Wednesday, April 21

செய்தியும் கோணமும் சினிமா செய்திகள்

கமல் ஹாசன் "யாவரும் கேளிர்" பெயர் மாற்றம் "காருண்யம் "
 

  கமல் ஹாசன் த்ரிஷா இனைந்து நடிக்க உதயநிதி ஸ்டாலின்  தயாரிக்க  கே எஸ் ரவிக்குமார் இயக்கும் இப்படத்தின் பெயர் காருண்யம் என மாற்றப்படுகிறது

    எது எப்படியோ கமல் ரவிக்குமார் என்றால் நூறு சதம் காமெடி என்பதை மட்டும் மாற்றாமல் ஒரு நல்ல நகைச்சுவை படமாக கொடுத்தால் சந்தோஷம் (பம்மல் கே சம்பந்தம் ,தெனாலி,பஞ்ச தந்திரம் படங்களை போல )

தயாநிதி அழகிரி  தயாரிக்கும் மல்டி ஹீரோ படம் 

 

                தமிழ் திரை உலகில் ஒரு காலத்தில் இருந்த இப்போது இருக்கும் பந்த நடிகர்களால் இல்லாமல் போன ஹிந்தி மொழியில் இப்போதும் ஹிட் தரும் மல்டி ஹீரோக்கள் நடிக்கும் படம் போல தமிழிலும் தயாரிக்கும் முயற்சியில் தயாநிதி இறங்கி உள்ளார் . இந்த முயற்சிக்கு ஆதரவு தர போகும் பிரபல நடிகர்கள் யார் என்று தெரியவில்லை
  இருந்த போதும் பாரட்ட வேண்டிய விஷயம் ஒரு காலத்தில் ரஜினி கமல் பாகுபாடு இல்லாமல் நடித்தது போல இப்போது  யார் வர போகிறார் என்று பார்க்கலாம்  (தமிழ்ப்படம் எடுத்து ஒரு எதிர்ப்பும் இல்லாமல் வெற்றி படம் கொடுத்தவர் அதே போல மீண்டும் வெற்றி தருவார் என எதிர்பார்க்கலாம் )

  IIFA திரை விழாவும் தமிழ் திரை கலைஞர்களும் 

 

          உலகம் முழுவதும் நடத்தப்படும்  IIFA திரை விருது விழ இந்த ஆண்டு இலங்கையில் அமைதி திரும்பி விட்ட காரணத்தால்  இந்த ஆண்டு இலங்கையில் நடத்தபடுகிறது .இந்த விழாவில் கலந்து கொள்ள தமிழ் திரை உலகில் உள்ள பிரபல திரை கலைஞர்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது .ஆனால் இந்த விழாவில் கலந்து கொண்டால் உலகம் முழுவதும் உள்ள இலங்கை தமிழ் மக்கள் தங்கள் படத்தை புறகனிப்பார்களோ என்ற பயத்தில் தமிழ் திரை கலைஞர்கள் கலந்து கொள்ள தயக்கம் காட்டுகிறார்கள் ( முக்கிய நேரத்தில் கை கழுவி விட்டு இப்போ என்ன தயக்கம் )

சென்னை பாக்ஸ் ஆபீஸ் 

 

சென்னை பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்
ஏப்ரல் 16 முதல் ஏப்ரல் 18 வரை 

3 விண்ணை தாண்டி வருவாயா

  விண்ணை தாண்டி வருவாயா ஏழு வார முடிவில் 5 .46 கோடி வசூலுடன் மூன்றாம்  இடத்தில உள்ளது
2 அங்காடி தெரு
 
சிறப்பான கதை களம் நல்ல திரை கதையுடன் வந்த இப்படம் மூன்று வார  முடிவில் ரூ 1 .20 கோடி வசூலித்து இரண்டாம்  இடத்தில உள்ளது
1 பையா
  IPL
ஐ   போய்யா  என்று சொல்லி இந்த படம் வெற்றி படமாக மாற காரணம் பழகிய கதை என்றாலும் சோர்வு இல்லாத திரை கதை மற்றும் யுவனின் இசை மட்டுமே இரண்டு வார முடிவில் ரூ 3 .22 கோடி வசூலித்து வெற்றி படமாக மாறி உள்ளது 




"காதல் பைத்தியங்கள்" கதை படித்து மனதிற்குள் திட்டிய/பாராட்டிய அனைத்து  நல்ல உள்ளங்களுக்கும் நன்றி 

1 comment:

  1. @தாத்தா
    உங்க வருகைக்கு நன்றி

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை