Monday, December 7

சிரிக்க மறந்த திரையுலகம் 3

பழைய நகைச்சுவை படங்கள் ஒவ்வொன்றும் ஒரு முத்துக்கள் அவைகளில் முக்கியமானது

1941 வருடத்தில் வந்து இருந்தாலும் இன்றும் நகைச்சுவை படங்களில் முன்னிலையில் இருக்கும் படம் சபாபதி

டி ஆர் ராமசந்திரன் கதாநாயகனாக நடித்த முழு நீள நகைச்சுவை படம் காளி என் ரத்னம் என்று நகைச்சுவை சர வெடி இந்த படம்.
அதிலும் ராமசந்திரன் தன் வேலைக்காரன் ரத்னம் இடம் சோடா உடைத்து எடுத்து வா என்று சொல்லும் காட்சியில் ரத்னம் சோடா பாட்டிலை சுக்கு நூறாக உடைத்து எடுத்து வரும் காட்சி என்று படம் முழுக்க நகைச்சுவை காட்சி நிறைந்த எ வி எம் வழங்கிய பழைய படம்



எ வி மெய்யப்ப செட்டியார் தயாரித்து வழங்கிய படம் இது



  அடுத்த     வீட்டு பெண் இதுவும் டி ஆர் ராமசந்திரன் கதா நாயகனாக நடித்த படம் தங்க வேலு இப்படத்தில் தோழனாக வந்து படம் முழுக்க ஒரு நகைச்சுவை ஆவர்தனம் நடத்தி இருப்பார் அஞ்சலி தேவி கதாநாயகியாக நடித்து இருக்கும் இப்படத்தில் அஞ்சலி தேவி காதலிக்க ராமசந்திரன் செய்யும் ஒவ்வொரு செயலும் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்



தேன் நிலவு

ஜெமினி கணேசன் வைஜந்தி மாலா தங்க வேலு நடித்த முக்கியமான நகைச்சுவை படம்

காஸ்மீரில் படம் பிடிக்கப்பட்ட இந்த படம் சிறந்த பாடல்கள் சிறப்பான லோகேசன் மற்றும் நல்ல நகைச்சுவை நிறைந்த படம் என்றால் மிகை இல்லை

இது மட்டும் இல்லாமல் என் எஸ் கிருஷ்ணன் படங்கள் ஒரு புறம் என்று பழைய திரை உலகு சிரிப்பிற்கு ஆற்றிய சேவை சொல்லி மாளாது



கே பாலா சந்தர் 
பாமா விஜயம் எதிர் நீச்சல் பூவா தலையா தில்லு முள்ளு என்றும் பல படங்கள் சொல்லலாம்

கே பாலசந்தர் நகைச்சுவை படங்களுக்கு ஆற்றிய பங்கு சிறப்பானது அவரின் சோக படம் என்றாலும் அதில் லேசாக நகைச்சுவை வாசம் இருக்கும்

இது மட்டும் இல்லாமல் உத்தரவின்றி உள்ளே வா காதலிக்க நேரமில்லை ஹலோ பார்ட்னர் நான்கு கில்லாடிகள்.
என்று பழைய நகைச்சுவை படங்கள் பட்டியல் போட்டால் ஒரு ப்ளாக் பத்தாது.

அதிலும் நகைச்சுவை படத்திற்கு ஒரு தனி ட்ரேட் மார்க் ஸ்ரீதர் இவரின் படங்களில் நகைச்சுவைக்கு தனி இடமே இருக்கும்
அதிலும் தேன் நிலவு ஊட்டி வரை உறவு உத்தரவின்றி உள்ளே வா என்று பல படங்கள் சொல்லலாம் ,

இப்படி பழைய படஉலகம் நகைச்சுவைக்கு என்று தனி மரியாதை இருந்தது
நாகேஷ் ,சோ,தங்கவேலு ,என்று பல நடிகர்கள் ஒரே படத்தில் நடிக்க எந்த நிபந்தனை போட்டதில்லை நல்ல கதை மட்டுமே .அவர்களின் தேவையாக இருந்தது .

ஆனால் இன்று அப்படி இருப்பதில்லை அது கூட ஒரு காரணமாக இருக்கலாம்
இடைப்பட்ட காலங்களில் எஸ் வி சேகர் ,பாண்டியராஜன், மௌலி ,என்று ஒரு நகைச்சுவை இயக்குனர்கள் நடிகர்கள் இருந்தனர் .
அப்படி இப்போது இல்லாமல் போனதற்கு யார் காரணம் ?
மற்றும் என்ன தீர்வு அடுத்த பதிவில் ?








இயற்க்கை காப்போம் மரம் வளர்ப்போம் !!!!

முடியா விட்டால் செடியாவது வளர்ப்போம் !!!

ஊருகோர் மரம் வளர்ப்போர் சங்கம் வைப்போம் !!!

Wednesday, December 2

சிரிக்க மறந்த திரை உலகம் 2

தமிழ் திரை உலக பழைய வரலாற்றில் நகைச்சுவைக்கு ஒரு தனி பெரும் இடம் இருக்கும் அது காதல் படம் என்றாலும் சரி குடும்ப காவியம் என்றாலும் நகைச்சுவை என்ற பகுதியை தொடாமல் இருக்காது .அது பாமா விஜயம் என்றாலும் சரி ஆக்சன் ஹீரோ எம் ஜி ஆர் நடித்த அன்பே வா இருந்தாலும் நகைச்சுவைக்கு ஒரு தனி இடம் இருக்கும்

ஆனால் இன்றைய கால கட்டத்தில் நகைச்சுவை படம் என்றால் என்ன என்று கேட்கும் நிலையில் உள்ளது இதற்க்கு முக்கிய காரணம் என்ன ?
இன்றைய வெட்டி பந்தா நடிகர்கள் கூட காரணமாக இருக்கலாம்
அவர்களுக்கு தேவை ரசிகனை முட்டாள் ஆக்கும் சண்டை சூடேற்றும் ஆக்ரோஷ காட்சிகள் என்று தமிழ் ரசிகன் என்றால் நகைச்சுவைக்கு அப்பாற்பட்டவன் என்று நினைப்போ என்னவோ ?

 
கமல்  ஹாசன்
கமல் நகைச்சுவை  படத்திற்கு தரும் முக்கியத்துவம் பாராட்ட தக்கது
அவரின் மைகேல் மதன காமரசான்,அவ்வை சண்முகி ,பம்மல் கே சம்பந்தம் ,வசூல் ராஜ எம் பி பி எஸ் என பல படங்கள் சொல்லாம்
அவருடன் பணியாற்ற தனி கலைஞர்கள் ஒரு அமைப்பாக இருந்தது கிரேசிமோகன் சிங்கிதம் ஸ்ரீநிவாஸ் ராவ்
காலம் சென்ற நாகேஷ் என ஒரு குடும்பமாக இருந்தனர்
அனால் கமல் ஹாசன் கூட இப்போது அந்த நகைச்சுவை கூடாரத்தை விட்டு வெளியே வந்து விட்டாரோ என்று தோன்றுகிறது




ரஜினி
நிச்சயம் நகைச்சுவைக்கு மிகவும் முக்கியத்துவம் தருவார் அது அவரின் தனி பாணி ஆனதே அவரின் ஸ்டைல் கலந்த சண்டை மற்றும் நகைச்சுவை ஒரு காரணம் .
ஆரம்ப கால ரஜினி படங்களில் சொல்லும் படியான நகைச்சுவை படம் என்றால் தில்லு முல்லு படத்தை சொல்லலாம


சத்யராஜ்
அன்று முதல் இன்றுவரை நக்கல் லொள்ளு நகைச்சுவை என்றால் தனி இடத்தை தனக்கென வைத்து இருப்பவர் சத்யராஜ் அதுவும் சத்யராஜ் அவருக்கென தனி கூட்டணி இருந்தது கவுண்ட மணி சத்யராஜ் என்றாலே அது ஒரு நகைச்சுவை மகா மகம் தான் ,மணிவண்ணன் ,சுந்தர் ராஜன் என்று சத்யராஜ் என்று ஒரு நகைச்சுவை கூட்டணி உள்ளது. இவரின் நடிகன் ,பிரம்மா ,மாமன் மகள் ,பங்காளி ,நகைச்சுவை க்கு தனி முக்கியத்துவம் கொடுத்த படம்




கார்த்திக்
இவரின் படங்களின் சொல்லும் படியான படம் உள்ளதை அள்ளித்தா மேட்டுக்குடி என்று பல படம் சொல்லலாம் ,அதுவும் கவுண்ட மணி கூட்டணி என்றால் படம் முழுக்க தனி நகைச்சுவை ஆவர்த்தனம் நடக்கும்
கே பாக்யராஜ்
நகைச்சுவையுடன் தனி திரைகதை அமைப்பில் இந்திய முழுவது பெரும் வெற்றி பெற்றவர் இவர் ஒருவர் மட்டுமே

அதிலும் இன்று போய் நாளை எதனை முறை பார்த்தாலும் புது படமாக தெரியும் வண்ணம் நகைச்சுவை சரவெடி
இந்த படம் முந்தானை முடிச்சு தாவணி கனவுகள் ,எங்க சின்ன ராசா ,என்று அவர் எடுத்த எல்லா படமும் நகைச்சுவை கலந்த படமாக இருக்கும்


விஜய் காந்த அவர் படத்தில் நகைச்சுவை காட்சிகள் இருக்கும்
ஆனால் சொல்லும் படி இருக்காது நானே ராஜா நானே மந்திரி தவிர



நகைச்சுவை படமும் இயக்குனர்களும் அடுத்த பதிவில்

கே.பாலா சந்தர் ,ஸ்ரீதர் ,கோபு ,நாகேஷ், சோ, மற்றும் காலத்தால் அளிக்க முடியாத படத்தை அளித்தவர்கள் பற்றி அடுத்தபதிவில்





Tuesday, December 1

சிரிக்க மறந்த திரை உலகம் 1

இது ஒன்றும் சிரிக்கிற விஷயம் இல்லை சிரிக்காமல் போன தமிழ் திரை உலகை பற்றி ஒரு கருத்து மட்டுமே

முழு நீள நகைச்சுவை படம் மறக்காமல் பாருங்கள் என்ற வார்த்தை கேட்டு எத்தனை ஆண்டு ஆகி விட்டது .

தமிழ் திரை உலகம் எப்போது இந்த பாழா போன வெட்டி பந்தா மற்றும் வீண் பிரமாண்டங்கள் பின் போனதோ அன்றே தமிழ் திரை உலகின் சோக காலம் உண்டானது .

முன்பு எல்லாம் பாத்து படம் வந்தால் அதில் இரண்டு படம் நகைச்சுவை படமாக இருக்கும் ஆனால் இன்றைய நிலைமை அப்படி இல்லை இன்று வரும் புது நடிகர் கூட தனக்கு ஒரு ஓபனிங் பாட்டு அநியாயத்தை தட்டி கேட்கும் ஆக்ரோஷ கதாபாத்திரம் .இரண்டு படம் வந்த உடன் புரட்சி  பட்டம் என்ற வட்டத்திற்குள் ஓடியது கூட ஒரு முக்கிய காரணம்

அது இல்லை என்றல் சைகோ கதைகள் பழிவாங்கும் கதைகள் என்று ஒரு குப்பை ஓடினால் அதை போன்றே பத்து குப்பைகள் வந்தால் ஒரு சராசரி ரசிகன் இந்த உருப்படாத கதைகளை எத்தனை முறை பார்ப்பான்.
முதலின் ஹீரோ தோற்பதும் இடைவேளைக்கு பின் ஹீரோ வெற்றி பெறுவது எத்தனை படத்தில் பார்ப்பது

முதலின் பார்க்கும் பொது யாருக்கும் ஆர்வம் இருக்கும் மீண்டும் மீண்டும் பார்ப்பார்கள் ஆனால் இதே புளித்து போன கதைகளை யாரும் மீண்டும் பார்க்க மாட்டார்கள்
அதற்க்கு பெரும் எடுத்துக்காட்டு குருவி ,ஜனா ,அழகிய தமிழ் மகன் ,தோரணை ,சத்யம் ,வில்லு ,என்று எத்தனை படங்கள் சொல்லலாம் .

கடந்து சென்ற சில ஆண்டில் எத்தனை நகைச்சுவை படங்கள் வந்தன ?
விரல் விட்டு எண்ணி விடலாம் "பொய் சொல்ல போறோம் " திரு திரு துரு துரு "அதிலும் மிகவும் முக்கியமான ஒரே ஒரு படம் "இம்சை அரசன் 23 புலிகேசி " இதை தவிர சொல்லும் படி எத்தனை படங்கள் வந்தன




மற்ற படத்திற்கும் நகைச்சவை படத்திற்கும் உள்ள வித்தியாசம் நகைச்சுவை படத்தை எத்தனை முறை பார்த்தாலும் புது படத்தை பார்த்ததை போன்று இருக்கும் மனதிற்கும் ஆறுதல் அளிக்கும் .
ஒரு காலத்தில் நகைச்சுவை படத்திற்கு பெயர் போன தமிழ் திரை உலகம் இன்று சிரிக்க மறக்க காரணம் என்ன நல்ல நகைச்சுவை நடிகர் இல்லையா அல்லது நல்ல இயக்குனர் இல்லையா





இதற்க்கு யார் காரணம் இயக்குனரா ?நடிகரா ?மக்களா ? மீடியா உலகமா ?
இதை பற்றி அடுத்த பதிவில் ஏதும் உங்கள் கருத்து மறக்காமல் தெரிவிக்கவும் ?










இயற்க்கை காப்போம் மரம் வளர்ப்போம் !!!!


முடியா விட்டால் செடியாவது வளர்ப்போம் !!!

ஊருகோர் மரம் வளர்ப்போர் சங்கம் வைப்போம் !!!