Wednesday, May 11

எப்படி தயாரிக்கிறார்கள் மங்காத்தா கார்ட் (Playing Cards) FM(12)



எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் இன்று நீங்கள் பார்க்க போவது ரம்மி மங்காத்தா என்று செல்லமாக அழைக்கப்படும் .திருமண வீடுகளில் பொழுதுபோக்க அதிகம் பயன்படுவது
என பல முகங்கள் இருக்கும் Playing Cards எப்படி தயாரிக்கிறார்கள் என்று பார்க்க போறோம் 
 

இந்த மங்காத்த வீடியோக்கும் அஜித் மங்காத்தாக்கும் சம்பந்தம் இல்லை 
  






ஒரு கொசுறு தத்துவம் :

தோற்று போவோமோ என நினைத்து ஜெயிப்பவனை விட
ஜெயிப்போம் என நினைத்தும் தோற்று போகிறவன் உயர்ந்தவன் 
 
இப்போ அந்த வீடியோ



DON'T MISS VOTE

Tuesday, May 10

எதிர்பார்ப்பு உள்ள படங்கள் இரண்டு (அ.குதிரை ,எத்தன் ) ONE WORLD MOVIE


இந்த மாதம் வந்த படங்களில் பாக்ஸ் ஆபிசில் கலக்கும் படம் கோ இதில் யாருக்கும் எந்த மாற்றம் இல்லை

உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வெளியிட்டில் வந்த படம் இது
 அழகர்சாமியின் குதிரை


எதிர்பார்ப்புடன் படங்களுக்கு முன்னிலையில் எதிர்பார்ப்பே இல்லாமல் வந்து சூப்பர் ஹிட் ஆனா படங்கள் அதிகம்
அந்த வகையில் சுசீந்திரன் இயக்கத்தில் இசைஞானி அவர்களின் இசையியல் ஒரு பாஸ்கர் சக்தி எழுதிய கதையை மையமாக வைத்து அப்பு குட்டி ஹீரோவாக நடிக்கும் இந்த படம் ஒரு பெரும் எதிர்பார்ப்ப உண்டாகி உள்ளது என்பது நிச்சயம்

இந்த படத்தை தயாநிதி அழகிரி க்ளவுட் நைண் மூலம் வருவது படத்திற்கு இன்னும் அதிக அளவில் விளம்பரம் கிடைக்கும் என்பதில் மாற்றம் இல்லை




எத்தனையோ நல்ல படங்கள் சரியான முறையில் விளம்பரம் செய்யாமல் எதிர்பார்த்த வெற்றி பெறாமல் போனது அனைவருக்கும் தெரியும்
அந்த வகையில் இந்த அழகர் சாமியின் குதிரை நிச்சயம் இந்த போட்டியில் வெற்றி பெற எல்லா சாத்திய கூறுகளும் உள்ளது
இந்த படம் உலக அளவில் நடக்க இருக்கும் திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ள இருப்பது மற்றும் ஒரு சிறப்பு

ஆகா மொத்தத்தில் மே12 முதல் வரும் அழகர் சாமியின் குதிரை இந்த போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்


எத்தன்


அடுத்த எதிர்பார்ப்பு உள்ள படம் ஷேராளி பிலிம்ஸ் இதற்க்கு முன்பு தயாரித்த களவாணி படம் சக்கை போடு போட்டது அனைவரும் அறிந்த உண்மை
(இத்தனைக்கும் இந்த படத்திற்கு சரியான அளவில் விளம்பரம் கிடைக்க விடாமல் செய்த்தது ஒரு நிறுவனம்)
நல்ல படங்களை நம் ரசிகர்கள் நிச்சயம் ஜெயிக்க வைப்பார்கள் என்பதை நிருபித்த படம் இது

இப்போது அதே நிறுவனம் மூலம் வரும் படம் எத்தன் சுரேஷ் இயக்கத்தில் வரும் இந்த படம் இது களவாணி படம் போல பெரும் வெற்றி பெரும் என எதிர்பார்க்கலாம்

விமல் சனுஜா நடிப்பில் வரும் இப்படம் எப்படி என்பது இன்னும் கொஞ்ச நாளில் தெரிய போவுது
( மீண்டும் இந்த படத்திற்கு இருக்கும் பிரச்சினை சரியான அளவில் விளம்பரம் கிடைக்குமா )


இப்போ நீங்கள் பார்க்க போகும் படத்திற்கு போட்டியாக இந்திய அளவில் போட்டியிட படம் இல்லாததால்

ஹாலிவுட் ஹிட் ஜுராசிக் பார்க் படதிற்கும் அவதார் படத்திற்கும் போட்டியாக வர இருக்கும் ஒரே படம் இதுதான்




Sunday, May 8

பலராமனின் தமிழ் தோட்டம் "எறுழ்வலி "(இணைய தள விமர்சனம் )




சும்மா வந்தோம் ஏதோ எழுதினோம் வலைபதிவு திரட்டிகளில் ஏற்றினோம் என்று இருக்கும் என பதிவை பற்றி நானே சில நேரங்களில் நினைக்கும் போது.
என் மற்றும் ஒரு முகபுத்தக(FACEBOOK) நண்பர் பொறியாளர் . இன்று படிப்பை முடித்து சிறந்த வேலையில் இருக்கும் இவர் சராசரி இளைஞர்கள் போல இல்லாமல் தன்னுடைய தமிழ் மீது உள்ள பற்று காரணமாக தமிழ் பதிவுகள் மூலம் தன்னுடைய தமிழ் ஆர்வத்தை தனித்து கொள்கிறார்

தன்னை பற்றி இவர் அழகாக தன் எறுழ்வலி இணையத்தில் கூறி இருப்பது பாருங்கள்

எனது சொந்த ஊர் பாரதி பிறந்த எட்டயபுரம். நான் பிறந்தது தூத்துக்குடியில். வளர்ந்தது மதுரையில் இருக்கும் சோழவந்தானில். பள்ளிப்பருவம் சோழவந்தானில். கல்லூரி காலம் மதுரையில். தற்போதைக்கு அலுவலக அலுவல்கள் பெங்களூரில். இந்த வலைப்பதிவு மூலம் சமுதாயத்திற்கு/குடியினருக்கு என்னால் முடிந்த கருத்துக்களை கூற விரும்புகிறேன்.
என்ன அழகான வரிகள் 
 



இந்த வலைதளத்தில் கவிதை சிறுகதைகள் அழகிய தமிழ் கட்டுரைகள் என ஒரு சிறப்பான படைப்புகள் வழங்கி உள்ளார் தமிழ் ஆர்வம் உள்ளவர்கள் யாரும் விரும்பும் பக்கம் இது 


 
பலராமன் பேஸ்புக்கில் தமிழ் வளர்ச்சிகாக தனி பக்கம் ஒன்று கூட தொடங்கி உள்ளார் 
விக்கிபேடியா உடன் இனைந்து தமிழ் வளர்ச்சிக்கான தமிழ் பக்கத்திற்கு தன்னால் முடிந்த உதவிகள் செய்கிறார்
இவரின் மற்றும் ஒரு சிறப்பான செயல் 


  'கலைப்பொறியாளர்கள்'-இலும் கதையாசிரியராக இருந்து குறும்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார் 

 



ஆகா மொத்தத்தில் ஒரு கலைபொறியாளரின் இந்த தமிழ் வளர்ச்சிக்கு செய்யும் செயலை பாராட்ட வார்த்தைகள் இல்லை
இவரின் வலைத்தளத்தில் இருந்து இவரின் ஒரு அழகிய கவிதை இது
முன்குறிப்பு:
கீழே உள்ள கவிதையில் ஒவ்வொரு வரியும் சிதைவுற்றது போல் தோன்றக்கூடும். என் புதிய முயற்சிக்காக அதை சகித்துக் கொள்ளவும்!
***இலவசமாக பெற்றேன் இன்பம் தரும் காட்சிகள் திரையில்…
***பெறவில்லை ஒளி தரும் மின்சாரம் ஆனால்…
***உயிர்போகும் தனித்தீவில் தேடோடி ‘வலையில்-விழா-மீன்களால்’…
***வீணாகப்போகும் நிறைவேறாமல் உண்ணாநிலைகள் நாடகமாய்…
***உன்னிடத்தில் ‘மூன்றாம்-தலைமுறை-அலைக்கற்றை’ பெறவிரும்பினேன்…
***கற்பனைச்சிறையில் மாட்டியது கனிமொழி போராட்டங்களால்…
***ஏமாற்றம் தந்துவிடுமோ ‘கூட்டணி-தாவல்கள்’ அஞ்சுகிறேன் நான்…
***விரல் மையிட்ட நாளில் முடிவான வாக்கு…
***உறக்கம் கெட்டது அன்றிலிருந்து உராய்வால்…
இப்பொழுது நீங்கள் ஒரு அரசியல் கவிதை படித்திருக்கக்கூடும். அதே கவிதையை மீண்டும் ஒருமுறை படிக்கவும். ஆனால், ஒவ்வொரு வரியையும் ‘திருப்பி’ப் படிக்கவும். அதாவது வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கம்(‘…’-யில் தொடங்கி ‘***’ வரை)!
ஒரு காதல் கவிதை படிக்கலாம்…..!



என்ன ஒரு சிறப்பான கவிதை இது






"தமிழ் மொழி பேசுவதே கேவலம் என நினைக்கும் இந்த காலத்தில் நுனி நாக்கு ஆங்கிலம் பேசினால் தான் நம்மை மதிப்பார்கள் என்று தமிழர்களிடமே ஆங்கிலத்தில் பேசும் சில தமிலாங்கிலவதிகளுக்கு முன் தமிழ் தன் பணிகளுக்கு இடையே
தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடும்
பாலராமனுக்கு
ஒரு தமிழ் ஓ!

 
தமிழ் வளர்ச்சிக்கு இவரின் பேஸ்புக்(Tamil (Language))


 
இந்த பதிவிற்கு உங்கள் தொடர் ஆதரவு வேண்டும் 

DON'T MISS VOTE