோப்பு விளம்பரம் ஆகட்டும் குழந்தை பயன்படுத்தும் பொருள்களுக்கான விளம்பரம் ஆகட்டும் பெண்களை அழாகா காட்டும் முறை தான் உள்ளது
இதற்க்கு எத்தனையோ உதாரணம் சொல்லலாம் ஆனால் இதற்க்கு விதி விளக்கா உள்ளது டியோட்ரன்ட் விளம்பரங்கள்

எவனோ ஒருவன் குளித்தோ குளிக்காமலோ டியோட்ரன்ட் அடிக்க எங்கே இருக்கும் ஒரு பெண் அந்த வாசனைக்கு அடிமையாகி அவனை தேடி வருவது போன்ற கருத்துகளை கொண்ட விளம்பரம் இங்கு மட்டும் இல்லை வெளிநாட்டு டியோட்ரன்ட் விளம்பரம் கூட இதே பார்முலாவை பயன்படுத்துகிறது

   ஏன் இது போன்ற விளம்பரத்தை  மேல் நாட்டில் எதிர்க்க வில்லை 

     சின்ன சின்ன விசயத்திற்கு கூட எதிர்ப்பு செய்யும் நம் ஆட்கள் பெண்களை கேவலபடுத்தும் இது போன்ற விளம்பரம் பற்றி என்ன நினைக்கிறார்கள்

   டியோட்ரன்ட் என்பதே உடலில் வரும் துர்நாற்றத்தை வேர்வை நாற்றத்தை போக்க  என்ற கருத்தை கொண்டு இல்லாமல் டியோட்ரன்ட் அடித்தால் பெண்கள் மயங்குவார்கள் என்ற பாணியில்  செல்லும் சில விளம்பரங்களை என்னவென்று சொல்வது அழகிய சில விளம்பரங்கள் இருக்கும் அதே நேரத்தில் இது போன்ற சில விளம்பரங்கள் இருப்பதால் இந்த கேள்வி ?


          சில டியோட்ரன்ட் விளம்பரம் அந்த பொருள் பற்றி சொல்லமால் அந்த டியோட்ரன்ட் பயன்படுத்தினால் பெண்கள் மயங்குவார்கள்  என்று சொல்வதை என்னவென்று சொல்வது


               







ஒரு அழகிய முறையில் spinz விளம்பரம்





                *******     VOTE THIS ARTICLE   ******

        மறக்காமல் உங்கள் வாக்கை அளிக்கவும்



                                                  விரைவில்

                                 ஹாய் அரும்பாவூர் விருதுகள் 2010

Friday, October 29

IT இளைஞரின் "காதல் பீவர்" பாடல் விமர்சனம்


   சாய் சுதர்சன் இந்த ஐ டி  இளைஞரின் இசை ஆர்வத்தின்  முயற்சின் முதல் வெளியிடு  காதல் பீவர் இவரின் முதல் முயற்சியில் இவரே பாடல் எழுதி அதற்க்கு மெட்டமைத்து  பாடலையும் பாடி உள்ளார்

பாராட்ட மற்றும் கேட்கக்கூடிய  முயற்சி

இது இவரின் முதல் இசை முயற்சி என்பதால் கீ போர்ட் துணையுடன் இரண்டே இசை இணைப்புகள் வைத்து பாடல் வரிகளை அழகாக ஏற்ற இறக்கத்துடன் பாடி உள்ளார்
 
 அதிலும் பாடல் வரிகள் பாராட்ட வேண்டிய ஒரு முயற்சி காதலன் நகர பின்னணியில் பாடும் பாடல் போன்ற வரிகள் தெர்மா மீட்டர் ,ட்ரிக்னோ மெட்ரிக்   வளைவுகள் என பாடல் வரிகள் கேட்க்கும் விதமாக உள்ளன





இவர் சொல்லி உள்ளது போல் இது இப்போது ஆரம்பம் மட்டுமே வரும் காலங்களில் இன்னும் பல இசை கோர்ப்புகள் சேர்க்கும் போது பாடல் இன்னும் கேட்க்க சிறப்பாக இருக்கும்
அவர் எழுதிய வரிகள் சில கீழே





"ஏதோ  மாற்றம்  என்னை  வந்து  தாக்குதே !

என்னை  உந்தன்  கால்  அடியில்  கொண்டு  புதைக்குதே !
நீ  சிரித்தால்  என்  மேல்  மவுண்ட்  எவரெஸ்ட்  வந்து  உருகுதே !
கண்  அடித்தால்  எந்தன்  இதயம்  வெடித்து  சிதறுதே !
உன்  சென்டிமீட்டர்   பார்வையால்  அந்த  தெர்மோமீட்டர்  தெரிகுதே 
உன்  ட்ரிக்னோ மெட்ரிக்   வளைவுகள்  என்  தூக்கத்தை  திருடும்  பாவிகள் !
இதற்கு  பேர் தான் காதல்  பீவரா   ?
உன்  கண்கள்  ரெண்டும்  என்னை  சூறையாடி  சென்றதா !"

நிச்சயம் இவரின் இந்த முதல் முயற்சியில் குறை சொல்ல ஒன்றும் இல்லை இன்னும் சில இசை சந்தங்களை சேர்த்து இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும்

ஒரு சில இடங்களில் கீபோர்ட் இசை ஒரே மாதிரி வருவது ஏதோ மாதிரி உள்ளது

ஆனால் இவர் இது சோதனை  முயற்சி என்று சொல்லி இருப்பதால்

பாஸ் மார்க் வாங்கிவிட்டார்

பாடல் வரிகள் பாடல் கேட்க கீழே



stand alone player



Quantcast


இவரும் ஷங்கர் மகாதேவன் போல சிறந்த இசை அமைப்பாளர்  பாடகராக வருவார் என எதிர்பார்க்கலாம்


இருவரும் கணினி  துறையில் இருந்து  இசை மீது ஆர்வம் கொண்டுள்ளவர்கள்


"இந்த பதிவிற்கு மறக்காமல் வாக்களித்து இந்த பாடல் பற்றி பலருக்கு தெரிய செய்யுங்கள் "


மறக்காமல் சாய் சுதர்சன் அவர்களின் இந்த முயற்சி பற்றி பின்னுட்டம் இடவும்

          இந்த பதிவை பதிவை படித்ததிற்கு  நன்றி 


 சாய் சுதர்சன் வருங்கால  இசை உலகில் சாதனை செய்ய வாழ்த்துவோம்
 


                        *********   vote the article **********