Tuesday, October 12

FACEBOOK LINK பட்டனை நீக்குவது எப்படி?

பேஸ்புக் சில சின்ன  விஷயங்கள்
  இப்போ பேஸ்புக் இந்தியாவில் இளைஞர்களின் தேசிய கீதம் என்றால் அது மிகை இல்லை  அப்படி பட்ட பேஸ்புக்கில்
நேரம் போவது தெரியாமல் உட்காருவது இப்போ வேலை ஆகி விட்டது


இப்போ ப்ளாக் எழுத கூட நேரம் இல்லை அப்படி பட்ட டைம் பாஸ் இந்த பேஸ்புக்
நிறைய நண்பர்கள் முகம் அறியா நட்புகள்
ஒரு முறை என்னுடைய பேஸ்புக் அக்கௌண்டில் மற்றும் ஒரு நண்பர் எனக்கு பிடிக்காத ஒரு படத்தை ஏற்றி விட்டார் அதற்க்கு காரணம் என் பேஸ்புக்கில் உள்ள அக்கௌண்டில் லிங்க் என்ற ஆப்சன் எல்லோருக்கும் தெரியுமாறு என் அக்கௌன்ட் செட்டிங்கில் இருந்தது காரணம்
இப்படி பட்ட லிங்க் ஆப்சன் எல்லோருக்கும் தெரியுமாறு வைத்தால் நமக்கு தெரியாமல் நம் அக்கௌண்டில் மற்ற நண்பர்கள் எதவும் புகைப்படமோ அல்லது இணையதள லிங்கோ கொடுக்க வாய்ப்பு உள்ளது இது வேண்டாம் என்றால் சுலபமாக அதை நீக்கி விடலாம்

 

நம் பேஸ்புக்கில் மற்றவர்கள் நம்ம profile வந்து தேவையற்ற link கொடுப்பதை தடுக்க முதலில் account >privacy settings >
Friends can post on my Wall Enable (/) remove the tick
என்று இருக்கும் பகுதியில்  இருக்கும் டிக் நீக்கவும் இப்போது நம்ம பகுதியில் எல்லா விசயமும் தெரியும் link பகுதி தவிர
இது மிகவும் முக்கியமான விஷயம் கூட
மற்றவர்கள் நம்ம அக்கௌன்ட் வந்து தேவையற்ற விஷயம் ஏற்றாமல்  இருக்க வசதி தேவை



பேஸ்புக்கில் நண்பர்கள் மறக்காமல் இந்த் ஆப்சனை நீக்கவும்
நம் பகுதியில் நான் ஏற்றும் கருத்துக்களுக்கு நாமே பொறுப்பு  நம் பேஸ்புக் கணக்கை சிறப்பாக பார்த்துகொள்வோம்

Sunday, October 10

உதவும் கரங்கள் நாமவோம்!!

மீண்டும் மீண்டும் மொக்கை பதிவு முபாரக் 
எந்திரன் படம் பற்றி பேச இனி ஒன்றும் இல்லை
ஒரு வரியில் சொல்ல வேணும் என்றால் படம் பற்றி குறை சொன்னால் தமிழ் திரை உலகில் இதுவரை வந்த எல்லா படத்தையும் பற்றி குறை சொல்ல வேண்டும்
"திரை அரங்கில் மட்டுமே பார்க்க உகந்த படம் எந்திரன்

   இதுவரை பதிவு எதுவும் எழுத வில்லை இதனால் நீங்க ரொம்ப சந்தோசமா இருந்து இருப்பிங்க மீண்டும் மொக்கை பதிவுடன் உங்கள் அரும்பாவூர்




          "சந்தோசத்தில் பெரிய சந்தோஷம் அடுத்தவரை சந்தோசபடுத்தி  பார்ப்பது  நம்மால் முடிந்த அளவிற்கு தினமும் இல்லை, வாரத்திற்கு ஒரு முறை இல்லை மாதத்திற்கு ஒரு முறையாவது ஒரு ரூபாயாவது அடுத்தவருக்கு கொடுத்து சந்தோசபடுத்த முயற்சி செய்யுங்கள் "
   உலகத்தில் நூறு ருபாய் கொடுத்து செலவு செய்து படம் பார்ப்பதில் இருக்கும் சந்தோசத்தை விட அடுத்தவை சந்தோசபடுத்த முயற்சி செய்வோம் " தம்பி பிச்சை போடுங்க என்று சொல்பவருக்கு பிச்சை போட்டு உழைக்காமல் வாழும் இனத்தை ஆதரிக்க  சொல்ல வில்லை "
கடும் வெயில் அதில் செருப்பு தைத்து பிழைத்த வாழ நினைக்கும் அந்த மனிதர் அருகில் ஒரு நிமிடம் நின்று பாருங்கள்
சரியான நல்ல சூல்நிழை மாட்டாத காரணத்தால் செருப்பு தைக்கும் அவருக்கு நாம் கொடுக்கும் இரண்டு ருபாய் கூட பெரிய தொகை இல்லை அதில் நமக்கு கிடைக்கும் சந்தோசமே தனி "


     "ஏசி போட்ட கடையில் சென்று பேரம் பேசாமல் அதிக விலை கொடுத்து  பொருள் வாங்கும்  நாம் தெருவோர  கடை வியாபாரி இடம் பேரம் பேசுவது நம் வாடிக்கை "
அது மனித இயல்பு கூட ஆனால் அதே நேரத்தில் நாம் உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தால் இது போன்ற வியாபாரிகளில் நேர்மையாக வியாபாரம் செய்யும் ஒரு நபருக்கு அவர் எதிர்பார்த்த பணத்தை விட அவர் மனம் சந்தோஷம் அடையும் வகையில் உதவி செய்யலாம்

உதவி செய்வது என்பதில் கடவுளுக்கு செய்யும் நேர்த்தி கடனை விட  கண்ணுக்கு எதிரில்  இருக்கும் உழைக்கும் மனிதருக்குக் அவர் எதிர்பார்த்த ஊதியத்தை விட  அதிகம்   கொடுத்து வச்சிக்க சும்மா டீ குடிக்க சாப்பிட வச்சிக்க என்று  சொல்லும் போது அவரின்  அந்த உழைப்பாளியின் முகத்தில் தெரியும் சந்தோஷம் உண்மையில் விலை மதிப்பற்றது "

                 தினமும் செய்யும் தீர்மானத்தில் இப்படி ஒரு தீர்மானம் செய்ய தீர்மானம் எடுப்போம் "






 

Friday, October 1

ஹிந்தி ரோபோட் ஹிட் ஆகுமா? - ஒரு பார்வை




             தமிழில் சூப்பர் டூப்பர் ஹிட் படம் எந்திரன் படம் பற்றி இனி விமர்சனம் எழுத ஒன்றும் இல்லை தமிழ் பதிவு  உலகில் அதிகம் எழுதப்பட்ட அதிகம் ஹிட் அடித்த விஷயம் எந்திரன் தவிர வேறு ஒன்றும் இல்லை
அதிலும் சன் டிவி இந்த படத்திற்கு செய்த சிறப்பான ப்ரோமாசன் நிச்சயம் பாராட்ட வேண்டிய  விஷயம்
ஒரு நாள் ரஜினி ,ஒரு நாள் ஷங்கர் ,ரஹ்மான் என அழாக பேச வைத்து சிறப்பான ஆரம்பம் கொடுத்தது
சரி தமிழ் எந்திரன் படம் பற்றி நான் பேச இனி ஒன்றும் இல்லை என்பதால் ஹிந்தி டப்பிங் படமான ஹிந்தி ரோபோ பற்றி
நான் இணையத்தில் பார்த்தது மற்றும் ETC  இசை சேனலில் ஹிந்தி வியாபாரம் பற்றி கோமல் நாத் வழங்கிய நிகழ்ச்சியில் இருந்து  இருந்து சில பகுதிகள்                      ஹிந்தி மொழியில் அக்டோபர் முதல் தேதி அன்று வந்த படங்கள் நான்கு அவைகள்
அஞ்சானா அஞ்சாணி (ரன்பீர் கபூர் ரவீனா ) ரோபோட் (ரஜினி ஐஸ்வர்யா )கிச்சடி (ஹிந்தி சீரியல் படம் )பென்னி அண்ட் பப்லு

                     இந்த நான்கு படங்கள்  மட்டுமே  இந்த வாரம் வந்தது .அதில் அஞ்சான அன்ஜானி படத்திற்கு ஆரம்பம் முதல் அதிக அளவில் இருந்த விளம்பரம் அதிலும் ரன்பீர் ரவீனா ஜோடி இந்த படத்திற்கு செய்த விளம்பரம் கொஞ்ச நஞ்சம் இல்லை எந்த நிகழ்ச்சிக்கு போனாலும் இவர்களின் குறிக்கோள் இந்த படத்திற்கு விளம்பரம் செய்வதில் இருக்கும் அதிலும் 20/20௦  கிரிக்கெட் விளையாட்டை கூட விடவில்லை இந்த ஜோடி
     ஹிந்தி மொழியல் வரும் படம் மற்றும் EROS  பிலிம் போன்ற காரணங்களால்  இந்த படத்திற்கு ரோபோட் (எந்திரன்) படத்தை விட அதிக அளவில் விளம்பரம் கிடைத்து

  ஆனால் பிரபல பத்திரிக்கை மாற்றும் செய்திதொலைக்கட்சிகளில்  ரோபோட் (எந்திரன் )படத்தை  குறைவான அளவில் ரேட்டிங்   பெற்றுள்ளது அஞ்சானா அன்ஜானி  . ஹிந்தி ரோபோட் திரை விமர்சனம் இந்த படத்தை மிகவும் உயர்வாக எழுதி உள்ளனர் .அதிலும் இந்த படத்தின் ஒலி/ ஒளிப்பதிவு அசந்து போய் உள்ளனர்
கோமல் நாத் சொன்னது போல  இது தமிழ் படம் என்று சொன்னால் நம்ப முடியவில்லை இது முழு ஹிந்தி படம் என்று சொல்லி உள்ளார் இப்படத்தை பற்றி வரும் விமர்சனங்கள்  ரசிகர்களின் கருத்துக்கள் வரும் நாட்களில் அஞ்சானா அன்ஜானி படத்தி முந்தி விடும் என்று சொல்லி இருப்பது இப்படம் ஹிந்தி மொழியிலும் ஒரு பெரும் வெற்றி பெரும் என்பது நிச்சயம்
அதாவது படம் வந்த இன்று அஞ்சானா அன்ஜானி படத்திற்கு திரை அரங்கம் முழுவதும் ஹவுஸ் புல் 
எந்திரன்  படம்  60 %  திரை அரங்கம் நிரம்பி இருந்ததது .
ஆனால் அது இன்றைய நிலை மட்டுமே ஹிந்தி தொலைக்கட்சிகள் மற்றும் செய்தி தாள்களில் வரும் விமர்சனம் சிறப்பான நிலையான வெற்றி படமாக மாறும் என்பது மட்டும் உண்மை 
 இந்த நிகழ்ச்சியில் முக்கியமாக மூன்று மல்டி ப்ளெக்ஸ் திரை அரங்கை சேர்ந்தவர்கள் போன் மூலம் சொன்ன கருத்து ஹிந்தி எந்திரன் வரும் நாட்களில் சூப்பர் ஹிட் ஆகும் என்பது மட்டும் நிச்சயம்
ஸ்பைஸ் மல்டி ப்ளெக்ஸ் (அமித் அவஸ்தி )
புனே
முதல் நாள் அஞ்சானா அன்ஜானி ஹவுஸ் புல் ஹிந்தி ரோபோ 60௦% மட்டுமே
ஆனால் அதே பேட்டியில் அவர் சொன்ன மற்றும் ஒரு கருத்து ரோபோட் படம் பற்றி இப்போது வந்து கொண்டு இருக்கும் சிறப்பான விமர்சனம் வரும் நாட்களில் படம் சூப்பர் ஹிட் ஆகும்
அதிலும் முக்கிய கருத்து ஸ்பைஸ் மல்டி ப்ளெக்ஸ் திரை அரங்கில் தமிழ் எந்திரன் அட்வான்ஸ் புக்கிங்கில் சாதனை செய்து உள்ளது

பிரசாத் மல்டி ப்ளெக்ஸ் (t  ஸ்ரீ காந்த் )
ஹைதராபாத்
இந்த திரை அரங்கில் இதுவரை 18 ,000  டிக்கெட் விற்பனை ஆகி உள்ளது தெலுங்கு ரோபோ 17 ,தமிழ் எந்திரன் 3 , ஹிந்தி 1

SRS  சினிமா  (டிங்கு சிங் )
பரிதாபத்
இங்கும் அஞ்சானா அன்ஜானி ஹவுஸ் புல்  ஹிந்தி ரோபோட்  55% முதல் 60% வரை மட்டுமே  டிங்கு சிங் சொன்னது போல இது இன்றைய நிலை மட்டுமே ரோபோட் படம் பற்றி வரும் சிறப்பான கருத்துக்கள் வரும் நாட்களில் சூப்பர் ஹிட் படம் ஹிந்தி ரோபோட் ஆகும்


கிச்சடி & பென்னி அண்ட் பப்லு சொல்லும் படி வியாபாரம் இல்லை

மிக பெரும்  கருத்து :
           எந்திரன் படம் தயாரிக்க முடியாமல் கைவிட்ட நிறுவனம் தயாரித்த படம் தான் இந்த அஞ்சானா அன்ஜானி பார்க்கலாம் ரோபோட்  ஹிந்தி மொழியில் செய்யும் சாதனைகளை

ndtv movies

 ஹிந்தி மொழியில் எந்திரன் (ரோபோட் )சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும்

மறக்காமல் படிப்பதுடன் உங்கள் வாக்கையும் இடவும்